உள்ளடக்கத்துக்குச் செல்

பீகாரிலுள்ள இராஜபுத்திரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீகாரில் உள்ள இராஜபுத்திரர்கள் (Rajputs in Bihar) இந்திய மாநிலமான பீகாரில் வசிக்கும் இராஜபுத்திரச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாபு சாகேப் என்று பிரபலமாக அறியப்படுகிறார்கள். இவர்கள் முக்கியமாக பீகார், உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி, [1] மற்றும் சார்க்கண்டு ஆகிய இடங்களில் பரவியுள்ளனர். இவர்கள் பாரம்பரியமாக பீகாரி சமூகத்தில் நிலப்பிரபுத்துவ உயரடுக்கின் ஒரு பகுதியை உருவாக்கினர். [2][3] [4][5] சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் ஜமீந்தாரி ஒழிப்பு மற்றும் நிலக்கொடை இயக்கத்தால் இராஜபுத்திரர்கள் அழுத்தப்பட்டனர்; மற்ற முற்போக்கு சாதியினருடன் சேர்ந்து, அவர்கள் பீகாரின் விவசாய சமூகத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை இழந்தனர். இது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எழுச்சிக்கு வழிவகுத்தது.

வரலாறு

[தொகு]

கி.பி. 1200 முதல், பல இராஜபுத்திர குழுக்கள் கிழக்கு நோக்கி சிந்து-கங்கைச் சமவெளிகளை நோக்கி நகர்ந்து, தங்கள் சொந்த ஆட்சிப் பகுதிகளை உருவாக்கினர்.[6] இந்த சிறிய இராஜபுத்திர இராச்சியங்கள் இன்றைய உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரின் கங்கை சமவெளிகளில் சிதறிக் கிடந்தன.[7] இந்த செயல்பாட்டின் போது, பூர்வீக மக்களுடன் சிறிய மோதல்கள் ஏற்பட்டன. சில சந்தர்ப்பங்களில், கூட்டணிகள் உருவாக்கப்பட்டன.[6] இந்த இராஜபுத்திர தலைவர்களில் போஜ்பூர் ஜமீந்தார்கள் மற்றும் அவத் வட்டங்களும் இருந்தன.[8][9]

கங்கை சமவெளியின் இந்தப் பகுதிகளுக்குள் இராஜபுத்திர குலத் தலைவர்கள் குடிபெயர்ந்ததும் முன்பு காடுகளாக இருந்த பகுதிகளில், குறிப்பாக தெற்கு பீகாரில் விவசாயப் பணிகள் மேம்பட்டன.[10] சில வரலாற்றாசிரியர்கள் இந்த கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை மேற்கில் கோரிகளின் படையெடுப்பு தொடங்கியதோடு இணைத்துள்ளனர்.[10]

இந்த குழுக்களில் பரமார இராஜ்புத்திரர்களின் உஜ்ஜெனியா குலமும் அடங்கும்.[11] அதே குலத்தைச் சேர்ந்த கஜபதி உஜ்ஜைனியா சேர் சா சூரியின் இராணுவத்தில் ஒரு தலைவராகவும் தளபதியாகவும் இருந்தார்.[12] 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், போஜ்பூர் மாவட்டத்தின் இராஜபுத்திர ஜமீந்தார் குன்வர் திர் கிளர்ச்சி செய்து முகலாயப் பேரரசை எதிராகப் போராடினார்.[13]

இடைக்காலத்தில், பீகார் பகுதிக்கு குடியேறிய இராஜபுத்திரர்கள் கிதௌர், தேவ், நமுதக் மற்றும் கரக்பூர் போன்ற இராசியங்களை நிறுவினர்.[14] அதே காலகட்டத்தில், காந்தவரியா இராஜபுத்திரக் குலத்தினர் வடக்கு பீகாரின் குறிப்பிடத்தக்க பகுதியை கட்டுப்படுத்தினர்.[15] சோன்பர்சா அரசும் இந்த குலத்தைச் சேர்ந்தவர்.[16] இந்த இந்து இளவரசர்களுக்கு இந்த வலுவான குல அமைப்புதான் அவர்களுக்கு வெற்றியைக் கொண்டுவந்தது.[17]

16ஆம் நூற்றாண்டிலிருந்து, பீகார் மற்றும் அவத் ஆகிய பகுதிகளின் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த இராஜபுத்திர வீரர்கள் மேற்கில், குறிப்பாக மால்வா பிராந்தியத்தில் உள்ள இராஜபுத்திரர்களுக்கு கூலிப்படையினராக நியமிக்கப்பட்டனர்.[18][19][20] 1857 ஆம் ஆண்டின் பெரும் எழுச்சியின் போது, பீகாரில் புரட்சியின் முக்கிய தலைவராக இருந்த குன்வர் சிங் தலைமையில் இராஜபுத்திரர்களில் ஒரு பகுதியினர் பங்கேற்றனர்.[21]

குன்வர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள், ஜகதீஷ்பூர் இராச்சியம்

