கபில்தேவ்
கபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் (Kapil Dev Ram Lal Nikhanj பிறப்பு: சனவரி 6, 1959)[1] என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.[2]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கபில்தேவ் ராம்லால் நிக்கஞ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 6 சனவரி 1959 சண்டிகர், பஞ்சாப், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | அனைத்தும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 141) | 16 அக்டோபர் 1978 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 19 மார்ச் 1994 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 25) | 1 அக்டோபர் 1978 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 17 அக்டோபர் 1994 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1975–1992 | அரியானா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1984–1985 | வோர்செஸ்டயர் மாகாண அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, 24 ஜனவரி 2008 |
1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அப்போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். அந்தச் சாதனையானது 2000 ஆம் ஆண்டில் வால்ஸ் என்பவரால் தகர்க்கப்பட்டது. ஓய்வு பெறும் போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரு வடிவங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை முதலில் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 434 மட்டையாளர்களையும் 5000 ஓட்டங்களையும் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார்.[3] இதன்மூலம் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராக ஆனார். மார்ச் 11, 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை தனது புகழவையில் சேர்த்துக் கொண்டது.[4]
ஒருநாள் போட்டிகளில் 253 இலக்குகளும் 3,783 ஓட்டங்களும் பெற்றுள்ளார். கபில் தேவ் எழிற்கையான வீசுநடையும் வலிவுமிக்க வெளித்துயல் பந்துவீச்சும் கொண்டிருந்தார். ஹரியானா புயல் என்ற பட்டப்பெயரை அவர் பெற்றிருந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுகபில்தேவ் ஜனவரி 6, 1959 இல் சண்டிகர், பஞ்சாபில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கபில்தேவ் நிகாஞ்ச் ஆகும். இவரின் தந்தை லால் நிகாஞ்ச் , ஒரு மர வியாபரி ஆவார். தாய் ராஜ்குமாரி. இவர் பஞ்சாபி காத்ரி சமூகத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரின் தாயார் பரித்துதின் கஞ்ச்சகர் பிறந்த ஊரான பாக்பத்தானில் பிறந்தார். இவரின் தந்தை பிபல்பூரைச் சேர்ந்தவர். இவர்கள் ஷா யக்கா எனும் இடத்தில் வசித்து வந்தனர். தற்போது இந்த இடம் பாக்கித்தானிலுள்ள ஒகாரா மாவட்டத்தில் உள்ளது. இவருடைய நான்கு சகோதரிகளும் இந்தியப் பிரிப்புக்கு முன்னர் பிறந்தவர்கள். இவருடைய இரு சகோதரர்களும் ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ளனர். இந்தியப் பிரிப்பிற்கு பின்னர் குடும்பத்துடன் அனைவரும் ஃபசில்கா சென்றனர். பின் சண்டிகர் சென்றனர். டி. ஏ. வி பள்ளியில் பயின்றார். பின் தேஷ் பிரேம் ஆசாத் நிறுவனத்தில் 1971 ஆம் ஆண்டில் சேர்ந்தார்.
தேர்வுத் துடுப்பாட்டம்
தொகு1978 ஆம் ஆண்டில் கபில் தேவ் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். அக்டோபர் 16, 1978 இல் ஃபசிலாபாத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ஆனால் அந்தப் போட்டியில் குறிப்பிடத் தகுந்த அளவிலான பங்களிப்புகளைச் செய்யவில்லை. தனது வேகப் பந்துவீச்சு மூலமாக ஒரு முறைக்கும் மேலாக அவர்களின் பாதுகாப்புக் கவசத்தில் தாக்கினார்.[5] தனது புறத் திருப்ப பந்துவீச்சு மூலமாக சதிக் முகம்மதுவின் இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார்.[6] பின் கராச்சி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 33 பந்துகளில் ஐம்பது ஓட்டங்களை அடி��்தார். இதன் மூலம் அதிவிரைவாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஐம்பது ஓட்டங்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார்.[7] இருந்தபோதிலும் அந்தப் போட்டியிலும் அந்தத் தொடரினையும் இந்திய அணி2-0 என பாக்கித்தான் அணியிடம் இழந்தது. அதன் பின் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. தில்லிபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். 124 பந்துகளில் 126 ஓட்டங்களை அடித்தார்.[8] அந்தத் தொடரில் 17 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தப் போட்டியில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். ஆனல் 633 ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.[9] அந்தத் தொடரில் 17 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 45 ஓட்டங்கள் எடுத்தார்.
ஒருநாள் துடுப்பாட்டம்
தொகு1979 ஆம் ஆண்டில் கபில் தேவ் தனது முதல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இவரின் தேர்வு மற்றும் ஒருநாள் ஆகிய இரு முதல் போட்டிகளும் பாக்கித்தான் அணிக்கு எதிரான போட்டி ஆகும். 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணத் துடுப்பாட்டக் கோப்பைத் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தினை இவர் வெளிப்படுத்தவில்லை.
