2022 சகாங்கிர்புரி வன்முறை
2022 சகாங்கிர்புரி வன்முறை (2022 Jahangirpuri violence) இந்தியாவின் வடக்கு தில்லி பகுதியிலுள்ள சகாங்கிர்புரியில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாளன்று நடந்தது. அனுமன் செயந்தி நாளன்று இந்துக்கள் நடத்திய ஊர்வலத்தில் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையில் வகுப்புவாத மோதல் வெடித்தது.[1][2] ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது மற்றொரு தரப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டதால் கலவரம் ஏற்பட்டது. பல வாகனங்கள் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரத்தின் போது பாதுகாப்பிற்கு வந்த காவலர்கள்[3] உள்பட பலர் காயமடைந்தனர்.[4][5] வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.[6]
பிரதான குற்றவாளியான அன்சார் மற்றும் சிலருடன் சேர்ந்து இந்துக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் தொடங்கியது என்று காவல் துறையின் செய்திக் குறிப்பு அறிவித்துள்ளது.[7] இந்த வாக்குவாதம் இரு குழுக்களுக்கு இடையேயான வன்முறை மோதலாக உருவானது என்றும் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக்கொண்டு, வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்களை சேதப்படுத்தினர் என்றும் அக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.[4]
மேற்கோள்கள்
- ↑ "Jahangirpuri violence: History sheeter among 14 held". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-17. பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.
- ↑ "Jahangirpuri Violence: 22 Arrested, Main Accused's Birth Certificate Shows He's 16". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.
- ↑ "டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறையில் தொடர்புடையதாக 14 பேர் கைது - போலீஸ் பெருமளவில் குவிப்பு". பி.பி.சி. https://www.bbc.com/tamil/india-61134485. பார்த்த நாள்: 18 April 2022.
- ↑ 4.0 4.1 "Stone pelting, arson at Hanuman Jayanti rally, Delhi Police says situation under control". India TOday. பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.
- ↑ "டெல்லி; ஜஹாங்கிர்புரியில் போலீசார் மீது கல் வீச்சு, ஒருவர் கைது". தினத்தந்தி. https://www.dailythanthi.com/amp/News/TopNews/2022/04/18155048/Delhi-Bricks-thrown-at-police-team-in-Jahangirpuri.vpf. பார்த்த நாள்: 18 April 2022.
- ↑ https://www.hindutamil.in/news/india/789212-delhi-u-p-on-high-alert-after-violence-during-hanuman-jayanthi-procession.html
- ↑ Sur, Arnabjit (2022-04-17). "Jahangirpuri violence | Two juveniles among 23 held" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Delhi/jahangirpuri-violence-two-juveniles-among-23-held/article65329710.ece.