உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
TamilBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:56, 5 பெப்பிரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (மெய்ப்பு பார்க்கப்படாதவை: "144 உரையாசிரியர்கள் முல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்�)
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 உரையாசிரியர்கள் முல்லையின் இடத்திலும், தனியாகவும் மல்லிகையைப் பேசுகின்றனர். முல்லை இனத்து மலர்கள் சில வற்றை 'இது மல்லிகை விசேடம்' என்பர். நிகண்டுகளில் பிங்கலமும் சூடாமணியும் மெளவலை வனமல்லிகை என்கின்றன. இவையெல்லாம் மல்லிகை பையப்பையப் பெற்ற ஆட்சியைக் காட்டுகின்றன. : . ஆயினும், முல்லையும் மல்லிகையும் பொதுவில் நிறத் தாலும், இதழ் அமைப்பாலும் ஒரளவில் மணத்தாலும் ஒத்தவை. ஆனால், முல்லை கொடிப் பூ. மல்லிகை குற்றுச் செடியாய்ப் பின் வளைந்து படர்வது, நிறத்தில் முல்லையினும் மல்லிகை வெண்மையானது. இது கருதியே சிலம்பு, வெண் மல்லிகை", "வெண் தோட்டு மல்லிகை" என்றது. மணத்தில் சிறு வேறுபாட்டைக் காணலாம். மல்லிகை மாலதி என்ற பெயராலும் குறிக்கப்படும். முல்லை அப்பெயரால் குறிக்கப்படுவதன்று. இருப்பினும் மல்லிகை முல்லை இனத்து மலர். காலப்போக்கில் மல்லிகை எனுஞ்சொல்லமைப்போடு சில் மலர்கள் பேசப்பட்டன. இச்சொல் அமைப்பன்றி வடிவ அமைப்புப் பொருத்தமோ சிலவற்றிற்கு நிறப்பொருத்தயோ மணப்பொருத்த மோ இல்லை. அவ்வாறு குறிக்கப்படும் மலர்கள், அந்தி மல்லிகை - செடி - புனல் வடிவ மலர் மரமல்லிகை - மரம் - புனல் வடிவ மலர் பவளமல்லிகை - குறுமரம் - சமதள நான்கிதழ் மலர் நாக மல்லிகை - மரம் - விரியிதழ் மலர் இம்மல்லிகைப் பெயரால் சீவக சிந்தாமணியில் மல்லிகை மாலை என்றொரு மங்கை வருகின்றாள். விளக்குத் தண்டிற்கு "மல்லிகை என்ற பெயரைப் பிங்கல நிகண்டு தருகின்றது. . இக்காலத்தும் பெண்களுக்கு மல்லிகா என்ற பெயர் விருப்போடு இடப்படுகின்றது. வடமொழித் தொடர்புடன் "மல்லிகார்ச்சுனம்' என்றொரு மரம் குறிக்கப்படும்,