உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
TamilBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:40, 5 பெப்பிரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (மெய்ப்பு பார்க்கப்படாதவை: "689 இப் பூ மங்கிய வெண்ணை ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்�)
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

689 இப் பூ மங்கிய வெண்ணை நிறங்கொண்டது. இதனாலும் இதன் இலையினது புற வெண்மையாலும் இதனை வெள்ளை பேசில் (WHITE BASI) என்றனர். செடியியற் பெயரான 'ஒசிமம் ஆல்பம்’ என்பதில் ஆல்பம் (AIBIM) என்னும் சொற்கு வெண்மை நிறக் குறிப்பு உண்டு. நற்றிணையிற் கபிலர் இதனை முல்லைநிலத் தலைவன் கண்ணியாகச் சூடியதைப் பாடினார். 'குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்." - என்னும் அடிகள் இதனைக் கண்ணியாகச் சூடியதைக் குறிப்பதுடன் 'கடத்தவும்" என முல்லை நிலத்ததாகவும் காட்டுகின்றது. "குல்லையம் பறவு’ என்னும் சிறுபாணாற்றுப் படைத்தொடரும் இது முல்லை நிலத்தது என்பதற்குச் சான்றாகின்றது. குறிஞ்சிப் பாட்டிலும் இடம்பெற்றுள்ளது. இடைக்காலப் பிற்கால இலக் கியங்களில் இல்லை. - கடும் வெப்பத்தைக் குறிக்கக் குல்லை கரியவும்" - என இது வாடிக் கருகுவது குறிக்கப்பட்டது. மாமூலனார், வடுகர் தம் கண்ணியாகக் கொண்டதை 'குல்லைக் கண்ணி வடுகர்’ என்றார். தமிழினத்தின் கிளை யினராம் வடுகர் கண்ணிமல’ ராண்மை குறிக்கத்தக்கது. 95. திருமாலிய இலைமலர். துழாய். 'துழாய், துளவு, துளவம் என்பன சங்கப் பாடற் சொற். கள். பின்னிரண்டும் முன்னதன் திரிபும் வளர்ச்சியும். துளசி என்பது பின் வந்தது. இஃதொரு குறுஞ் செடி என்னுமளவில் நிலப்பூ குறிஞ்சிப்பாட்டின் 'துழாய்"க்கு நச்சர் 'திருத்துழாய்ப் பூ" என்று பூவாக எழுதினார். இதன் இலையும் மலரளவான சிறப்புடையது. இரண்டும் மணமும் காரச் சுவையுங்கொண்டவை 1 நற் 1875 : 5, 6, 5 பொருந் 234. 2. கலி : 168 : 2, 3, 6 குறு 11 8 சிறுபாண் 29, 7 குறி. பா 90, 4 குறி. பா 78. -

  • 44