உள்ளடக்கத்துக்குச் செல்

நினைவாற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நினைவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும். நண்பர் ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார். வெகுநேர ரயில் பயணம் என்பதால் அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரே நண்பரது எண்ணும் அவரது அலைபேசியில்தான் இருந்தது. அவருக்கு நினைவில் இல்லை. ஒருவழியாக நண்பரைத் தொடர்பு கொள்வதற்குள் படாதபாடு பட்டு விட்டார்.

நூற்றுக்கணக்கான எண்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞான வளர்ச்சிதான். ஆனால், அதன் காரணமாக நாம் நமது நினைவுத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்துக் கொண்டு வருகிறோம். எத்தனை பேருடைய தொலைபேசி எண்கள் நமக்கு நினைவில் இருக்கின்றன? [1]

நினைவாற்றல் வகைகள்

[தொகு]

நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது.

குறுகிய கால நினைவாற்றல்

[தொகு]

அத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது.

நீண்டகால நினைவாற்றல்

[தொகு]

நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.

மூளை பலசெய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகள் அந்த தகவல்கள் வெளிக்கொணரப்படாமல் போனால், கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. இதனால்தான் நாம் சந்திக்கும் சிறுவயதுத் தோழரிடம், “உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது; வரமாட்டேன் என்கிறது” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

குழந்தை பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பது, கேட்பது அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மூன்று வயதிற்கு மேல்தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன.

கற்றலில் நினைவாற்றல்

[தொகு]

கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் முக்கியமானதொரு பிரச்சினையாக விளங்குவது கற்பிக்கப்படுவதை விளங்கிக் கொள்ளச் செய்வதும் கிரகிக்கச் செய்வதுமாகும். மனப்பாடம் செய்த விடயங்கள் மறந்து விடுகின்றன. ஆனால் தெளிவான கிரகிப்புடன் கற்றவை நீண்ட காலம் நினைவில் நிற்கும். இந்த வகையில் கிரகித்தலுடன் விளங்கிக் கொள்வதும் அதனை நினைவார்த்தலுடன் மீட்பதும் கற்றல் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்காகக் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

கற்றல் செயற்பாட்டில் கிரகிக்கப்படுவதும் நினவிருத்தலும் குறித்துப் பல்வேறு கல்வியியலாளர்கள் தம் ஆய்வு முடிவுகளை முன்வைத்துள்ளனர். கற்றல் செயற்பாடொன்று நடைபெற்றுச் சற்று நேரத்திலிருந்து அதில் கணிசமான பங்கு மறந்து விடுகின்றது. பொதுவாக ஒரு சிறு பகுதி மட்டுமே மனதில் பதிந்து விடுகின்றது. இது குறித்த எபின்கவுஸ், போறியஸ் ஆகியோரின் ஆய்வுகள் முக்கியமானவை.

எபின்கவுஸ், போறியஸ்ஆய்வுகள்

[தொகு]

எபின்கவுஸ் (Ebbinghaus) 1885 இல் மேற்கொண்ட ஆய்வில் உணர்வு பூர்வமாக மனதில் நிறுத்த முடியாத 13 அட்சரங்களாலான 1200 சொற்களைக் கொண்ட நிரலொன்றை மாணவர் குழுக்களுக்கு மனனம் செய்ய வழங்கினார். குறித்த கால இடைவெளியில் நினைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வீதம் பதிவு செய்யப்பட்டது. இதே மாதிரியான ஒரு கற்கையை 1930ம் வருடம் போறியஸ் (Boreas) மேற்கொண்டார். இவர் 20 பாடசாலை மாணவர்களிடையே தனது ஆய்வை நடாத்தி அதன் சராசரியைப் பெற்றுக் கொண்டார். இது எபின்கவுஸின் பரிசோதனையை ஒத்ததாக இருந்தது. ஆயினும் போறியஸ் உணர்வூட்டலுடன் ஞாபகப்படுத்தக் கூடிய சொற்களைத் தன் ஆய்வுக்குப் பயன்படுத்தினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நினைவாற்றலு���்கு எல்லை இல்லை". march 15th 2014. பார்க்கப்பட்ட நாள் march 15th 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவாற்றல்&oldid=3852847" இலிருந்து மீள்விக்கப்பட்டது