பசோகி அப்துல்லா அருங்காட்சியகம், தெற்கு ஜகார்த்தா
பசோகி அப்துல்லா அருங்காட்சியகம் (Basoeki Abdullah Museum) இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஒரு கலை அருங்காட்சியகமாகும் . இந்த அருங்காட்சியகத்தில் சிலைகள், முகமூடிகள், பொம்மலாட்ட பொம்மைகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பசோகி அப்துல்லாவின் தனிப்பட்ட தொகுப்பும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சியில் உள்ளது.[1] இந்த அருங்காட்சியகத்தை கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் நிர்வகிக்கிறது.[2] இந்த அருங்காட்சியகம் கண்காட்சிகள் மட்டுமன்றி பட்டறைகளும் நடத்த பயன்படுத்தப்படுகிறது.[3]
வரலாறு
[தொகு]பசோகி அப்துல்லா அருங்காட்சியகம் செப்டம்பர் 25, 2001 ஆம் நாளன்று நிறுவப்பட்டது ஆகும். இந்த அருங்காட்சியகம் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான முதலாம் கெடே ஆர்ட���கா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[1][2] நவம்பர் 5, 1993 ஆம் நாளன்று இறந்த பசோகி அப்துல்லாவின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. பசோகி அப்துல்லா தனது ஓவியங்கள் மற்றும் அவரது தன் வீட்டின் தனிப்பட்ட சேகரிப்புகளை இந்தோனேசியா குடியரசு அரசாங்கத்திற்கு வழங்க விரும்புவதாக ஒரு செய்தியை விடுத்திருந்தார். 1998 ஆம் ஆண்டில் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள கியுங்கன் ராயா தெருவில் உள்ள வீடானது இந்தோனேசிய அரசாங்கத்திற்கு கலாச்சார இயக்குநரகம் மூலமாக ஒப்படைத்தது. பின்னர், அந்த கட்டிடம் ஒரு அருங்காட்சியகமாக பயன்படுத்தப்படும் நோக்கில் புதுப்பிக்கப்பட்டது.
சிறப்பு
[தொகு]ஜகார்த்தா சிறப்புப் பகுதியில் பல மதிப்புமிக்க அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் பார்வையிடத்தக்க ஏற்றவையாக அமைந்துள்ளன. கலை ஆர்வலர்களுக்கு பசோகி அப்துல்லா அருங்காட்சியகம் மிகவும் பார்க்க வேண்டிய இடமாக பரிந்துரைக்கப்படுகிறது. பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல பசோகி அப்துல்லா அருங்காட்சியகம் என்ற பெயர் கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் நிழல் பொம்மலாட்ட பொம்மைகள், சிலைகள், ஓவியங்கள், ஆயுதங்கள் மற்றும் முகமூடிகள் உள்ளிட்ட பசோகி அப்துல்லாவின் கலை சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த அருங்காட்சியகத்தை கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்தை வந்து பார்வையிடலாம். எனவே அனைவரும் இந்த அருங்காட்சியகத்தில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில், சுற்றுலாப் பயணிகள் இங்கு நடைபெறுகின்ற கருத்தரங்குகளிலும் மற்றும் பிற ஆய்வுகளிலும் சேர்ந்து கொண்டு தம்மை ஈடுபடுத்திக்கொள்ளலாம். அத்துடன் அவர்கள் கட்டுரைகள், சுயசரிதைகள் மற்றும் பட்டியல்கள் போன்ற ஏராளமான படைப்புகளை வெளியிடவும் வாய்ப்பு உள்ளது. மேலும் பட்டறையில் சேரவும் அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.[4]
சேகரிப்புகள்
[தொகு]அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டிடத்தின் அளவு சுமார் 600 மீ2 ஆகும். இந்த அருங்காட்சியகம் இரண்டு தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் நுணுக்கம் மற்றும் அமைந்துள்ள சூழல் ஆகியவை மிகவும் சுத்தமாக அமைந்துள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணி 2001 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. அதை முதலாம் கெடே ஆர்டிகா திறந்து வைத்தார். பசோகி அப்துல்லாவின் விருப்பப்படி இது அருங்காட்சியக வடிவம் பெற்றது. அவருடைய கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் மேற்கு சின்டாலாக் பகுதியில் பார்க்கப்பட வேண்டிய முக்கியமான இடமாகும். சுமார் 720 தொகுப்புகள் மற்றும் 3,000 நூல்கள் அல்லது இதழ்கள் உள்ளன. பார்வையாளர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்ததும், முதல் தளத்தில் பல அறைகளைக் காணலாம். இரண்டாவது தளத்தில் உள்ள காட்சிக்கூடத்தில் பசோக்கியின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[4]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Museum Basuki Abdullah". Indonesia. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.
- ↑ 2.0 2.1 "Museum Basuki Abdullah". asosiasimuseumindonesia.org. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.
- ↑ "Pameran dan Kegiatan". Indonesia: museumbasoekiabdullah.or.id. Archived from the original on 12 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 10 May 2014.
- ↑ 4.0 4.1 Basoeki Abdullah Museum in Cilandak Sub-district, South Jakarta City