பின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் கபில் தேவ் இருமுறை ஐந்து இலக்குகளைக் கைப்பற்றி ஒரு முதன்மையான பந்துவீச்சாளர் என தனது திறமையினைக் காட்டினார். மேலும் மட்டையாட்டத்தில் 212 ஓட்டங்களை எடுத்தார். மொத்தமாக அவர் 28 இலக்குகளை 23.22 எனும் சராசரியோடு எடுத்தார். 1979-80 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இரு முறை அணியின் வெற்றிக்கு உதவினார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 69 ஓட்டங்கள் எடுத்து அணியினை வெற்றி பெறச் செய்தார். சென்னை , சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் 90 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளையும்[10] இரண்டாவதுஆட்டப் பகுதியில் 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஏழு இலக்குகளையும் 98 பந்துகள்ளில் 84 ஓட்டங்களையும் எடுத்து அணியினை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலமாக இவர் பரவலாக அறியப்பட்டார்.[11]
கபில்தேவ் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் அணித் தலைவர் பொறுப்பு ஏற்றார். இந்தத் தொடரில் சுனில் காவஸ்கர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவருக்குத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் முழுமைக்கும் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்தத் தொடரில் 47 ஓவர்களில் கபில் தேவ் 72 ஓட்டங்களும், சுனில் கவாஸ்கர் 90 ஓட்டங்களும் எடுத்து அணியை மொத்த ஓட்டங்கள் 282/5 பெறச் செய்தனர். பின் கபில்தேவ் 2 இலக்குகள் எடுக்க எதிரணியை 255 ஓட்டங்கள் மட்டுமே பெறச் செய்து வெற்றி பெற்றனர்.[12] இதே உத்வேகத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியினை 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் எதிர்த்து விளையாடினர்[13]. பின் இரண்டாவது துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்களும் 17 இலக்குகளையும் 29.24 எனும் சராசரியோடு பெற்றார்.[14]
அணி வாரியாக
தொகுஎதிரணி | தேர்வுத் துடுப்பாட்டம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் | மொத்தம் | ||
---|---|---|---|---|---|
1 | மேற்கிந்தியத் தீவுகள் | 3 | 0 | 3 | |
2 | இங்கிலாந்து | 2 | 0 | 2 | |
3 | ஆத்திரேலியா | 1 | 0 | 1 | |
4 | இலங்கை | 1 | 0 | 1 | |
5 | தென்னாப்பிரிக்கா | 1 | 0 | 1 | |
6 | சிம்பாப்வே | 0 | 1 | 1 | |
மொத்தம் | 8 | 1 | 9 |
அணித் தலைவராக
தொகுஎதிரணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | முடிவில்லை | சமன் |
---|---|---|---|---|---|
ஆத்திரேலியா | 6 | 0 | 0 | 1 | 5 |
இங்கிலாந்து | 3 | 2 | 0 | 0 | 1 |
பாக்கித்தான் | 8 | 0 | 1 | 0 | 7 |
இலங்கை | 6 | 2 | 1 | 0 | 3 |
மேற்கிந்தியத் தீவுகள் | 11 | 0 | 5 | 0 | 6 |
மொத்தம் | 34 | 4 | 7 | 1 | 22[16] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kapil Dev – Player Webpage". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. http://content-usa.cricinfo.com/india/content/player/30028.html. பார்த்த நாள்: 17 March 2007.
- ↑ "This is my finest hour: Kapil Dev". The Sportstar Vol. 25 No. 31. 8 March 2002 இம் மூலத்தில் இருந்து 14 மே 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060514214418/http://www.tssonnet.com/tss2531/25310120.htm. பார்த்த நாள்: 8 February 2014.
- ↑ "Wisden Cricketer of the Century – Kapil Dev: The Master of All Crafts – Yahoo Cricket India". Yahoo Cricket India. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
- ↑ "Kapil Dev inducted into Hall of Fame". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 11 March 2010.
- ↑ Geoff Armstrong (2002). ESPN Legends of Cricket. Crows Nest, New South Wales: Allen & Unwin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86508-836-6.
- ↑ "Scorecard – Kapil's Debut Match". Cricinfo. http://www.cricinfo.com/db/ARCHIVE/1970S/1978-79/IND_IN_PAK/IND_PAK_T1_16-21OCT1978.html. பார்த்த நாள்: 27 March 2007.
- ↑ "Scorecard – Kapil Dev's Maiden 50". Cricinfo. http://www.cricinfo.com/db/ARCHIVE/1970S/1978-79/IND_IN_PAK/IND_PAK_T3_14-19NOV1978.html. பார்த்த நாள்: 27 March 2007.
- ↑ "Scorecard – Kapil Dev's Maiden Century". Cricinfo. http://www.cricinfo.com/db/ARCHIVE/1970S/1978-79/WI_IN_IND/WI_IND_T5_24-29JAN1979.html. பார்த்த நாள்: 27 March 2007.
- ↑ "Scorecard – Kapil Dev's Maiden 5 Wicket Haul". Cricinfo. http://www.cricinfo.com/db/ARCHIVE/1970S/1979/IND_IN_ENG/IND_ENG_T1_12-16JUL1979.html. பார்த்த நாள்: 27 March 2007.
- ↑ "Scorecard – Pakistan in India 1979/1980 Season". Cricinfo. http://www.cricinfo.com/db/ARCHIVE/1970S/1979-80/PAK_IN_IND/PAK_IND_T3_16-20DEC1979.html. பார்த்த நாள்: 27 March 2007.
- ↑ "Kapil Dev's maiden 10-Wicket in Match Haul". Cricinfo. http://www.cricinfo.com/db/ARCHIVE/1970S/1979-80/PAK_IN_IND/PAK_IND_T5_15-20JAN1980.html. பார்த்த நாள்: 27 March 2007.
- ↑ "Scorecard – India in West Indies 2nd ODI 1982/83 Season". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 17 March 2007.
- ↑ கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (May 2002). "Captaincy is about motivating the players". Sportstar. Archived from the original on 26 September 2007. பார்க்கப்பட்ட நாள் 17 March 2007.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Scorecard – Kapil Dev Saves a Test Match". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 17 March 2007.
- ↑ "Team records – Test matches – Cricinfo Statsguru – ESPN Cricinfo". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
- ↑ "Team records – Test matches – Cricinfo Statsguru – ESPN Cricinfo". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.