534
சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் பிடவம்' என்பதற்குக் குட்டிப் பிடவம்' என்றெழுதினார். இதனை ஏற்றுத் தமிழ்த்தாத்தா உ. வே. சா. அவர்களும் இதனைக் 'குட்டிப்பிடவம் என்னும் கொடி என எழுதினார்கள். அஃதன்று. குட்டிப்பிடவம் வேறு. அது கொடிதான். இப்பிடவம் சிறு மரமே.
இது:
" ... ... ... ... ... ... ...அகல் நெடும் புறவில்
சேனாறு பிடவம்'2 -என்றபடிமுல்லை நிலத்தது. முல்லை, காயா, கொன்றை முதலிய முல்லைநிலப்பூக்களுடன் வைத்துப் பேசப்படுவது. இவற்றால்,
'ஆவணி கொண்டன்றாற் புறவே'3 -எனவும் முல்லைப் புறவு சிறப்பிக்கப்படும் என்று குறிக்கப்பட்டது.
'பிடவம் மலரத் தளவம் நனையக்
கார் கவின் கொண்ட கானம்' -என இது பூக்கும் பருவத்தைக் கார்ப் பருவமாகக் காண்கின்றோம். வம்பமாரிக்கு மலரும் மலர்களோடு பிடவமும் ஒரு முட்டாளானது.
'வுண் இவாய் திறப்ப விண் ட பிடவம்
மாலை அந்தி' - என்னும் அடிகள் இது மாலைக்கால மலர் என்பதைக் கூறுகின்றன.
இம்மலர்பற்றிய வரலாற்று அடிகளாக,
'சிறுகரும் பிடவின் வெண் டலைக் குறும்புதல் -
கண்ணியின் மலரும் தண்ணறும் புறவு" - என்பவை அமைகின்றன. பிடவு சிறியது. அரும்பு சற்றுக் கரும் புறவிதழை உடையது. அதன் தலைப்பகுதி மலர் விரிவில் வெண்மை தோன்றும். தழைத்திருக்கும். கொத்தாகக் கண்ணிபோல் மலரும் முல்லைநிலப்பூ - என இதன் விளக்கத்தைப் பெறுகின்றோம்.
1 மணி 8 188 குறிப்புரை 4 ஐங் : 499 :1, 2. 2 ఇత, பச : 24, 25, நற் : 238 : 1, 2, s ஐங் 412 : 3, . . . - .ே அகத்: 84: 1, 2,