உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
Info-farmerBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:42, 22 பெப்பிரவரி 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (+ பத்திகள் சீராக்கம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

நளனுடைய கதையை பாண்டிய நாட்டைச் சேர்ந்த புகழேந்தி என்னும் தமிழ்ப்புலவன் வெண்பா பாட்டில் பாடியுள்ளான். அந்த நூலுக்கு நளவெண்பா என்று பெயர். நளன் ஆண்ட நிடத நாட்டைப் பற்றிக் கூறும் போது புகழேந்தி அது இல்லாமையும் கல்லாமையும் இல்லாத நாடு என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

நளன் சூதாட்டத்தில் நாட்டை இழந்து விட்டான். தனது மனைவி மக்களுடன் கானகத்திற்குச் சென்றான். காட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மனைவியையும் குழந்தைகளையும் காட்டில் தனியாக விட்டு விட்டு ஓடிவிட்டான்.

நளனுடைய மனைவி தமயந்தி காலையில் எழுந்து கணவனைக் காணாமல் தனது குழந்தைகளை வைத்துக் கொண்டு பல்வேறு ஆபத்துகளிலிருந்து தப்பி தனது தந்தை வீட்டிற்குச் சென்று அந்த நாட்டில் தங்கியிருந்தாள்.

நளன் மாறுவேடத்தில் வேறு நாட்டிற்கு சென்று அந்த நாட்டு அரசனிடம் சாரதியாக வேலை பார்த்து வந்தான். ஒரு நாள் அந்த அரசனுடன் நளன் தமயந்தியின் தந்தை நாட்டிற்குச் சென்றான். அங்கு நளன் தனது மக்களைச் சந்திக்கிறான். அவர்களுக்கு மாறுவேடத்தில் இருந்த தங்கள் தந்தையை அடையாளம் தெரியவில்லை. நளன் அக்குழந்தைகளை நீங்கள் யார் மக்கள், உங்கள் நாடு எது என்று கேட்க, அவர்கள் நாங்கள் நளராஜன் மக்கள், நாட்டை இழந்துவிட்டோம், எங்கள் நாட்டை வேற்றரசர் ஆள்கிறார்' என்று பதில் கூறினார்கள், நளன் அவர்களிடம், “உங்கள் நாட்டை வேற்றரசர் ஆள நீங்கள் சும்மா இருக்கலாமா? என்று உணர்ச்சி ததும்பக் கேட்டதாகப் புலவர் புகழேந்தி குறிப்பிடுகிறார்.

தருமன் சூதாட்டத்தில் நாட்டை இழக்கிறான். பாரதியின் கோபம் பொங்கி எழுகிறது. ஆயிரங்களான நீதி அவையுணர்ந்த தருமன் தேயம் வைத்திழந்தான். சீச்சி சிறியர் செய்கை செய்தான் என்று கூறுகிறார்.

இந்திய மக்கள், ஆங்கிலேயர்களி ம் தங்கள் நாட்டை இழந்து விட்டார்கள். நமது நாடு பாரத நாடு. இது பழம் பெரும்