நீர்நிலை (body of water) என்பது எல்லா வகையான நீரின் தொகுப்புகளையும் குறிக்கும். பொதுவாக இது புவிப்பரப்பின் மீது காணப்படும். நீர்நிலை என்ற சொல் சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள், சுனைகள், மடுக்கள் போன்ற இயற்கையான நீர்நிலைகளையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளையும் குறிக்கும்.

நார்வே நாட்டில் உள்ள ஒரு நீர்நிலை

நீர்த்தேக்க வகைகள்

தொகு

தேங்கி நிற்கும் அல்லது தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலைகளை நீர்த்தேக்கம் என்கிறோம்.

♦ பள்ளத்தாக்கு அணை நீர்த்தேக்கம்
♦ கரையோர நீர்த்தேக்கம்
♦ சேவை நீர்த்தேக்கம்

பட்டியல்

தொகு

தமிழ்

ஆங்கிலம்

வேறு

விளக்கம்

1

அருவி

water fall

Stream

நீர்வீழ்ச்சி

மலை, குன்று போன்றவற்றில் இருந்து வேகத்துடன் விழும் நீர்

2

ஆறு

river

நதி

இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம்

சிற்றாறு

Rivulet

காட்டாறு

jungle stream/river

ஓடை

brook

அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்

சிற்றோடை

Brooklet

3

நீரோட்டம், நீர்த்தாரை

Stream (current)

ஆற்றொழுக்கு

நீரோடை

A water-course

விசை நீரோடை

torrent

கீழாறு

Undergroundstream

பூமியினுள்ளோடும் ஆறு

நீரூற்று

fountain, spring

தண்ணீர் நிலத்துக்கடியே இருந்து வெளியே தோன்றும் பகுதி (இயல்பாயமைந்த நீர் ஊற்று நிலை)

நீர்ச்சுனை, . சுனை

Mountain Pool; a spring or fountain on a mountain

மலையிடத்து இயல்பாயமைந்த நீர் ஊற்று நிலை

நீர்த்தாரை

fountain

ஊறணி, ஊற்று

A fountain, a spring of water

(பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவத��)

ஊருணி (1)

Drinking water tank

ஊரார் அனைவரும் உண்பதற்குரிய நீர்நிலை

உண்பதற்கு, பருகுவதற்குப் பயன்படும் நீர்நிலை

இலஞ்சி (இலைஞ்சி)

A natural or artificial reservoir, tank for drinking and other purposes

கிணறு

Well

உறை கிணறு

Ring Well

மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

நடைகிணறு (நடை கேணி)

(Large well with steps on one side)

இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

கேணி

large well, A square or oblong walled tank

அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு

குட்டை

small pond, small pool

சிறிய குட்டம்

மழை நீரின் சிறிய தேக்கம், மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை

குளம்

A tank, a pond

செயற்கையான நீர்த் தேக்கம், குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

பொய்கை

natural pool or natural pond or natural tank

Spring Pond

இயற்கையிலுண்டான நீர்நிலை, நீரூற்று உடையது

மடு

deep pool in a river

ஆற்றிடையுடைய ஆழமான பகுதி.

குட்டம்

(Large Pond)

பெருங் குட்டை

குண்டம்

-(Small Pool)

சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை

குண்டு

A pool, a basin of water

குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

தடாகம்

Pond, lake

தடாகத்தில் தாமரைச் செடிகள் வளரும்.

வாவி

Tank

தடாகம்

கயம்

tank, lake, Moat

வற்றாத குளம், அகழி

ஏரி

lake, A large tank or reservoir for irrigation

குளம்

வேளாண்மைத் தொழிலுக்குப் பயன்படும் இயற்கையான நீர் நிலை

பண்ணை

ஏல்வை

4

கழிமுகம்

Estuary, firth

ஆறு கடலொடு கலக்கும் சங்கமுகம்

கயவாய், முகத்துவாரம்

Estuary

பகுதி மூடியதும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆறுகள் அல்லது சிற்றாறுகள் கலப்பதும், கடலுடன் தொடர்புடையதுமான, கரையோர நீர்ப்பரப்பு

கடற்கழி

firth

நீண்ட, குறுகிய கழிமுகம்

கழிமுகத்தின் இசுக்கொட்லாந்தியச் சொல்

முகத்துவாரம்

Mouth of a firth or Estuary

நீண்ட, குறுகிய கழிமுகத்தின் வாய்

காயல், களப்பு

lagoon

உப்பங்கழி (2)

கடல்

உப்பங்கழி

Backwater, Salt-pan

காயல்

Backwater

உப்பளம்

Salt-pan

கடல்வாய்க்கால்

Lagoon

உப்பங்கழி

அல்குகழி

சிறிய உப்பங் கழிநிலம்

அகழி

Moat

கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

ஆழிக்கிணறு

Well in Sea-shore

கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

காரானை (2)

Waterspout (3)

கடலின்மீதுகுவிந்து கீழிறங்கி நீரைமுகந்து பெருந்தூண் போல நிற்கும் மேகம்

நீர்த்தம்பம்

Water spout

நீர்த்தாரை?

நீரை வெளியேற்றும் குழாய்

சொல்லும் பொருளும்

தொகு

நீர்நிலை

நீர் நிலைகளின் தமிழ்ப்பெயர்கள்

தொகு

நீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் தமிழர்கள் அழைத்து வந்துள்ளனர்.

  1. குளம் (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை)
  2. ஏரி (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை)
  3. ஊருணி (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக)
  4. பொய்கை (மலர் நிறைந்த நீர் நிலை)
  5. மடு
  6. கேணி (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை)
  7. மோட்டை
  8. அள்ளல்
  9. கிணறு
  10. துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை)
  11. தடாகம் அல்லது வாவி
  12. ஓடை
  13. அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்)
  14. அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் )
  15. அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்)[1]
  16. அகழி - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்)
  17. அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை.[2]
  18. ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.
  19. இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.
  20. கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.
  21. கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.
  22. சுனை - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.(சிறிதளவு நீருள்ள பள்ளம்)
  23. மடு - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.
  24. குட்டை - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர்.[3]
  25. கூவல் - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.
  26. தருவை - பெரிய ஏரி[4]

நிகண்டு காட்டும் சொற்கள்

தொகு

இலஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம்.[5]

வகைகள்

தொகு

சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.[6]

அடிக்குறிப்பு

தொகு
  1. "தமிழை நேசிப்போம், காப்போம், வளர்ப்போம்". 25 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. அகநானூறு 68
  3. தொடர்பான வழக்குகள்: குட்டையில் ஊறிய மட்டை என்பது கிராமப்புறங்களில் தென்னை மட்டையை கிடுகு பின்னுவத்தற்காக குட்டை நீரில் ஊறப்போடும் செயல் தொடர்புடைய சொலவகை
  4. சென்னைப் பேரகரமுதலி (தருவை). சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. பிங்கல நிகண்டு, பக்கம் 75 பாடல் 5
  6. தண்ணீர், தொகுப்பு: பரமசிவன்

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்நிலை&oldid=3915866" இலிருந்து மீள்விக்கப்பட்டது