உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டெறியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோட்ஸ் , ஜெருசலேமின் செயிண்ட் ஜானின் குதிரைப்படை வீரர்ககுண்டெறியம் கணையெக்கி மற்றும் கருங்கல் குண்டு எறிபொருள், 1480 – 1500. பியர் டி ஆபுசனின் வேண்டுகோளின் பேரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டெறியமானது ரோட்ஸ் முற்றுகையில் சுவர்களை (100 – 200 மீட்டர்) நெருக்கமான வலுவெதிர்ப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. இது 260 கிலோ கருங்கல் குண்டுகளை வீசியது. இந்தக் குண்டெறியம் சுமார் 3,325 கிலோ எடை கொண்டது. மியூசி டி எல் ஆர்மி .

  குண்டெறியம் (Bombard) என்பது ஒரு வகை தெறுவேயம் அல்லது கணையெக்கி ஆகும், இது இடைக்காலம் மற்றும் புத்தியல் காலத்தின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது. குண்டெறியங்கள் முக்கியமாக பெரிய குழல்விட்டம் கொண்ட, முகவாய் தாணிக்கும் சேணேவித் துண்டுகளாக இருந்த��, அவை எதிரிகளின் கோட்டைகளின் சுவர்களில் வட்டக் கல் எறிபொருள்களைச் சுட பயன்படுத்தப்பட்டன, படையினரை உடைக்க உதவியது. பெரும்பாலான குண்டெறியங்கள் இரும்பினால் செய்யப்பட்டன மற்றும் எறிபொருள்களைச் சுட வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன. மோன்சு மெக், மா துருக்கி குண்டெறியம் மற்றும் கை-குண்டெறியம்  உள்ளிட்ட குண்டெறியங்களுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

இந்த ஆயுதம் இரோயல் சேணேவியின் தரநிலையின் Bombardier (குண்டெறிஞர்) இற்கான பெயரையும் bombardment (குண்டுவீசுகை) என்ற சொல்லையும் வழங்கியது.

சொற்கூறு

[தொகு]

"bombard" என்ற சொல் முதன்முதலில் 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை எந்த வகையான சுடுகலன்களையும் விரித்துரைக்கப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் பின்னர் இது 14 முதல் 15 ஆம் நூற்றாண்டுகளில் பெரிய தெறுவேயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. [1] பெரிய பீரங்கிகளுடனும் அதன் வலுவான தொடர்பு இருந்தபோதிலும், குண்டெறியங்களுக்கு செந்தரப்படுத்தப்பட்ட அளவு இல்லை, மேலும் இந்த சொல்லானது ஒரு மீட்டர் நீளம் மற்றும் பல மீட்டர் நீளமுள்ள 20 தொன் வரை எடையுள்ள தெறுவேயங்களுக்கும் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. [2]

சொற்பிறப்பியல்

[தொகு]

இதற்காண தமிழ்ச்சொல்லான 'குண்டெறியம்' என்பது மூன்று சொற்களால் - குண்டு + எறி + அம் - உருவான ஒரு கூட்டுச் சொல்லாகும். குண்டு - குண்டான உருண்டை; எறி - எறிதல்; அம் - ஒரு கருவிப்பொருளீறு. இது பெரும்பாலும் பெரியது என்னும் பொருளினை உணர்த்தும் . மொத்தமாக, ஒரு குண்டினை எறியும் படைக்கலம் என்னும் பொருளில் தமிழில் வருகிறது.

காட்சிக்கூடம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  •  இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Bombard". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  • Andrade, Tonio (2016), The Gunpowder Age: China, Military Innovation, and the Rise of the West in World History, Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-13597-7.
  • DeVries, Kelly (2012), Medieval Military Technology
  • Sands, Kathleen. "Though One Of The Best-Documented Of Medieval Bombards, Mons Meg Was The Subject Of Exaggeration And Legend." Military History 16.3 (1999): 22.
  • Lu Gwei-Djen, Joseph Needham and Phan Chi-Hsing. Technology and Culture, Vol. 29, No. 3 (Jul., 1988), pp. 594–605
  • W. H. Finlayson. The Scottish Historical Review, Vol. 27, No. 104, Part 2 (Oct., 1948), pp. 124–126
  • Cvikel, Deborah, and Haim Goren. "Where Are Bonaparte's Siege Cannon? An Episode In The Egyptian Campaign." Mediterranean Historical Review 23.2 (2008): 129–142.

மேலும் படிக்க

[தொகு]
  1. Andrade 2016, ப. 83.
  2. DeVries 2012, ப. 155.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டெறியம்&oldid=3394528" இலிருந்து மீள்விக்கப்பட்டது