ஊற்று (Spring) என்பது நிலத்தடி நீர்ப்படுகையில் இருந்து புவி மேற்பரப்புக்கு நீர் இயற்கையாக கசிந்து வெளியேறும் ஒரு நிலையைக் குறிக்கும். இது நீர்க்கோளத்தின் ஒரு கூறு ஆகும்.

மிசூரியில் உள்ள "பிக் இசுப்பிரிங்"கில் இருந்து ஒரு சராசரி நாளில் 303 மில்லியன் அமெரிக்க கலன்கள், செக்கனுக்கு 469 கன அடி வீதம் வெளியேறுகிறது.

உருவாக்கம்

தொகு

ஊற்றுக்கள் கரைவுப் பாறை நில அமைப்பின் விளைவாக ஏற்படக்கூடும். இங்கே மழை நீர் புவி மேற்பரப்பினூடாகச் சென்று நிலத்தடி நீரின் பகுதியாகிறது. இந்நிலத்தடி நீர், மண் துணிக்கைகளுக்கு இடையிலுள்ள இடைவெளிகள் முதல், பெரிய குடைவுக் குகைகள் வரை அமையக்கூடிய வெடிப்புகள், ���ிளவுகள் என்பவற்றினூடாகப் பயணிக்கிறது. இது இறுதியாக ஊற்றுக்களாகப் புவி மேற்பரப்பினூடாக வெளியேறுகிறது. சுண்ணக்கல், தொலமைட் போன்ற நீரை ஊடுசெல்லவிடும் பாறைகளை நிலத்தடி நீர் கரைத்து, நிலத்தின் கீழ் பெரிய குகைத் தொகுதிகளை உருவாக்குகின்றன.[1]

ஒரு குறித்த பகுதிக்குள் அடக்கப்பட்ட நிலக்கீழ் நீப்படுகையின் நீர் மட்டம் நீர் மேற்பரப்பினூடு வெளியேறக்கூடிய துளையை விட மேலே இருக்கும்போது நிலத்தடி நீர் புவி மேற்பரப்பை நோக்கித் தள்ளப்படலாம். இவ்வாறு தள்ளப்படுவதனாலேயே "ஆட்டீசியன்" கிணறுகள் உருவாகின்றன. "ஆட்டீசியன்" அல்லாத ஊற்றுக்கள் நிலத்தினூடாக வெறுமனே உயரத்தில் இருந்து கீழ் நோக்கி வந்து மேற்பரப்பினூடாக ஊற்று வடிவில் வெளியேறுகின்றன. இங்கே நிலம் ஒரு நீர் கடத்தும் குழாய் போலப் பயன்படுகிறது. எரிமலைச் செயற்பாடுகளைப்போல் நிலத்தின் கீழிருந்து அழுத்தத்தை உருவாக்கக்கூடிய மூலங்களாலும் ஊற்றுக்கள் உருவாகலாம். இவ்வாறான ஊற்றுக்கள் உயர்வான வெப்பநிலையுடன் கூடிய சுடுநீர் ஊற்றுக்களாகவும் உருவாகக்கூடும்.

பாய்வு

தொகு

ஊற்றின் நீர் வெளியேற்றம், மீளெழுச்சி என்பன ஊற்றின் மீளூட்ட வடிநிலத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது. நிலத்தடி நீரைப் பிடித்து வைத்திருக்கும் பகுதியின் அளவு, மழைவீழ்ச்சி அளவு, நீர் ஏந்தும் இடங்களின் அளவு, ஊற்று வெளியேறும் துளைகளின் அளவு என்பவை நீர் மீளூட்டத்தைப் பாதிக்கும் காரணிகள். நீரை ஊடுசெல்லவிடும் நிலம், சுண்ணக்கற்பாறைப் பள்ளங்கள், மறையும் ஓடைகள் போன்ற வழிகளில் நீர் நிலத்தடித் தொகுதிகளுக்குள் கசிந்துவிடலாம். மனித நடவடிக்கைகளும், ஊற்று வெளியேற்றும் நீரின் அளவைப் பாதிப்பது உண்டு. நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக வெளியேற்றுவது நிலத்தடி நீர்ப் படுகைகளில் அழுத்தத்தைக் குறைப்பதால் நீர் வெளியேறும் அளவு குறையும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Springs - The Water Cycle, from USGS Water-Science School". ga.water.usgs.gov. Archived from the original on 2009-05-09. பார்க்கப்பட்ட நாள் 2017-10-31.
  2. "USGS Surface-Water Data for Missouri". waterdata.usgs.gov.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊற்று&oldid=3545494" இலிருந்து மீள்விக்கப்பட்டது