இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2024–25
இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2024 நவம்பர் முதல் 2024 சனவரி வரை ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடுகிறது.[1] தேர்வுப் போட்டிகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக விளையாடப்படுகின்றன.[2][3][4] 1992 இற்குப் பின்னர் இரு நாடுகளுக்குமிடையே ஐந்து தேர்வுப் போட்டிகள் நடைபெறும் முதலாவது தேர்வுத் தொடராகும்.[5][6]
இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2024–25 | |||||
பார்டர்-கவாஸ்கர் கிண்ணம் | |||||
ஆத்திரேலியா | இந்தியா | ||||
காலம் | 22 நவம்பர் 2024 – 7 சனவரி 2025 | ||||
தலைவர்கள் | பாட் கம்மின்ஸ் | ரோகித் சர்மா[a] | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் |
முந்தைய 2023 தொடரில் இந்தியா ஆத்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்று பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தைத் தக்க வைத்திருந்தது..[7][8]
விளையாடும் இடங்க்ள்
கிரிக்கெட் ஆத்திரேலியா தமது கோடை-காலத் துடுப்பாட்டக் கால நிரலை 2024 மார்ச்சில் அறிவித்தது.[9] தேர்வுத் தொடர் ஆத்திரேலியாவின் முதன்மை ஐந்து நகரங்களின் துடுப்பாட்டத் திடல்களில் நடைபெறுகிறது. 1991/92 இற்குப் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் முதலாவது ஐந்து-ஆட்டத் தொடர் இதுவாகும்.
தேர்வு | அமைவிடம் | திடல் | இருக்கைகள் | நாள் |
---|---|---|---|---|
1-வது | பேர்த் | பேர்த் திடல் | 61,266 | 22–26 நவம்பர் |
2-வது | அடிலெயிட் | அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் | 53,500 | 6–10 திசம்பர் |
3-வது | பிரிஸ்பேன் | பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம் | 37,000 | 14–18 திசம்பர் |
4-வது | மெல்பேர்ண் | மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் | 100,024 | 26–30 திசம்பர் |
5-வது | சிட்னி | சிட்னி துடுப்பாட்ட அரங்கம் | 48,000 | 3–7 சனவரி |
அணிகள்
ஆத்திரேலியா[10] | இந்தியா[11] |
---|---|
|
பார்டர்-கவாசுகர் பதக்கம்
1-ஆவது தேர்வு
22–25 நவம்பர் 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நேத்தன் மெக்சுவீனி (ஆசி), அர்சித் ராணா (இந்), நித்தீசு குமார் ரெட்டி (இந்) மூவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- கே. எல். ராகுல் (இந்) தனது 3,000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[12]
- விராட் கோலி ஆத்திரேலியாவில் இந்தியாவுக்காக விளையாடி அதிக தேர்வுச் சதங்களை (7) எடுத்து சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.[13]
- இது பெர்த் திடலில் ஆத்திரேலியா அடைந்த முதலாவது தேர்வுத் தோல்வி ஆகும்.[14]
- ஆத்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் (ஓட்டக் கணக்கில்) இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.[15]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, ஆத்திரேலியா 0.
2-ஆவது தேர்வு
எ
|
||
0/19 (3.2 நிறைவுகள்)
நேத்தன் மெக்சுவீனி 10* (12) |
- நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- திராவிசு கெட் (ஆசி) 111 பந்துகளில் சதம் அடித்தது, பகல்/இரவுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மிக விரைவான சாதனை ஆகும்.[16]
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது கடைசி தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[17][18][19]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இந்தியா 0.
3-ஆவது தேர்வு
14–18 திசம்பர் 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- முதல் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக 13.2 ஓவர்களே விளையாடப்பட்டன.
- விராட் கோலி (இந்) தனது ஆத்திரேலியாவுக்கு எதிரான 100-ஆவது பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.[20]
- ஜஸ்பிரித் பும்ரா (இந்) ஆத்திரேலியாவில் தனது 51-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றி, கபில்தேவின் இந்திய சாதனையை முறியடித்தார்.[21]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 4, இந்தியா 4.
4-ஆவது தேர்வு
26–30 திசம்பர் 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- சாம் கொன்சுதாசு (ஆசி) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[22]
- நித்தீசு குமார் ரெட்டி (இந்) தனது முதலாவது தேர்வு சதத்தை எடுத்தார்.[23] மெல்பேர்ண் விளையாட்டரங்கில் 8-ஆவதாகவோ அல்லது அதற்குக் குறைவானதாகவோ துடுப்பாடியவர்களில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரரும் இவரே.[24]
- ஜஸ்பிரித் பும்ரா (இந்) தனது 200-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[25]
5-ஆவது தேர்வு
3–7 சனவரி 2025
ஆட்டவிபரம் |
எ
|
||
குறிப்புகள்
- ↑ ஜஸ்பிரித் பும்ரா முதலாவது தேர்வில் தலைவராக விளையாடினார்.
