உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சுக்தா பனிகிரகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சுக்தா பனிகிரகி
பிறப்பு24 ஆகத்து 1944
பெர்காம்பூர்
இறப்பு24 சூன் 1997 (அகவை 52)
புவனேசுவரம்

சஞ்சுக்தா பானிகிரகி (Sanjukta Panigrahi) (ஆகஸ்ட் 24, 1944 - ஜூன் 24, 1997) [1] இந்தியாவிலிருந்து வந்த ஒரு நடனக் கலைஞர் ஆவார், இவர் இந்திய பாரம்பரிய நடனமான ஒடிஸியின் முன்னணி நடனக் கலைஞராவார்.சஞ்சுக்தா இந்த பண்டைய பாரம்பரிய நடனத்தை சிறு வயதிலேயே தழுவி அதன் மகத்தான மறுமலர்ச்சியை உறுதிசெய்த முதல் ஒடியாப் பெண் என்ற பெருமையை பெற்றவர் ஆவார். [2] [3]

ஒடியா நடனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (1975) விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் சங்கீக நாடக அகாதமி விருதையும் இவர் பெற்றுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒடிஸி நிகழ்ச்சிகளை வழங்குவதைத் தவிர, சஞ்சுக்தா பானிகிரகி, பல்வேறு நாடுகளுக்கான அரசாங்கத்தின் கலாச்சாரக் குழுவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் (1969), ஐக்கிய இராச்சியம் (1983), இஸ்ரேல், கிரேக்கத்தில் டெல்பி சர்வதேச விழா ( 1989) உட்பட, இவர் பதினொரு வாரங்கள் பிரான்சிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் பாரிஸில் நடந்த சர்வதேச இசை விழாவில் பங���கேற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

[தொகு]

இவர் ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தின் பெர்ஹாம்பூரில் உள்ள பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்தார். [4]இவரது பெற்றோர் அபிராம் மிஸ்ரா மற்றும் சகுந்தலா மிஸ்ரா ஆவர்.

இவர் சிறு குழந்தையாக இருந்தபோது, காய்கறியை நறுக்குவது அல்லது விறகு வெட்டுவது போன்ற எந்த தாள ஒலிக்கும் உள்ளுணர்வாக நடனமாடத் தொடங்குவார். இவரது தாயார் பாரிபாடாவைச் சேர்ந்தவர். மேலும், நீண்ட காலமாக சாவ் நாட்டுப்புற நடனத்தை ஆதரித்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவர் தனது மகளின் திறமையை அடையாளம் கண்டுகொண்டார், மேலும் சஞ்சுக்தாவின் தந்தையான அபிராம் மிஸ்ராவின் எதிர்ப்பையும் மீறி இவரை ஊக்குவித்தார். எதிர்ப்பின் காரணம் என்னவெனில், அந்த நாட்களில் இந்த வகை நடனம் பொதுவாக மஹாரிஸ் என்று அழைக்கப்படும் கோயிலில் நடனமாடும் சிறுமிகளால் நிகழ்த்தப்பட்டது. ஆண் நடனக் கலைஞர்கள் கோட்டிபுவாஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த பெண்கள் தென்னிந்திய கோவில்களின்தேவதாசிகள்போல இருந்தனர்.

பயிற்சி

[தொகு]

தனது தாயின் முயற்சியின் பேரில், தனது நான்கு வயதில் கேளுச்சரண மகோபாத்திராவிடம் நடனத்தைக் கற்கத் தொடங்கினார். 1950–1953 காலப்பகுதியில் பிசுபா மிலன் என்பவரால் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக இவர் சிறந்த குழந்தைக் கலைஞராக மதிப்பிடப்பட்டார்.

ஆறு வயதுச் சிறுமியாக இவர் நடனமாடிய ஒரு நிகழ்ச்சியில், அவர் மேடையை விட்டு வெளியேற மறுத்து, நேரம் முடிந்த பிறகும் தொடர்ந்து ஆற்றலுடன் நடனமாடினார். நடனத்தை நிறுத்த இவருடைய அம்மா கூச்சலிட்டு ஏமாற்ற வேண்டியிருந்தது. ஒன்பது வயதில், கல்கத்தாவில் உள்ள குழந்தைகளுக்கான லிட்டில் தியேட்டரின் ஆண்டு விழாவில் இவர் தனது நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார். [5]

இவர், 1952 இல் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் முதல் பரிசை வென்றார். இவரது வெற்றிக்கு ஊக்கமளித்த இவரது பெற்றோர், சிறந்த நடன பயிற்சிக்காக, சென்னையில் உள்ள கலாசேத்திராவிற்கு அனுப்ப முடிவு செய்தனர். ருக்மிணி தேவி அருண்டேலின் வழிகாட்டுதலின் கீழ் இவர் தனது பாடங்களைத் தொடர்ந்தார். அடுத்த ஆறு வருடங்களுக்கு மேலாக இவர் அங்கு தங்கி, பரதநாட்டியம், கதகளி நடனத்தில் 'நிருத்யபிரவீண்' பட்டம் பெற்றார். அதன்பிறகு, அவர் 'கலாசேத்ரா பாலே குழுவின்' உறுப்பினராக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சுற்றுப்பயணம் செய்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Sanjukta at odissivilas". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-07.
  2. "Sanjukta: the danseuse who revived Odissi". United News of India. The Indian Express. 25 June 1997. Archived from the original on 17 April 2000. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
  3. Sanjukta Panigrahi, Indian Dancer, 65 த நியூயார்க் டைம்ஸ், 6 July 1997.
  4. Publications, Europa (2003). The International Who's Who 2004. Routledge. p. 1281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85743-217-7.
  5. Sanjukta Panugrahi mapsofindia.

வெளி இணைப்புகள்

[தொகு]
காணொளி இணைப்புகள்

வார்ப்புரு:Padma Award winners of Odisha

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சுக்தா_பனிகிரகி&oldid=3552682" இலிருந்து மீள்விக்கப்பட்டது