வேம்பு
வேம்பு | |
---|---|
![]() | |
வேம்பு, பூவும் இலைகளும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Sapindales
|
குடும்பம்: | Meliaceae
|
பேரினம்: | |
இனம்: | A. indica
|
இருசொற் பெயரீடு | |
Azadirachta indica A.Juss., 1830[1] | |
வேறு பெயர்கள் [1][2] | |
|


வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூவில் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது.
காப்புரிமை
[தொகு]1995ல் யுரோப்பிய காப்புரிமைக் கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி 2000 ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக் கழகம் தீர்ப்பளித்தது.
வேப்பம் மலர்
[தொகு]- வேம்பு, வேப்பம் பூவைக் குறிக்கும். பாண்டிய வேந்தரின் குடிப்பூ வேப்பம் பூ மாலை. பாண்டியனுக்குரிய அடையாளப் பூவான வேப்பம் பூவைப் புகழ்வது வேம்பு என்னும் துறை.
உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பயிர் பாதுகாப்பில் வேம்பும் மறுதாவரச் சேர்வைகளும் பரணிடப்பட்டது 2010-03-11 at the வந்தவழி இயந்திரம்
- வேப்பிலை
- அறுசுவை.காம்
- Invasiveness information from Pacific Island Ecosystems at Risk (PIER)
- Neem information from the Hawaiian Ecosystems at Risk project (HEAR)
- Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia. Contains a detailed monograph on Azadirachta indica (Neem; Nimba) as well as a discussion of health benefits and usage in clinical practice.