மேற்கோள்கள்
- ↑ "India vs Australia Test series: Adelaide in the fray to host another pink-ball Test". Firstpost. 18 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-03-19.
- ↑ "Men's Future Tours Program" (PDF). பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
- ↑ "Tentative Schedule For India's Tour Of Australia 2024-25 Out, Perth Likely To Host 1st Test". OneCricket (in ஆங்கிலம்). 18 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-03-19.
- ↑ "Cricket Australia announces venues for 5-match Test series against India". Times of Oman. பார்க்கப்பட்ட நாள் 2024-03-19.
- ↑ "Border Gavaskar Trophy In WTC 2023-25 Cycle To Be Played Over Five Tests For First Time Since 1992". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-19.
- ↑ "MCG to host historic women's Ashes Test to mark 90-year anniversary of format". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ (in ஆங்கிலம்). 26 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-03-27.
- ↑ "India win series 2-1 after fourth Test with Australia ends in a draw". தி கார்டியன். 14 March 2023. பார்க்கப்பட்ட நாள் 4 October 2024.
- ↑ "India retain Border-Gavaskar Trophy after dull draw". டெக்கன் ஹெரால்டு. 14 March 2023. பார்க்கப்பட்ட நாள் 4 October 2024.
- ↑ "Five-Test India series, Ashes crown epic summer | cricket.com.au". Cricket Australia. 2024-03-26. பார்க்கப்பட்ட நாள் 2024-10-14.
- ↑ "McSweeney, Inglis named in Border-Gavaskar Test squad". Cricket Australia. 10 November 2024.
- ↑ "Squads for India's tour of South Africa & Border-Gavaskar Trophy announced". இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம். 25 October 2024.
- ↑ "KL Rahul crosses 3000 Test runs during Australia vs India match at Perth". ஸ்போர்ட்ஸ்டார். பார்க்கப்பட்ட நாள் 22 November 2024.
- ↑ "Virat Kohli shatters Sachin Tendulkar's record, roars back to form with blazing century vs Australia to reclaim throne". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 26 November 2024.
- ↑ "India creates history with 1st win over Australia at Perth's Optus Stadium". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 25 November 2024.
- ↑ "AUS vs IND: Bumrah's historic feat, India's biggest win in Australia – Stat Pack". India Today. பார்க்கப்பட்ட நாள் 25 November 2024.
- ↑ Bandarupalli, Sampath (7 December 2024). "Stats - Head's pink-ball delight and Rohit's 2024 misery". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 7 December 2024.
- ↑ "Ashwin announces retirement from international cricket". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2024.
- ↑ "R Ashwin Retirement: Legendary Indian Off-Spinner Calls Time On International Cricket". ABP News. பார்க்கப்பட்ட நாள் 18 December 2024.
- ↑ "R Ashwin retires from international cricket, ends career midway through Australia tour". India Today. பார்க்கப்பட்ட நாள் 18 December 2024.
- ↑ "IND vs AUS: Virat Kohli On Verge Of Historic 'Century' At Gabba – Only One Player Has Done It Before". ABP News. பார்க்கப்பட்ட நாள் 13 December 2024.
- ↑ "Jasprit Bumrah leaves behind Kapil Dev, scripts all-time Asian record with Gabba heroics against Australia". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 18 December 2024.
- ↑ Bandarupalli, Sampath (26 December 2024). "Teenager Konstas takes Bumrah for record 18 runs in an over". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. https://www.espncricinfo.com/story/teenager-konstas-takes-bumrah-for-record-18-runs-in-an-over-1466615.
- ↑ "IND vs AUS: Nitish Reddy hits maiden Test hundred, scripts history in Melbourne". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 28 December 2024.
- ↑ Bandarupalli, Sampath (28 December 2024). "Nitish Kumar Reddy's MCG century - in numbers". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. https://www.espncricinfo.com/story/aus-vs-ind-4th-bgt-test-the-nitish-kumar-reddy-mcg-century-in-numbers-1466943.
- ↑ "Jasprit Bumrah becomes fastest Indian to record 200 Test wickets in 8484 balls during Boxing Day Test". இந்தியன் எக்சுபிரசு. 29 December 2024. பார்க்கப்பட்ட நாள் 29 December 2024.