கல்பாக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கல்பாக்கம் (ஆங்கிலம்:Kalpakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், சென்னையில் இருந்து 70 கி.மீ. தெற்கே கோரமண்டல் கரையில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும். கல்பாக்கம் பெரும்பாலும் அணு ஆலைகள் மற்றும் அதன் துணை ஆராய்ச்சி நிறுவனங்களுக்குப் புகழ்பெற்றது.

கல்பாக்கம்
—  நகரியம்  —
கல்பாக்கம்
அமைவிடம்: கல்பாக்கம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°34′N 80°10′E / 12.56°N 80.16°E / 12.56; 80.16
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப
மக்கள் தொகை ~20,000 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


12 மீட்டர்கள் (39 அடி)

குறியீடுகள்

புவியியல்

தொகு
 
நகரியத்தின் நிழற்சாலை

கடலோரம் அமைந்துள்ள இவ்வூரின் அமைவிடம் 12°34′N 80°10′E / 12.56°N 80.16°E / 12.56; 80.16 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (285 அடி) உயரத்தில் இருக்கின்றது.

முக்கிய இடங்கள்

தொகு

கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் 1971 லும், சென்னை அணுமின் நிலையம் 1970 லும் அமைக்கப்பட்டது. இதிலுள்ள இரு அணு மின் நிலையங்களும் 1984 மற்றும் 1986 ஆண்டுகளில் தலா 220 மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் இயங்க துவங்கியது[4].

சுனாமி

தொகு
 
சுனாமியின் வேகத்தை குறைப்பதற்கான சுவர்

டிசம்பர் 24, 2004யில் சுனாமி ஏற்பட்ட பொழுது கல்பாக்கமும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு, சுனாமி ஏற்படும் பொழுது நீர் அலைகளின் வேகத்தை குறைப்பதற்கு கல்பாக்கத்தில் நீண்ட சுவர் எழுப்பப்பட்டது. மேலும் பல மரங்களும் நடப்பட்டன.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Kalpakkam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 25, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. http://www.npcil.nic.in/main/ProjectOperationDisplay.aspx?ReactorID=75
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பாக்கம்&oldid=4137195" இலிருந்து மீள்விக்கப்பட்டது