ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

வாசிங்டன், டி. சி. ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக 1800ஆம் ஆண்டிலிருந்து உள்ளது.இதனைத் தவிர எட்டு நகரங்களில் அமெரிக்க சட்டமன்றம் கூடியுள்ளது.இவையும் முன்னாள் அமெரிக்க தலைநகரங்களாகக் கருதப்படுகின்றன. தவிர, கூட்டமைப்பில் உள்ள 50 மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் மற்றும் பிற ஆட்சிப்பகுதிகளிலும் அவற்றிற்கான சட்டமன்றம் அமையும் தலைநகரங்கள் உண்டு.

ஐக்கிய அமெரிக்காவின் சட்டமன்ற கட்டிடம்.

மாநில தலைநகரங்கள்

தொகு

ஐக்கிய அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 33 மாநிலங்களில் அவற்றின் தலைநகரம் அம்மாநிலத்தின் சனத்தொகை மிகுந்த நகரமாக இல்லை. இரண்டு மாநிலத் தலைநகர்கள், இட்ரென்டன், நியூ ஜெர்சி மற்றும்கார்சன் நகரம், நெவாடா மற்ற மாநிலத்தின் எல்லையில் உள்ளன; ஜூனோ, அலாஸ்கா வின் எல்லை கனடாவின் மாநிலம் பிரித்தானிய கொலம்பியாவிற்கு அடுத்துள்ளது.[a]

கீழ்வரும் பட்டியலில் உள்ள நாட்கள் அவை எந்த நாளிலிருந்து தொடர்ந்து தலைநகராக விளங்கின என்பதை காட்டுகின்றன:

