1709
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1709 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1709 MDCCIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1740 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2462 |
அர்மீனிய நாட்காட்டி | 1158 ԹՎ ՌՃԾԸ |
சீன நாட்காட்டி | 4405-4406 |
எபிரேய நாட்காட்டி | 5468-5469 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1764-1765 1631-1632 4810-4811 |
இரானிய நாட்காட்டி | 1087-1088 |
இசுலாமிய நாட்காட்டி | 1120 – 1121 |
சப்பானிய நாட்காட்டி | Hōei 6 (宝永6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1959 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4042 |
1709 (MDCCIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு (நெட்டாண்டு அன்று) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 6 - 500 ஆண்டுகளின் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் பெரும் பனிக்காலம் ஆரம்பமாகி, மூன்று மாதங்கள் வரை நீடித்தது.[1] பிரான்சில் அத்திலாந்திக்குக் கரை, செய்ன் ஆறு ஆகியன உறைந்தன. பாரீசில் மட்டும் 24,000 பேர் வரை இறந்தனர். மிதக்கும் பனி வடகடல் வரை எட்டியது.
- சனவரி 10 - இங்கிலாந்தின் முதலாம் ஏபிரகாம் டார்பி கோக் எரிபொருளைப் பயன்படுத்தித் தனது ஊதுலையில் வார்ப்பிரும்பை உருவாக்கினார்.[2][3][4]
- மே - பிரித்தானியாவுக்குள் முதற் தடவையாக செருமானிய பாலத்தீனுகள் ஏதிலிகளாக உள்நுழைந்தனர்.[5]
- சூன் 27 - பெரும் வடக்குப் போர்: உக்ரைன், உருசியாவின் முதலாம் பீட்டர் பேரரசன் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சைத் தோற்கடித்தான்.
- டிசம்பர் 25 - இலண்டனில் இருந்து 4,000 பேரை ஏற்றிக் கொண்டு 10 கப்பல்கள் நியூயோர்க்குக்குப் புறப்பட்டன.
- மெய்ப்பாத புராணிகர் திருப்பைஞ்ஞீலிப் புராணம் என்னும் நூலை 821 செய்யுள்களால் இயற்றினார்.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 30 - ஆனந்தரங்கம் பிள்ளை, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளர், தமிழில் நாட்குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் (இ. 1761)
- செப்டம்பர் 18 - சாமுவேல் ஜோன்சன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1784)
- டிசம்பர் 18 - எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசியாவின் பேரரசி (இ. 1762)
- கணபதி ஐயர், ஈழத்து மரபுவழி நாடகங்களின் முன்னோடி (இ. 1794)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pain, Stephanie. "1709: The year that Europe froze." New Scientist, 7 February 2009.
- ↑ Mott, R. A. (5 சனவரி 1957). "The earliest use of coke for ironmaking". The Gas World, coking section supplement 145: 7–18.
- ↑ Raistrick, Arthur (1953). Dynasty of Ironfounders: the Darbys and Coalbrookdale. London: Longmans, Green. p. 34.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. p. 292. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Gardiner, Juliet; Wenborn, Neil (ed.) (1995). The History Today Companion to British History. London: Collins & Brown. p. 577. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85585-178-4.
{{cite book}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)