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பீகாரின் பாரம்பரிய விவசாய சமூகத்தில், ஜமீந்தாரி உரிமைகள் மூலம் விவசாய உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் உயர் சாதியினரில் இராஜபுத்திரர்களும் அடங்குவர். சில உயர் சாதியினரும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கீழ் கீழ் மட்ட நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்டனர். பிற உயர் சாதியினரின் குறைந்த கல்வியறிவு பெற்றவர்களான இராஜபுத்திரர்கள், பொது நிர்வாகத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட பங்கை வகித்தனர். மேலும் அவர்கள் முதன்மையாக சொத்து வைத்திருப்பவர்களாக இருந்தனர்.[22] 1900 மற்றும் 1920 க்கு இடையில், தெற்கு பீகாரின் சில பகுதிகளின் மக்கள்தொகையில் இராஜபுத்திரர்கள் பெரும்பகுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜபுத்திரர்கள் முக்கியமானவர்களாக இருந்த ஷாஹாபாத் பிராந்தியத்தில், அவர்கள் அறிவுசார் முயற்சிகளில் சிறிதளவேனும் ஆர்வம் காட்டவில்லை. இப்பகுதி மற்றும் ஒட்டுமொத்த பீகாரின் கல்வியறிவு விகிதமும் ஆபத்தான நிலையில் இருந்தது.[23]

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், ஜமீந்தாரி ஒழிப்பு மற்றும் நிலக்கொடை இயக்கத்தின் அழுத்தத்தால், இராஜ்புத்துகளும் பிற உயர் சாதியினரும் பீகாரின் விவசாய சமூகத்தில் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர்.[24][25]

தற்போதைய சூழ்நிலைகள்

[தொகு]

நவீன காலங்களில் பீகாரின் இராஜ்புத்திரர்கள் சமூக ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் பீகாரின் சட்டமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.[26] பீகாரில் இருந்து மக்களவையிலும் மற்றும் மாநிலங்களைவியிலும் இச்சமூகத்தினர் அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.[27][28]

குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]
  • ஹரிஹர் சிங்-பீகாரின் 9வது முதலமைச்சர்.[29]
  • குன்வர் சிங்-1857 ஆம் ஆண்டு இந்திய கிளர்ச்சியில் பங்கேற்ற ஜமீந்தார் மற்றும் இராணுவத் தளபதி[30]
  • பீஷ்ம நாராயண் சிங்-நாமுதக் மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றும் அசாமின் முன்னாள் ஆளுநராக இருந்தார்.
  • அனுக்ரா நாராயண் சின்கா-இந்திய தேசியவாத அரசியல்வாதி [4]பீகார் [31]
  • ராஜா நரேன் சிங்-ஔரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.[32]
  • கஜபதி உஜ்ஜைனியா-சேர் சா சூரி கீழ் சூர் பேரரசின் இராணுவத் தளபதி.[33]
  • பாட்னா மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே. பி. என். சிங், பீகாரின் பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றினார்.[34]
  • கமல் சிங்-தும்ரான் ராஜாவின் கடைசி மகாராஜா (உஜ்ஜைனியா ராஜ்புத்) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்.[35]
  • திக்விஜய் சிங்-கிதௌர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், பல முறை மத்திய அமைச்சராக இருந்தவர்.[36]
  • ராஜ்குமார் சிங்-மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்.[37]
  • மல்கன் சிங்-ஜம்சேத்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.[38]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shahid Amin. Event, Metaphor, Memory: Chauri Chaura, 1922-1992. p. 130.
  2. Hira Singh. Recasting Caste: From the Sacred to the Profane. p. 4.
  3. Henry C. Hart. Indira Gandhi's India.
  4. Carolyn Brown Heinz. The Modern Anthropology of India: Ethnography, Themes and Theory.
  5. Seyed Hossein Zarhani. Governance and Development in India: A Comparative Study on Andhra Pradesh and Bihar after Liberalization. pp. 183, 210.
  6. 6.0 6.1 C. A. Bayly (19 May 1988). Rulers, Townsmen and Bazaars: North Indian Society in the Age of British Expansion, 1770–1870. CUP Archive. pp. 18–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-31054-3.
  7. Barbara N. Ramusack (8 January 2004). The Indian Princes and their States. Cambridge University Press. pp. 14–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-44908-3.
  8. Kumkum Chatterjee (1996). Merchants, Politics, and Society in Early Modern India: Bihar, 1733–1820. BRILL. pp. 35–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10303-1.
  9. Richard Gabriel Fox (1971). Kin, Clan, Raja, and Rule: Statehinterland Relations in Preindustrial India. University of California Press. pp. 68–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-01807-5.
  10. 10.0 10.1 Gyan Prakash (30 October 2003). Bonded Histories: Genealogies of Labor Servitude in Colonial India. Cambridge University Press. pp. 64–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-52658-6.
  11. Ahmad, Imtiaz (2008). "State Formation and Consolidation under the Ujjainiya Rajputs in Medieval Bihar: Testimony of Oral Traditions as Recorded in the Tawarikh-i-Ujjainiya". In Singh, Surinder; Gaur, I. D. (eds.). Popular Literature And Pre-Modern Societies In South Asia. Pearson Education India. pp. 76–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1358-7. பார்க்கப்பட்ட நாள் 2 January 2012.
  12. Singh, Surinder; Gaur, I. D. (2008). Popular Literature and Pre-modern Societies in South Asia (in ஆங்கிலம்). Pearson Education India. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1358-7.
  13. Rizavī, Saiyada Najamula Razā (2004). Zamindars and Revenue Farmers of Eastern Uttar Pradesh: From Mughal to Colonial Rule (in ஆங்கிலம்). Anamika Pub & Distributors. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7975-053-7.
  14. Prakash, Gyan (2003-10-30). Bonded Histories: Genealogies of Labor Servitude in Colonial India (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-52658-6.
  15. Radhakrishna Choudhary. "Mithila In The Age Of Vidyapati". Chaukhambha Orientalia. pp. 131–132. பார்க்கப்பட்ட நாள் 14 January 2019.
  16. Bhagwant Sahai (1984). The Journal Of The Bihar Puravid Parisad 1983 Vol. Vii And Viii. pp. 414, 418.
  17. Bayly, C.A. (2012). Rulers, Townsmen and Bazaars: North Indian Society in the Age of British Expansion 1770-1870. p. 18.
  18. Farooqui, Amar (2007). "The Subjugation of the Sindia State". In Ernst, Waltraud; Pati, Biswamoy (eds.). India's Princely States: People, Princes and Colonialism. Routledge. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-11988-2.
  19. Dirk H. A. Kolff (1990). Naukar, Rajput, and Sepoy. Cambridge University Press. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-52305-9.
  20. Jadunath Sarkar (1960). Military History of India. Orient Longmans(Original from the University of Virginia). pp. 56–61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780861251551. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
  21. Thomas R. Metcalf (2015). Aftermath of Revolt: India 1857-1970. Princeton University Press. p. 299. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1400876648. பார்க்கப்பட்ட நாள் 28 May 2022.
  22. Bindeshwar Ram (1997). Land and Society in India: Agrarian Relations in Colonial North Bihar. Orient Blackswan. pp. 12–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8125006435.
  23. Shreedhar Narayan Pandey (1975). Education and Social Changes in Bihar, 1900-1921: A Survey of Social History of Bihar from Lord Curzon to Noncooperation Movement. Motilal Banarsidass. pp. 11–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0842609865. பார்க்கப்பட்ட நாள் 2020-12-22.
  24. Nira Yuval-Davis; Kalpana Kannabiran; Ulrike Vieten (2006). The Situated Politics of Belonging. SAGE. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1412921015. பார்க்கப்பட்ட நாள் 27 May 2022.
  25. Ranabir Samaddar (3 March 2016). Government of Peace: Social Governance, Security and the Problematic of Peace. Routledge. pp. 168–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-12538-9.
  26. "Composition of Bihar assembly". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
  27. "Members of Parliament from Bihar". News18. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
  28. Kalaiyarasan A (ed.). "Lower castes in Bihar have got political power, not economic progress". Indian Express. Archived from the original on 22 January 2021. பார்க்கப்பட்ட நாள் 22 January 2021. {{cite web}}: Missing |editor1= (help)
  29. Narain, Jai Prakash; Narayan, Jayaprakash (1980). A Revolutionary's Quest: Selected Writings of Jayaprakash Narayan (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-561204-2.
  30. Hartwell, Nicole (2021). "Framing colonial war loot: The 'captured' spolia opima of Kunwar Singh". Journal of the History of Collections. doi:10.1093/jhc/fhab042. 
  31. F. Tomasson Jannuzi (2014). Agrarian Crisis in India: The Case of Bihar. University of Texas Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781477300145. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.
  32. Paramita Maharatna (2012). "The Zamindars of Bihar: Their Resistance to Colonial Rule Between 1765-1781". Proceedings of the Indian History Congress 73: 1435. 
  33. Ansari, Tahir Hussain (2014). "A Political Biography of an Ujjainia Chief of Bhojpur: Raja Gajpati". Karatoya 7: 40–48. http://ir.nbu.ac.in/handle/123456789/3840. 
  34. "B N Collegiate School has to live with dirt". 2002-01-06. https://timesofindia.indiatimes.com/city/patna/b-n-collegiate-school-has-to-live-with-dirt/articleshow/1952875399.cms. 
  35. "Maharaja Kamal Singh, last surviving member of first Lok Sabha, passes away at 94". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  36. "Vasundhara visits Gidhaur, mourns Digvijay | Patna News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Jul 3, 2010. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  37. "Who is Raj Kumar Singh?". The Indian Express (in ஆங்கிலம்). 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  38. "Heavyweight ticket aspirants put JMM in a fix in Jamshedpur - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.