ஆம் காஸ் பாக்
ஆம் காஸ் பாக் Aam Khas Bagh | |
---|---|
வகை | முகலாய தோட்டம் |
அமைவிடம் | பதேகாட் சாகிப் மாவட்டம், பஞ்சாப், இந்தியா |
ஆள்கூறு | |
திறப்பு | இது பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது |
உரிமையாளர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
நிலை | கீழே பழுதுள்ளது |
ஆம் காஸ் பாக் (ஆங்கிலம்:Aam Khas Bagh) எனப்படும் இது, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதேகாட் சாகிப் (Fatehgarh Sahib) எனும் ஊரில் அமைந்துள்ளது. தற்போது நெடுஞ்சாலை சத்திரமாக பயன்பாட்டில் உள்ள இது, இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவரான பாபரின் ஆட்சிக்காலத்தில் (1526-1530) கட்டப்பட்ட ஒரு ராசபாட்டை சத்திரத்தின் மிச்சமாகும்.[1]
கட்டிடக்கலை
[தொகு]பாபருக்கு பின்னர், இந்திய முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்த ஷாஜகான் என்பவர் புதுப்பிக்கப்பட்ட இந்த அரச சத்திரத்தில், பல மன்னர்கள் தில்லி மற்றும் லாகூர் இடையேயான பயணத்தின்போது தங்குவதற்காக பயன்படுத்தியுள்ளனர். மற்றும் அரச ஜோடிகள் அவ்வழியே செல்லும்போதும் மற்றும் லாகூரிலிருந்து திரும்பி வரும் போதும், இந்த பழைய கட்டிட வளாகத்தில் தங்கியிருப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். மேலும், இந்த வளாகத்தில் காணப்படும் சரத் கானா (Sarath Ghana) எனப்படும் காற்றை குளிரூட்டும் அமைப்புடைய கட்டிடக்கலை குறிப்பிடத்தக்க பிரசித்தி பெற்றுள்ளது.[2]
கலைநயம்
[தொகு]ஆம் காஸ் பாக் கட்டிடம், 'ஷீஷ் மஹால்' அல்லது 'தௌலத் கானா இ காஸ்' எனப்படும் மற்றொரு அமைப்பில் அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், மினாரெட்டுகள், தடாகங்கள், நீருற்றுகள், மாடங்கள் மற்றும் வண்ண ஓடுகள் போன்றவை காணப்படுகின்றன.[3]
திருவிழாக்கள்
[தொகு]ஒவ்வொரு ஆண்டும் ஷாஹீதி ஜோர் மேளா திருவிழாவின் போது இந்த தலத்தில், 'டி டீவார்' எனும் ஒலி ஒளி நாடகக்காட்சி நிகழ்த்தப்படுகிறது. சீக்கியர்களின் தியாக வரலாற்றை உணர்ச்சிபூர்வமாக சித்தரிக்கும் இந்த நிகழ்ச்சியை நாடுகாண் பயணிகள் கண்டுகளிக்க தவறாது கூடுவதாக அறியமுடிந்தது.[4]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "Aam Khas Bagh, Sirhind". www.nripunjab.gov.in (ஆங்கிலம்). 2013-09-21. Archived from the original on 2016-08-18. பார்க்கப்பட்ட நாள் 12 யூலை 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ www.nativeplanet.com | Aam Khas Bagh, Fatehgarh Sahib (ஆங்கிலம்) | வலைக்காணல்: யூலை 12 2016
- ↑ hindi.nativeplanet.com | आम ख़ास बाग़, फतेहगढ़ साहिब (இந்தி) | வலைக்காணல்: யூலை 12 2016
- ↑ malayalam.nativeplanet.com | ആം കാസ് ബാഗ്, ഫത്തേഹ്ഗര് സാഹിബ് (மலையாளம்) | வலைக்காணல்: யூலை 12 2016