உணவுப் பழக்க வழக்க முறைகள்
உணவுப் பழக்கவழக்க முறைகள் (Table manners) என்பது உணவு உண்ணும் போது பயன்படுத்தப்படும் நடத்தை நெறிகளைக் குறிப்பதாகும். இதில் பாத்திரங்களின் பயன்பாடும் அடங்கும். உணவுப் பழக்கவழக்கங்களுக்கு வெவ்வேறு கலாச்சாரங்கள் கடைப்பிடிக்கின்றன. ஒவ்வொரு குடும்பமும் அல்லது குழுவும் இந்த விதிகளை எவ்வளவு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதற்கான அளவுகோல்களை அவர்களே நிர்ணயிக்கின்றனர்.
மேற்கு ஐரோப்பா (இலண்டன் உட்பட)
[தொகு]பாரம்பரியமாக மேற்கு ஐரோப்பாவில், விருந்தளிப்பவர் முதன்முதலாக சுவைத்துப் பார்க்கிறார் (அவர் வேறு ஏதேனும் அறிவுறுத்தாத வரையில்). [1] [2] அனைத்து உணவுகளும் பரிமாறப்பட்டு, அனைவரும் அமர்ந்த பிறகு விருந்தளிப்பவர் உண்ணத் துவங்குகிறார். மதம் சார்ந்து குடும்பமாக உணவு உண்ணும் போது மந்திரங்கள் சொல்வதன் மூலம் உணவு உண்ண ஆரம்பிக்கலாம் அல்லது விருந்தளிப்பவர்களைப் பற்றி பாராட்டிய பின்னர் உணவு உண்ணத் துவங்கலாம். குழுவாக உணவு உண்ணத் துவங்கும் போது அனைவருக்கும் பரிமாறும் முன்னர் ஒருவர் சாப்பிடத் துவங்குவது அநாகரிகமாக கருதப்படுகிறது.
உண்மடிகளை மடியில் வைக்க வேண்டும், ஆடைக்குள் மாட்டக்கூடாது. ஒருவரின் வாயைத் துடைப்பதைத் தவிர வேறு எதற்கும் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது, மேலும் ஒருவரது நாற்காலியின் இருக்கையின் மீது விரித்து வைக்கப்பட வேண்டும், ஒருவர் உணவு உண்ணும் வரை மேசையின் மீது மடித்து வைக்கப்பட வைக்க வேண்டும். [3]
இந்தியா
[தொகு]பரவலாக, விருந்தினர்கள் உணவைத் தொடங்குமாறு விருந்தாளி அறிவுறுத்துகிறார். பொதுவாக, விருந்தளிப்பவர் அல்லது மூத்த நபர் தனது உணவை முடிப்பதற்கு முன்பு ஒருவர் மேசையை விட்டு வெளியேறக்கூடாது. விருந்தினரின் அல்லது பெரியவரின் அனுமதியைக் கேட்காமல் மேசையை விட்டு வெளியேறுவதும் அநாகரீகமாகக் கருதப்படுகிறது. பொதுவாக யார் முதலில் முடித்தாலும் மற்றவர்களுக்காகக் காத்திருப்பார்கள், அனைவரும் உணவு உண்ட பிறகு அனைவரும் மேசையை விட்டு வெளியேறுவார்கள். [4]
பாரம்பரிய இந்திய உணவு அமைப்பில், பின்வருபவை காணப்படுகின்றன.
பொதுவாக தட்டில் அனைத்து உணவுப் பொருட்களும் சிறிய அளவில் வழங்கப்படும்.
உணவு உண்ணும் போது அல்லது உணவைப் பெறும்போது வலது கையைப் பயன்படுத்துவதே சரியான நெறிமுறையாகப் பார்க்கப்படுகிறது. உண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும் எந்தவொரு பாத்திரங்களையும் உணவு உண்ணும் கையால் தொடுவது பொருத்தமற்றது. சாப்பிடுவதற்கு வலது கை பயன்படுத்தினால், இடது கை மூலமாகப் பரிமாற வேண்டும். [5] மேசையில் அமர்வதற்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் கைகளைக் க���ுவுவது அவசியமானதாகும். [6]
ஒரு நேரத்தில் சிறிய அளவு உணவு எடுத்துக் கொள்ளப்படுவதன் மூலம் உணவு வீணாகாமல் இருப்பதை உறுதி செய்கிறது. பரிமாறப்படும் உணவுக்கு மதிப்பளித்து தட்டில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருளையும் சாப்பிட்டு முடிப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. [7] பாரம்பரியமாக, உப்பையோ, மிளகாயையோ கேட்காமல், உணவைப் பரிமாறியபடியே உண்ண வேண்டும். இருப்பினும், உப்பு அல்லது மிளகுக்கான தனிப்பட்ட விருப்பத்தை வெளிப்படுத்துவதும் அதைக் கேட்பதும் இப்போது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது.
உணவைச் சிதைப்பது அல்லது விளையாடுவது ஏற்றுக்கொள்ள இயலாதது. மிதமான வேகத்தில் சாப்பிடுவது முக்கியம், மிக மெதுவாக சாப்பிடுவது உணவை விரும்பாததைக் குறிக்கலாம் மற்றும் மிக விரைவாக சாப்பிடுவது முரட்டுத்தனமாகக் கருதப்படலாம். பொதுவாக,உணவகத்தில் இருக்கும் போது மற்றொருவரின் தட்டைப் பார்ப்பது தவறானதாகக் கருதப்படுகிறது. மெல்லும்போது ஒலி எழுப்புவது பொருத்தமற்றது. சில இந்திய உணவுப் பொருட்கள் ஒலியை உருவாக்கலாம், எனவே வாயை மூடி மிதமான வேகத்தில் மெல்லுவது அவசியம்.
கவனச்சிதறல் அல்லது முரட்டுத்தனத்தைக் குறிக்கும் குறிப்பிட்ட நடத்தைகளுக்கு உணவு உண்ணும் போது கவனம் செலுத்தப்பட வேண்டும். சாப்பிடும் போதும், பெரியவர்கள் இருக்கும் போதும் செல்பேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, செய்திகளை அனுப்புவது மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகம் ஆகியன பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ Halpern, Georges M. "Table Manners Matter" (PDF).
- ↑ Meakin, Eunice (2003). "Dinner is served: an etiquette guide". Washington State University Library.
- ↑ "Eating Food - Manners and Etiquette". Projectbritain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-11.
- ↑ "Indian Table Manners". lifestyle.iloveindia.com.
- ↑ [1] பரணிடப்பட்டது ஏப்பிரல் 26, 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ [2] பரணிடப்பட்டது அக்டோபர் 19, 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ [3] பரணிடப்பட்டது அக்டோபர் 19, 2011 at the வந்தவழி இயந்திரம்