186 பாதியின்-புதிய-ஆத்திசூடி-O
சில முக்கியமான செய்திகளைக் கூறுகிறார். அத்துடன் பழைய வேதங்ளைப் பற்றி நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டியதும் மிக அவசியமாகும்.
வேதங்கள் நான்கும் நான்மறை எனப் பெயர் பெற்று இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக பண்பாட்டின் தொடக்கமாக வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. வேதங்களைப் பற்றி இந்திய நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் உள்ள அறிஞர்கள் பலரும் ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறார்கள்.
வேதங்கள் இந்து மதத்தின் வேர். அவை தனியாக வேத பாஷையில் உள்ளன. வேதங்கள் பிரமாண்டமான நூல் அவைகளில் உள்ள கருத்துக்கள் பலவும் சாதாரண மக்களுக்கும் மிகவும் பயன்படுபவை. வேதங்களை இன்னும் அதிகமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். வேதங்களை கோத்து வைத்தான் - அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை” என்று பாரதி கண்ணன் பாட்டுகளில் குறிப்பிடுகிறார்.
வேதங்களைப் பற்றி பாரதி மிக உயர்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்பது அவருடைய பல பாடல்களிலிருந்த தெரிய வருகிறது.
'ஒன்று பரம் பொருள் நாமதன் மக்கள் உலகின் பக் கேனியென்றே - மிக நன்று பல்வேதம் வரைந்த கை பாரத நாயகி தன் திருக்கை”
என்று பாரதி கூறுகிறார்.
இன்னும் பாரதத் தாயைக் குறிப்பிட்டு நாவினில் வேதமுடையாள்” என்று வேதங்கள் பாடுவம் காணிர்' என்று பாடுகிறார். அரசியலிலும் சரி, பிற இயல்களிலும் சரி தர்மமே வெற்றி பெறும் என வேதம் கூறுவதாக எடுத்துக்காட்டி ' ...... புவி மிசைத் தருமமே அரசியலதனிலும் பிற இயலனைத்திலும் வெற்றி தரும் என வேதம் சொன்னதை மற்றும் பேண முற்பட்டு நின்றார், பாரத மக்கள் .... ' என்று பாரதி பாடுகிறார்.