உள்ளடக்கத்துக்குச் செல்

விவிலிய காகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளீயட் நூல (Bibliothèque de la Pléiade) புத்தகம். விவிலிய காகிதத்தின் மெல்லிய தன்மை, பல பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை மிகவும் கச்சிதமாக இருக்க அனுமதிக்கிறது.

விவிலிய காகிதம் (Bible paper) என்பது இசுக்ரிட்டா காகிதம் என்றும் அழைக்கப்படுகிறது. இது அகரமுதலி போன்ற அதிகமான பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் மெல்லிய தரக் காகிதமாகும். தொழில்நுட்ப ரீதியாக, விவிலிய காகிதம் என்பது ஒரு வகையான மரக்கட்டை இல்லாத பூசப்படாத காகிதமாகும் . இந்த காகிதம் தரமானது. மெல்லியதாக இருந்தாலும் இதன் வலிமையை அதிகரிக்கப் பருத்தி அல்லது நாரிழைத்துணி இழைகளைக் கொண்டுள்ளது.

இது விவிலியம், கலைக்களஞ்சியங்கள் மற்றும் அகராதிகளை உருவாக்கப் பயன்படுகிறது. இத்துடன் சில புனைகதை புத்தகங்கள், பிளீயட் நூலகம் (Bibliothèque de la Pléiade) இக்காகிதத்தில் வெளியிட்டவை. ஆங்கில இலக்கியத்தின் நார்டன் ஆந்தாலஜி விவிலிய காகிதத்தைப் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது (தி நியூயார்க் டைம்ஸின் கட்டுரையாளர் இதை "விஸ்பி இரகசிய காகிதம்" என்று குறிப்பிடுகிறார்[1]).

மேற்கோள்கள்

[தொகு]
  • Matt T. Roberts and Don Etherington, Bookbinding and the Conservation of books: A Dictionary of Descriptive Terminology .

மேலும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவிலிய_காகிதம்&oldid=3735826" இலிருந்து மீள்விக்கப்பட்ட��ு