ஐக்கிய அமெரிக்காவின் மாநில தலைநகரங்கள்
மாநிலம் மாநிலம் அமைந்த நாள் தலைநகரம் எப்போதிலிருந்து கூடுதல் மக்கள்தொகை கொண்ட நகரம்? நகர மக்கள்தொகை மாநகர மக்கள்தொகை குறிப்புகள்
அலபாமா 1819 மான்ட்கமரி 1846 இல்லை 200,127 469,268 பர்மிங்காம் மாநிலத்தின் பெரிய நகரம்.
அலாஸ்கா 1959 ஜூனோ 1906 இல்லை 30,987 அங்கரேஜ் மாநிலத்தின் பெரிய நகரம். அடுத்த நாட்டின் எல்லையில் இருக்கும் ஒரே தலைநகரம்.
அரிசோனா 1912 பீனிக்ஸ் 1889 ஆம் 1,512,986 4,039,182 பீனிக்ஸ், அமெரிக்காவிலேயே கூடுதல் மக்கள்தொகை கொண்ட தலைநகரம்.
ஆர்கன்சஸ் 1836 லிட்டில் ராக் 1821 ஆம் 204,370 652,834
கலிபோர்னியா 1850 சேக்ரமெண்டோ 1854 இல்லை 467,343 2,136,604 கலிபோர்னியா உச்சநீதிமன்றம் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது.லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தின் பெரிய நகரம்.
கொலராடோ 1876 டென்வர் 1867 ஆம் 566,974 2,408,750
கொனெக்ரிகட் 1788 ஹார்ஃபோர்ட் 1875 இல்லை 124,397 1,188,241 பிரிட்ஜ்ஃபோர்ட் மாநிலத்தின் பெரிய நகரம்,ஆனால் மாநகர ஹார்ஃபோர்ட் பெரிய மாநகர பரப்பு கொண்டது.
டெலவேர் 1787 டோவர் 1777 இல்லை 32,135 வில்மிங்டன் மாநிலத்தின் பெரிய நகரம்.
ஃபுளோரிடா 1845 டலஹாசி 1824 இல்லை 168,979 336,501 ஜாக்சன்வில் மிகப்பெரிய நகரம், மற்றும் மியாமி பெரிய பரப்பளவு கொண்டது.
ஜார்ஜியா 1788 அட்லான்டா 1868 ஆம் 486,411 5,138,223 அட்லான்டா, மாநகர மக்கள்தொகையில் நாட்டிலேயே முதல் மாநகரம்.
ஹவாய் 1959 ஹொனலுலு 1845 ஆம் 377,357 909,863
இடாகோ 1890 பொய்சி 1865 ஆம் 201,287 635,450
இலினாய் 1818 ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) 1837 இல்லை 116,482 188,951 சிகாகோ மாநிலத்தின் பெரிய நகரம்.
இன்டியானா 1816 இண்டியானபொலிஸ் 1825 ஆம் 791,926 1,984,664 நாட்டிலேயே இரண்டாவது பெரிய மாநிலத் தலைநகராக இருப்பதுடன் மிஸ்ஸிசிப்பி ஆற்றின் கிழக்கே உள்ள ��ிகப்பெரிய மாநிலத் தலைநகராகும்.
ஐயோவா 1846 டி மொயின் 1857 ஆம் 209,124 625,384
கன்சாஸ் 1861 டொபீகா 1856 இல்லை 122,327 228,894 விசிதா மாநிலத்தின் பெரிய நகரம்.
கென்டகி 1792 பிராங்போர்ட் (கென்டக்கி) 1792 இல்லை 27,741 69,670 லூயிவில் மாநில பெரும் நகர்.
லூசியானா 1812 பாடன் ரூஜ் 1880 இல்லை 224,097 751,965 நியூ ஓர்லியன்ஸ் மநில பெரும் நகர் மற்றும் உச்சநீதிமன்றம் அமரும் இடம்.
மேய்ன் 1820 அகஸ்தா 1832 இல்லை 18,560 117,114 அகஸ்தா 1827ஆம் ஆண்டு தலைநகரானது,ஆனால் சட்டமன்றம் 1832 வரை அங்கு அமரவில்லை.போர்ட்லாந்து மாநிலத்தின் பெரிய நகரம்.
மேரிலண்ட் 1788 அனாபொலிஸ் 1694 இல்லை 36,217 சான்டா ஃபே,பாஸ்டன் அடுத்து அனாபொலிஸ் நாட்டின் மிகப்பழமையான தலைநகரங்களில் மூன்றாவதாக உள்ளது. இங்குள்ள சட்டமன்றக் கட்டிடம் பயன்படுத்தப்படும் மிகப் பழமையான கட்டிடம். பால்டிமோர் மாநில பெரும் நகர்.
மசாசுசெட்ஸ் 1788 பாஸ்டன் 1630 ஆம் 590,763 4,455,217 அமெரிக்காவில் தொடர்ந்து தலைநகராக இருந்துவரும் பழைமையான தலைநகர். பெருநகர பாஸ்டன் மசாசுசெற்ஸ்,நியூ ஹாம்சயர் மற்றும் றோட் தீவு மாநிலத் தலைநகர்களை உள்ளடக்கியது.
மிஷிகன் 1837 லான்சிங் 1847 இல்லை 119,128 454,044 டெட்ராயிட் மாநிலத்தின் பெரிய நகரம்.
மினசோட்டா 1858 செயின்ட் பால் 1849 இல்லை 287,151 3,502,891 மின்னியாபொலிஸ் மாநிலத்தின் பெரிய நகரம்; அதுவும் செயின்ட் பாலும் இணைந்து மின்னியாபொலிஸ்-செயின்ட் பால் மாநகர பெருநகரமாக உள்ளது.
மிசிசிப்பி 1817 ஜாக்சன் 1821 ஆம் 184,256 529,456
மிசெளரி 1821 ஜெபர்சன் நகரம் 1826 இல்லை 39,636 146,363 கன்சஸ் நகரம் மாநிலத்தின் பெரிய நகரம், பெருநகர செயின்ட் லூயி மிகப்பெரும் மாநகரபகுதி.
மான்டனா 1889 ஹெலேனா 1875 இல்லை 25,780 67,636 பில்லிங்ஸ் மாநிலத்தின் பெரிய நகரம்.
நெப்ராஸ்கா 1867 லிங்கன் 1867 இல்லை 225,581 283,970 ஓமாகா மாநில பெரிய நகரம்.
நெவாடா 1864 கார்சன் நகரம் 1861 இல்லை 57,701 லாஸ் வேகாஸ் மாநில பெரிய நகரம்.
நியூ ஹாம்ஷயர் 1788 காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) 1808 இல்லை 42,221 மான்செஸ்டர் மாநிலப் பெரிய நகரம்.
நியூ ஜெர்சி 1787 இட்ரென்டன் 1784 இல்லை 84,639 367,605 நெவார்க் மாநில பெரிய நகரம்.
நியூ மெக்சிகோ 1912 சான்டா ஃபே 1610 இல்லை 70,631 142,407 சான்டா ஃபே மிகப் பழமையான தொடர்ந்து தலைநகராக இருக்கும் நகராகும். அல்புகர்க் மாநிலத்தின் பெரிய நகர்.
நியூ யார்க் 1788 ஆல்பெனி 1797 இல்லை 95,993 1,147,850 நியூ யார்க் நகரம் மிகப் பெரிய நகரம்.
வட கரோலினா 1789 ராலீ 1794 இல்லை 380,173 1,635,974 சார்லோட் மாநில பெரிய நகரம்.
வட டகோட்டா 1889 பிஸ்மார்க் 1883 இல்லை 55,533 101,138 பார்கோ மாநில பெரிய நகரம்.
ஒஹாயோ 1803 கொலம்பஸ் 1816 ஆம் 733,203 1,725,570 கொலம்பஸ் ஒகைய்யோவின் பெரிய நகரம் ஆனால் பெருநகர கிளீவ்லாந்து மற்றும் சின்சினாட்டி-வட கென்டகி மாநகரப் பகுதி இரண்டும் பெரியவை.
ஒக்லஹாமா 1907 ஓக்லஹோமா நகரம் 1910 ஆம் 541,500 1,266,445
ஒரிகன் 1859 சேலம் 1855 இல்லை 149,305 539,203 போர்ட்லாந்து மாநிலத்தில் பெரிய நகரம்.
பென்சில்வேனியா 1786 ஹாரிஸ்பர்க் 1812 இல்லை 48,950 384,600 பிலடெல்பியா மாநிலத்தில் பெரிய நகரம்.
இறோட் தீவு 1790 பிராவிடென்ஸ் 1900 ஆம் 176,862 1,612,989
தென் கரோலினா 1788 கொலம்பியா 1786 ஆம் 122,819 703,771
தென் டகோட்டா 1889 பியேர் 1889 இல்லை 13,876 சியோ ஃபால்ஸ் மாநிலத்தில் பெரிய நகரம்.
டென்னசி 1796 நாஷ்வில் 1826 இல்லை 607,413 1,455,097 மெம்பிஸ் மாநிலத்தில் பெரிய நகரம் ஆனால் நாஷ்வில் மாநகரப்பகுதி பெரிய மாநகரம்.
டெக்சஸ் 1845 ஆஸ்டின் 1839 இல்லை 709,893 1,513,565 ஹூஸ்டன் மாநிலத்தில் பெரிய நகரம் , மற்றும் டல்லஸ்-ஃபோர்ட்வொர்த் மாநகரப்பகுதி பெரிய மாநகரம்.
உட்டா 1896 சால்ட் லேக் நகரம் 1858 ஆம் 181,743 1,115,692
வேர்மான்ட் 1791 மான்ட்பீலியர் 1805 இல்லை 8,035 மான்ட்பீலியர் அமெரிக்கத் தலைநகர்களிலேயே குறைந்த மக்கள்தொகை கொண்டது. பர்லிங்டன மாநிலத்தில் பெரிய நகரம்.
வெர்ஜீனியா 1788 ரிச்மன்ட் 1780 இல்லை 195,251 1,194,008 வெர்ஜீனியா கடற்கரை மாநிலத்தில் பெரிய நகரம், மற்றும் வடக்கு வெர்ஜீனியா மாநிலத்தின் பெரிய மாநகரப்பகுதி.
வாஷிங்டன் மாநிலம் 1889 ஒலிம்பியா 1853 இல்லை 42,514 234,670 சியாட்டில் மாநிலத்தில் பெரிய நகரம்.
மேற்கு வெர்ஜீனியா 1863 சார்ல்ஸ்டன் 1885 ஆம் 52,700 305,526
விஸ்கொன்சின் 1848 மேடிசன் 1838 இல்லை 221,551 543,022 மில்வாக்கி மாநிலத்தில் பெரிய நகரம்.
வயோமிங் 1890 செயென் 1869 ஆம் 55,362 85,384

