பெந்தாரா புடாயா ஜகார்த்தா
பெந்தாரா புடாயா ஜகார்த்தா (Bentara Budaya Jakarta) என்பது இந்தோனேசியாவின் மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஜலான் பால்மேரா செலட்டன் 17 என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பண்பாட்டு நிறுவனம் ஆகும். இந்தப் பண்பாட்டு நிறுவனத்தில் ஒரு அருங்காட்சியகம் மற்றும் ஒரு கலைக்கூடம் ஆகியவை காணப்படுகின்றன. பெந்தாதா புடாயா திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த காட்சிக்கூடம் மூடப்பட்டிருக்கும், சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பெறும்போது இதற்கு விதிவிலக்கு உண்டு. காட்சிக்கூடத்தை பார்வையாளர்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம். அது அவர்களுக்காக எப்போதும் திறந்திருக்கும்.[1]
நிகழ்வுகள்
[தொகு]ஒரு பண்பாட்டு நிறுவனம் என்ற அடிப்படையில், பெந்தாரா புடாயா இந்தோனேசியாவின் பண்பாடு தொடர்பான நடவடிக்கைகள், பாரம்பரியம் முதல் நவீன இந்தோனேசிய கலைகள் வரை அனைத்திற்கும் பங்களிப்பினை செய்கிறது. இங்கு ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கிராஃபிக் கலை போன்ற நுண்கலைகளின் கண்காட்சிகள் நடத்தப்பெறுகின்றன. மேலும் நிகழ்த்து கலைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.[2]
வரலாறு
[தொகு]இந்த நிறுவனம் 26 செப்டம்பர் 1982 ஆம் நாளன்று கொம்பாஸ் கிராமிடியா குழுமத்தின் நிறுவனரான ஜாகோப் ஓடாமாவால் என்பவரால் நிறுவப்பட்டது ஆகும். ஆர்வமுள்ள கலை சேகரிப்பாளரான அவர், தன்னுடைய கலைப் படைப்புகளுடன் இந்தோனேசியக் கலைஞர்களின் ஓவியங்கள், சிற்பங்கள், பழங்கால சீன மற்றும் இந்தோனேசிய மட்பாண்டங்கள் மற்றும் வேயாங் போன்ற பாரம்பரிய கைவினைப்பொருட்கள் ஆகியவை பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.[1] அதைத் தொடர்ந்து, இவ்வாறான கலைப் படைப்புகளை சேகரித்து காட்சிப்படுத்தும் நோக்கில் ஒரு கட்டிடம் கட்ட முடிவினை செய்தார். இந்தோனேசிய கலைஞர்களின் படைப்புகளை மேம்படுத்துவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் ஒரு கலைக்கூடம் அமைக்கவும் மேலும் ஒரு கண்காட்சி மண்டபம் கட்டுவதற்கும் அவருடைய இந்த எண்ணம் உதவியது. இந்தோனேசிய தலைநகரில் கலை மற்றும் பண்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இந்த எண்ணத்தை அவர் செயல்படுத்த விரும்பினார். நாளடைவில், அதனுடைய கலாச்சார நன்கொடைக் கிளை மற்றும் கொம்பாஸ் கிராமிடியா குழுமத்தின் பெருநிறுவன சமூகக் கடப்பாட்டுடன் இணைந்து பெந்தாரா புடாயா ஒரு பண்பாட்டு நிறுவனமாக மாறியது. பெந்தாரா புடாயா நிறுவனத்தின் முதன்மைக் கண்காட்சி 1985 ஆம் ஆண்டில் லியோசாடாங்கின் ஸ்டுடியோ டிடிக் தேமு டெ��்பிகரின் பீங்கான் கண்காட்சி ஆகும். இது கலைஞர் ஆதி முனார்தியால் ஊக்குவிக்கப்பட்டதாகும்.[3]
பென்டாரா புடயா ஜகார்த்தா அருங்காட்சியகம் 26 ஜூன் 1986 இல் திறக்கப்பட்டது, இது யோககர்த்தாவில் பென்டாரா புடயாவின் மாதிரியாக இருந்தது.[2] ஜகார்த்தா கட்டிடத்தின் வடிவமைப்பு குடஸின் ஜாவானீஸ் ரீஜென்சியிலிருந்து ஒரு பாரம்பரிய வீட்டால் பாதிக்கப்பட்டது . இந்தோனேசிய பாரம்பரிய கலையில் தேர்ச்சி பெற்ற தேக்கு மர வீடு மிகவும் அலங்கரிக்கப்பட்ட மற்றும் உத்தமமாக வடிவமைக்கப்பட்ட தேக்கு மர வீடு. குடஸ் வீடு புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ரோமோ மங்குன்விஜயாவால் வடிவமைக்கப்பட்டது மற்றும் பூர்வீக ஜாவானியர்கள் முதல் இந்து மற்றும் சீனர்கள் வரை பல்வேறு கலை தாக்கங்களை வெளிப்படுத்தியது. இந்தோனேசிய மற்றும் வெளிநாட்டு கலைஞர்களுக்கான ஆதரவையும் ஆதரவையும் அளித்து, பென்டாரா புடயா ஜகார்த்தா கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், இந்தோனேசிய கலாச்சார காட்சியில் பங்களிப்பு செய்வதற்கும் பங்கேற்பதற்கும் அதன் நோக்கத்தை அமைக்கிறது.
