உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கோ காய்ச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோயைப் பரப்பும் ஹையலோமா உண்ணி

கிரிமியன்-கொங்கோ இரத்தப்பெருக்குக் காய்ச்சல் (Crimean–Congo hemorrhagic fever) உண்ணிகளால் பரப்பப்படும் ஒரு வைரசுக் காய்ச்சலாகும். இது வளர்ப்பு விலங்குகள், வனவிலங்குகள் மற்றும் மனிதரையும் பீடிக்கக் கூடியது. கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் இந்நோய் பொதுவாகக் காணப்படுகிறது.மனிதரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோய் 30% உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது.


நோயின் தன்மை

[தொகு]
தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிரிமென்-கொங்கோ குருதிப்பெருக்கு காய்ச்சலில் அவதிப்படும் ஆண் நோயாளி

தொற்றுகுள்ளான உண்ணி கடித்ததிலிருந்து 1-3 நாள்களில் (இது இரத்தம்,இழையம் மூலமான தொற்றுக்கு 5-6 நாள்கள்) நோய் நிலமைகள் தோன்றும்.3-5 நாளில் குருதிப்பெருக்கு ஏற்படலாம். பசியின்மை, மன உளைச்சல்,எனத் தொடங்கி மூக்கில் குருதி வடிதல்,சிறுநீருடன் குருதி வெளியேற்றம்,வாந்தி, கறுப்பு நிறத்தில் மலம் கழிதல் என்பன காணப்படும். இறுதி நிலையில் ஈரல் வீங்குவதுடன் சிறுநீரகம், சுவாசத்தொகுதி என்பனவும் பாதிக்கப்படும். 9-10 நாளில் காய்ச்சல் குணமாகினாலும் இரண்டாம் வாரத்தில் 30% மரணம் நிகழலாம்.

தடுப்பு முறைகள்

[தொகு]

பாலூட்டி விலங்குகள் உண்ணித் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய பண்ணை நிலைமைகளில் விலங்குகள் இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்னர் உண்ணித் தொற்று நீக்கப்பட வேண்டும். உண்ணித் தொற்றைத் தடுக்கக் கூடிய நடைமுறைகளைக் கையாளலாம். உண்ணிகளை அப்பால் விலக்கக்கூடிய உபாயங்களைப் பயன்படுத்தலாம்.

மருத்துவம்

[தொகு]

குறிப்பான மருத்துவ முறைகள் கண்டறியப்படவில்லை. நோயின் தாக்கங்களுக்கான வைத்தியமே மேற்கொள்ளப்படும்.

நோய்ப் பரம்பல்

[தொகு]

ஹையலோமா உண்ணியே பொதுவான நோய்க்காவி ஆகும். சில வேளைகளில் பாதிப்புக்குள்ளான விலங்குகளை உணாவாகக் கொள்வதாலும் தொற்றுக்குள்ளான குருதி மற்றும் தொடுவதாலும் நோய் தொற்றுகிறது.

நோய்க்காரணி ஆசியா, கிழக்கு ஐரோப்பா,மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா, தென்னாபிரிக்கா, மடகஸ்கார் உள்ளிட்ட பட்டி போன்ற பிரதேசத்திலும் பரந்து காணப்படுகிறது. இவ்வைரசின் சுற்றாடல் காவியாக ஐர��ப்பிய முயல் மற்றும் இந்தியப் பெருச்சாளி காணப்படுகிறது. வளர்ப்பு விலங்குகளான ஆடு, செம்மறியாடு மற்றும் கால்நடைகளுக்கு இவை பரவுகின்றன. இவை குருதியில் அதிக வைரசை கொண்டிருந்தாலும் நோய்வாய்ப்படாமல் காணப்படும். தீக்கோழிகளைத் தவிர மற்றைய பறவைகள் இதற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது.


இந்தியாவில்

[தொகு]

2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள ஷேல்பி மருத்துவமனையில் ஒரு பெண் தீவிர காய்ச்சல் பிரிவில் சேர்க்கப்பட்டு ஏழு நாட்கள் கழித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கு பணிபுரிந்த செவிலியர் ஒருவருக்கும் இந்த நோய் பரவியது. அவரின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு (National Institute of Virology) அனுப்பி சோதனை செய்தபோது அது கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல் (சி.சிஹெச்.எஃப்) வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டது.[1]

வெளியிணைப்புகள்

[தொகு]
  1. வெடிகுண்டு: எதிர்கொள்ளத் தமிழகம் தயாரா?
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கோ_காய்ச்சல்&oldid=4026901" இலிருந்து மீள்விக்கப்பட்டது