உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
RUPA MANGALA R (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:00, 18 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (மெய்ப்பு பார்க்கப்படாதவை)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

603


யமைப்பிற்கு மாறுபட்டது. இஃதொன்று இரண்டும் வெவ் வேறானவை எனக் காட்டுகின்றது. முருக்கிற்குக் கூறப்பட்ட புலிநகம், நெருப்பு, பவளம், முதலியன கவிர்க்கு எங்கும் கூறப்படவில்லை. பொருந்துவன வாகவும் இல்லை. - பிற்காலத்தில் முருக்கு இதழ் மகளிர் வாய்க்குக் கூறப்பட்டி ருப்பினும், முற்கால இலக்கியங்களில் ஒரிடத்தில் மட்டும், செவ்வாய்' என வாய் நிறத்தளவிற்குமட்டும் அமைந்துள்ளது. கவிரின் இதழே மகளிர் செவ்வாய் இதழிற்கு மிகுதியாகக் காட்டப்பட்டுள்ளது. கவிர் இதழ் அன்ன காண்பின் செவ்வாய்” (அகம் 3:15) கயல் கண் ; கவிர் இதழ்’ (பரி : 22 : 29) "கரை நின்றுதிர்ந்த கவிர் இதழ்ச்செவ்வாய்' (சிலம்பு: f3 : 165) கவிரோ இதழோ (மணி : 6: 123) --எனப் பலரால் கவிரே மகளிர் வாயிதழிற்குக் காட்டப்பட்டுள்ளது. கண்ணகியார் கோட்டம் அமைந்த செங்கோட்டு நெடு வரையில் உள்ள சிறுநீர்நிலைக் கரையில் கிடக்கும் சிவப்பு நிறக் கற்களை இளங்கோவடிகளார். கவிர் இதழ்க் குறுங்கல்" 1 -என அக்கற்கள் இக்கவிரின் இதழ் போன்றன என்றார். ஒருவகை நாரையின் தூவியிறகு ஒரளவு செம்மையுடன் கவிர் இதழின் வடிவத்தில் இருப்பதால் வாயிலான்தேவன் என்பார் அதற்கு உவமை கூறியுள்ளார். 2 இவ்வுவமைகள் பலவும் கவிரைத் தனியொரு மலராகவே காட்டுகின்றன. பல உவமைகள் இருப்பினும் சேவலின் நெற்றிக்கொண்டை உவமை மிகப் பொருந்துவதாகி இதனை சேவற்கொண்டை மலர்' என்று சொல்ல வைக்கின்றது. முருக்கும் கவிரும் வேறு வேறு என்பதைத் திரு பி. எல். சாமி அவர்களும் தம் நூலில் காட்டியுள்ளார்கள்.8 செடியியலாரும் இரண்டையும் வேவ்வேறாகவே கொண்டு தனித் தனிப் பெயரிட் டுள்ளனர். - 1. சிலம்பு 80 : 47. * : * : * . . 2 குறு 108 ; சங்க செடிகொடிகள் பக்கம் 96-98