பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa),[2] பாரசீக மொழி: تخت جمشيد Takht-e Jamshid அல்லது پارسه பார்சே [Pārseh], "பாரசீகர்களின் நகர்" எனப் பொருள்படும்[3]) என்பது அகாமனிசியப் பேரரசின் சடங்குக்குரிய தலைநகரமாக (சுமார் கி.மு. 550–330) விளங்கியது. பெர்சப்பொலிஸ் ஈரானிய பார்ஸ் மாகாணத்தில் உள்ள சிராஸ் நகரிலிருந்து 60 km தூரம் வடகிழக்கில் அமைந்துள்ளது. ஆரம்ப பெர்சப்பொலிஸ் இடிபாடுகள் கி.மு. 515 ஆம் ஆண்டு காலத்துக்குரியன. இது அகாமனிசியப் பாணி கட்டடக்கலையின் முன்மாதிர���யாக உள்ளது. 1979 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பெர்சப்பொலிஸ் இடிபாடுகளை உலகப் பாரம்பரியக் களம் என அறிவித்தது.[4]

பெர்சப்பொலிஸ்
پرسپولیس
அகாமனிசியப் பேரரசு அரசர்களின் அரச அரண்மனை
பெர்சப்பொலிஸ் is located in ஈரான்
பெர்சப்பொலிஸ்
Shown within Iran
இருப்பிடம்பார்ஸ் மாகாணம், ஈரான்[1]
ஆயத்தொலைகள்29°56′04″N 52°53′29″E / 29.93444°N 52.89139°E / 29.93444; 52.89139
வகைகுடியிருப்பு
வரலாறு
கட்டுநர்முதலாம் டேரியஸ், மூன்றாம் அர்தசெராக்சஸ்
கட்டுமானப்பொருள்கல், மரம்
கட்டப்பட்டதுகிமு. 6 ஆம் நூற்றாண்டு
காலம்அகாமனிசியப் பேரரசு
கலாச்சாரம்பாரசீகர்
நிகழ்வுகள்கட்டடத்திறப்புக் கொண்டாட்டம்
பகுதிக் குறிப்புகள்
நிலைஇடுபாடு
மேலாண்மைஈரானிய அரசாங்கம்
பொது அனுமதிதிறந்துள்ளது
அதிகாரபூர்வ பெயர்: Persepolis
வகைகலாச்சாரம்
அளவுகோல்i, iii, vi
வரையறுப்பு1979 (3 வது தொடர்)
சுட்டெண்114
அரசுஈரான்
பிராந்தியம்ஆசியா பசுபிக்

பெயர்

தொகு

பண்டைய பாரசீகர்கள் இதனைப் "பார்சா" (Pārsa; 𐎱𐎠𐎼𐎿) என அழைத்தனர். ஆங்கிலத்தில் "பெர்சப்பொலிஸ்" (Persepolis) என அழைக்கப்படும் இது கிரேக்கத்தில் வழங்கிய "பெர்செபொலிஸ்" (Persépolis; Περσέπολις) என்ற சொல்லில் இருந்து உருவானது. கிரேக்கச் சொற்களான "பெர்செ" (Pérsēs; Πέρσης), "பொலிஸ்" (pólis; πόλις) என்பவற்றின் பொருள் "பாரசீக நகர்" என்பதாகும். பிற் பழங்கால பாரசீகர்களின் நம்பிக்கையின்படி, இந்நினைவுச் சின்னம் "சம்சித்" என்னும் தொன்மவியல் பாத்திரத்தினால் கட்டப்பட்டது.[5] ஆதலால், சஸ்சானிய காலத்திலிருந்து இப்பகுதி "தகிட் இ சம்சித்" (Takht-e Jamshid; تخت جمشید என, "சம்சித்தின் அரியணை" எ��்ற பொருளில் அழைக்கப்படுகிறது. இதற்கு "நாற்பது தூண்கள்/மினார்கள்" என்ற பெயரும் (چهل منار உள்ளது.