ஓவியங்கள்
[தொகு]தற்போது பெந்தாரா புடாயா ஜகார்த்தாவில் பல்வேறு இந்தோனேஷியன் இசை மேதைகளின் மூலம் 573 எண்ணிக்கையிலான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த மேதைகளில் அஃபாண்டி, எஸ்.சுட்ஜோஜோனோ, ஹென்ரா குணவான், பசோகி அப்துல்லா, பகங் குசுடயர்ஜோ, ட்ரூபஸ் சுடர்சோனோ, ருடால்ப் பென்னட், எச். விதாயத், ஓட்டோ ஜெயா உள்ளிட்டோர் அடங்குவர்.[4] பெந்தாடாரா புடாயா நிறுவனத்தில் செவ்வியல் ஓவியங்களின் அதிக எண்ணிக்கையிலான சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் ஐ குஸ்டி நியோமன் லெம்பாட், ஐ கெட்டுட் ரெஜிக், ஐ குஸ்டி கெதுட் கோபோட், ஐடா பாகஸ் மேட், அனக் அகுங் க்டே சோப்ராட், தேவா புட்டு பெடில், ஐ குஸ்டி மேட் டோகாக், நான் கேதுட் நாமா, மற்றும் ஐ வயன் ஜுஜுல். ஆகியோருடைய கலைப்பொருள்கள் அடங்கும்.
பீங்கான் பொருள்கள்
[தொகு]இங்குள்ள கலைத் தொகுப்பில் யுவான், டாங், சங், மிங் மற்றும் சிங் வம்சங்களைச் சேர்ந்த 625 பழங்கால சீன பீங்கான் பாத்திரங்கள் அடங்கும்.[3] பூர்வீக இந்தோனேஷியன் பீங்கான் பொருள்களும் இதில் உள்ளன. அவற்றில் மட்பாண்டம் மற்றும் பீங்கான் போன்றவையும் காணப்படும். இந்த சேகரிப்புகள் அனைத்தும் சிங்காவாங், பாலி, ப்ளேரெட், டிரொவுலான் மற்றும் சயர்போன் ஆகியவை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவையாகும். பெந்தாரா புடாயாவின் சேகரிப்புகளில் பப்புவான் மற்றும் பாலினிய கலைப்படைப்புகளின் தொகுப்பில் 400 சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் 120 பழமையான வயங் கோலெக் கலைப்பொருள்களின் சேகரிப்புகளும் காணப்படுகின்றன. அவை புனகவான், பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகிய கதாபாத்திரங்களை வெளிப்படுத்துவனவாக உள்ளன. மர மேசைகள், நாற்காலிகள் மற்றும் அலமாரிகள் போன்ற பழங்கால தளவாடங்கள் இங்கு காட்சியில் உள்ளன. அவ்வாறே பல்வேறு வகையில் அமைந்த கை முத்திரைகளைக் கொண்ட புத்தரின் சிலைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[4] அனைத்து சேகரிப்புகளும் பெந்தாரா புடாயா ஜகார்த்தாவில் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்ற. பெந்தாரா புடாயா ஜகார்த்தா இந்தோனேசிய பண்பாட்டைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பிற கலை நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு கலைஞர்களுடன் ஒத்துழைப்புடன் கல்வியை வழங்குவதற்கும் இந்தோனேசிய மற்றும் சர்வதேச கலை மற்றும் பண்பாட்டினை மேம்படுத்துவதற்கும் உதவி புரிகிறது.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Museum Bentara Budaya Jakarta". InfoTempat.com. 19 April 2008. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 November 2014.
- ↑ 2.0 2.1 "Lembaga Bentara Budaya Jakarta". Bentara Budaya. Archived from the original on 12 November 2014. பார்க்கப்பட்ட நாள் 12 November 2014.
- ↑ 3.0 3.1 "Tentang Bentara Budaya". Kompas.com. November 2010. Archived from the original on 23 July 2014. பார்க்கப்பட்ட நாள் 12 November 2014.
- ↑ 4.0 4.1 "Bentara Budaya". Kompas Gramedia. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 November 2014.
- ↑ "Bentara Budaya Jakarta". Jakarta.go.id. பார்க்கப்பட்ட நாள் 12 November 2014.