தனித்த பகுதிகளின் தலைநகரங்கள்

தொகு

ஐம்பது மாநிலங்களிலிலோ நாட்டின் கூட்டாட்சி மாவட்டமான கொலம்பியா மாவட்டத்திலோ அடங்கியில்லாத ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பகுதிகள் தனித்தப் பகுதி (Insular Areas) என்று அழைக்கப்படுகின்றன.அவற்றின் தலைநகரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

ஐக்கிய அமெரிக்காவின் தனித்த பகுதிகளின் தலைநகரங்கள்
தனித்தப் பகுதி நாள் தலைநகர் குறிப்புகள்
அமெரிக்க சமோவா 1899 பாகோ பாகோ நடப்பில் உண்மையான தலைநகர்.
1967 ஃபாகடோகோ அமெரிக்கன் சமோவா அரசியல் சட்டப்படியான அலுவல்முறை தலைநகரம்.
குவாம் 1898 ஹகாத்னா டெடெடோ இப்பகுதியில் உள்ள பெரிய கிராமமாகும்.
வடக்கு மரியானா தீவுகள் 1947 சைப்பேன்
புவேர்ட்டோ ரிக்கோ 1898 சான் யுவான் தலைநகர் முன்பு போர்டோ ரிகோ என அழைக்கப்பட்டது.
அமெரிக்க கன்னித் தீவுகள் 1917 சார்லொட் அமலீ

மேற்கோள்கள்

தொகு


புற இணைப்புகள்

தொகு