127
"இன்னும் இருந்த அழகின் சிரிப்பையும்
எழுதி முடிக்க இருபது ஆண்டுகள் கழியும்?? என்றார். -
மேல் எல்லை எவ்வளவில் உண்டோ அவ்வள்வில் நான் தமிழகத்தில் போற்றப் பட்டுள்ளேன். தமிழகம் போற்றி னால் உலகம் அதனை ஏற்றுக் கொண்டது போல்தான். இருந்தாலும் உலக அளவில் நான் எந்த இடத்தில் இருகின்றேன்? உலக மொழியாம் ஆங்கிலத்தின் சொற்களை எல்லாம் பொருளுடன் தொகுத்துள்ள வெப்சிடெர்ஃச் அகரமுதலி" (WEBSTER'S DICTIONARY) முதல்தொகுதியை அன்புகூர்ந்து திருப்புக! அதன் பக்கம் 875இல் நிறுத்துக! உங்களது கண்பார் வையை 3 ஆவது பத்தியில், ஈற்றிலிருந்து 4ஆவது வரியில் பதித்திடுக: -
“FLOWER = BEST OF ANYTHING”
'பூ = எந்தப் பொருளிலும் சிறந்தது-என இருக்கின் றதா? இஃது எனது புகழின் மாணிக்கச் சுருக்கம்.
அப்படியே பாவேந்தர் பாரதிதாசனாரிடம் வருக! அவர் தமது குயில் பாட்டு-தொகுப்பில் 19 ஆவது பக்கத்தை நீட்டு வார்; நான்காவது பாடலைக் காட்டுவார்:
'கொள்ளை கொள்ளை கொடிமுல்லை
கோத்த முத்தும் இணையில்லை' -இஃது எனது புகழ் எல்லை. இஃது எனது இனத்து மலர் ஒன்றை வைத்துக் காட்டும் வரலாற்று ஒளி.
வரலாற்று ஒளியில் வைக்க முல்லையை ஏன் வைத்து முடிக்கின்றாய்? -என்று விவைலாம். ஏற்கத் தக்க வினாதான்.
ஏதாவது ஒன்றைச் சொல்லித்தானே முடிக்கவேண்டும் என்று முல்லையைக் குறிக்கவில்லை. இதனில் ஓர் இன்றியமை யாமை உள்ளது. அஃது என்ன இன்றியமையாமை?
உலகில் நான் ஆயிரக்கணக்கில் உள்ளேன். அக்கணக் கிலும் பயன் கொள்ளப்படும் என் இனத்தார் நூற்றுக் கணக்
227 குயில் : அன்றார்ப்பாட்டு 182-184