விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 12
Appearance
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 12 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.
- 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
- 1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.
- 1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிசு அணைக்கட்டு உடைந்ததில் 431 பேர் உயிரிழந்தனர்.
- 1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை (படம்) ஆரம்பித்தார்.
- 1940 – பனிக்காலப் போர்: பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.
- 1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
மா. இராசமாணிக்கனார் (பி. 1907) · சுந்தரிபாய் (இ. 2006) · ஓமக்குச்சி நரசிம்மன் (இ. 2009)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 11 – மார்ச்சு 13 – மார்ச்சு 14