உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவி பாடலாம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
BalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:58, 7 மார்ச்சு 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பக்க மேம்பாடு + பத்தி சீராக்கம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்பா வகை - 83

நேரிசை வெண்பா

நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை முன்பு கவனித்தோம். அந்தப் பாவில் எதுகையை நோக்கி இரண்டு வகை உண்டு. முதல் இரண்டடியும் தனிச் சொல்லும் பின் இரண்டடியும் யாவும் ஒரே எதுகையாக அமைந்தால் ஒரு விகற்ப நேரிசை வெண்பா என்று பெயர் பெறும்.

முந்தையோர் பாடிவைத்த முத்தமிழ்நூல் தம்மையெல்லாம் அந்துமுதற் பூச்சி அழிக்காமல்-வந்தெடுத்துத் தந்தபெரு வள்ளல் தமிழ்ச்சாமி நாதகுரு செந்தமிழ்த்தாய் பெற்றமணிச் சேய்.

இந்தப் பாட்டில் எல்லாம் ஒரெதுகையாக அமைந் திருப்பதால் இது ஒரு விகற்ப நேரிசை வெண்பா ஆகும்.

முதல் இரண்டடியும் தனிச் சொல்லும் ஒரெதுகை யாகவும், பின் இரண்டடிகள் ஓரெதுகையாகவும் வந்தால் அது இருவிகற்ப நேரிசை வெண்பா என்று பெயர் பெறும்.

‘காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத் தாமரையின் செந்தேன் தளையவிழப்-பூமடந்தை தன்னாட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ் நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.”

இந்த நளவெண்பாப் பாட்டு இருவிகற்ப நேரிசை வெண்பா. இவ்வாறன்றி வேறு எப்படி எதுகை மாறி வந்தாலும் அது நேரிசை வெண்பா ஆகாது; இன்னிசை வெண்பா என்னும் பெயர் பெறும்.

வேறு ஒரு முறையில் நேரிசை வெண்பாவை இரண்டு வகையாகப் பிரிப்பதுண்டு. அவை இரு குறள் நேரிசை வெண்பா ஆசிடையிட்ட நேரிசை வெண்பா என்ற பெயர் பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/84&oldid=655923" இலிருந்து மீள்விக்கப்பட்டது