��ட்டுமானம்

தொகு

தொல்பொருளியல் ஆதாரங்களின்படி பெர்சப்பொலிசின் ஆரம்ப இடிபாடுகள் கி.மு 515 ஆம் ஆண்டு காலத்துக்குரியவை. 1930 களின் ஆரம்பத்தில் பெர்சப்பொலிசில் ஆய்வு செய்த பிரான்சிய தொல்பொருளியல் ஆய்வாளர் அன்ரே, பெர்சப்பொலிசுக்கான பகுதியை சைரசு தெரிவு செய்திருந்தாலும், முதலாம் டாரியஸ் மேல் தளத்தையும், பெரிய மாளிகைகளையும் கட்டினார் என நம்புகிறார்.

டாரியஸ் அபடனா மாளிகை, சட்ட மன்ற மண்டபம், பிரதான அரச கருவூலம், அதனுடைய சுற்றுப்பகுதி போன்றவற்றைக் கட்டுவதற்கு அவர் ஆணையிட்டார். இவை அவருடைய மகன் பெரிய செரெக்ஸ் மன்னருடைய ஆட்சிக் காலத்தில் நிறைவுற்றன. அகாமனிசியப் பேரரசு வீழ்ச்சி வரை மேல் தளக் கட்டடங்களின் கட்டுமானங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.[6]

புவியியல் அமைவு

தொகு

பெர்சப்பொலிஸ் கூர் ஏரியுடன் கலக்கும் சிறிய புல்வார் ஏரிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இப்பகுதி 125,000 சதுர மைல் மேல் தளத்தைக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதி செயற்கையாக கட்டப்பட, இன்னொரு பகுதி கிழக்கில் உள்ள "கருணை மலை" பக்கம் உள்ள மலையை வெட்டி கட்டப்பட்டுள்ளது. ஏனைய மூன்று பக்கங்கள் நிலச் சரிவுடன் பல்வேறு அளவு உயரங்களில் தொடர்ச்சுரவினால் உருவாக்கப்பட்டுள்ளது. 5–13 மீட்டர்கள் (16–43 அடிகள்) உயரத்திலிருந்து உயர்ந்து மேற்குப் பக்கத்தில் இரட்டை படிக்கட்டு கட்டப்பட்டிருந்தது. அங்கிருந்து மேல் நோக்கி சிறிய சரிவு அமைந்திருந்தது. மேல் தள மட்டம் கட்டப்பட மண்ணும் பெரும் பாறைகளும் கொண்டு பள்ளங்கள் நிரப்பப்பட்டு உலோக பற்றுக்கருவிகளும் இணைக்கப்பட்டன.

சுமார் கி.பி 519 இல், அகன்ற படிக்கட்டு கட்டட வேலைகள் ஆரம்பமாகின. தரையில் மேலே 20 மீட்டர்கள் (66 அடிகள்) உயரத்தில் மேல் தளத்தின் பிரதான நுழைவுக்கு படிக்கட்டு அமைக்கப்பட ஆரம்பத் திட்டம் இருந்தது. இரட்டைப் படிக்கட்டு எனப்படும் பெர்சப்பொலிஸ் படிக்கட்டு பெருஞ்சுவரின் மேற்குப் புறத்தில் சமச்சீராகக் கட்டப்பட்டது. 111 படிகள் 6.9 மீட்டர்கள் (23 அடிகள்) அகலத்தில் 31 சென்டிமீட்டர்கள் (12 அங்குலங்கள்) விரிவுடனும், 10 சென்டிமீட்டர்கள் (3.9 அங்குலங்கள்) உயரத்துடனும் அளவிடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Google maps. "Location of Persepolis". Google maps. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2013. {{cite web}}: |last= has generic name (help); Check date values in: |accessdate= (help)
  2. The Greeks and the Mauryas, pgs 17,40,185
  3. Michael Woods, Mary B. Woods (2008). Seven Wonders of the Ancient Middle East. Twenty-First Century Books. pp. 26–8.
  4. UNESCO World Heritage Centre (2006). "Pasargadae". பார்க்கப்பட்ட நாள் 26 December 2010.
  5. Holland, Tom (August 2012). In the Shadow of the Sword. Little, Brown. pp. 118–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4087-0007-5.
  6. 2002. Guaitoli. M.T., & Rambaldi, S. Lost Cities from the Ancient World. White Star, spa. (2006 version published by Barnes & Noble. Darius I founded Persepolis in 500 BC as the residence and ceremonial center of his dynasty. p. 164

உசாத்துணை

தொகு

  இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சப்பொலிஸ்&oldid=4058980" இலிருந்து மீள்விக்கப்பட்டது