விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 16
Appearance
- 1898 – மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.
- 1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.
- 1939 – பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
- 1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.
- 1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் (படம்) இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வர��� கொல்லப்பட்டனர்.
- 1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
இராஜேஸ்வரி சண்முகம் (பி. 1940) · கோ. சாரங்கபாணி (இ. 1974) · அழ. வள்ளியப்பா (இ. 1989)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 15 – மார்ச்சு 17 – மார்ச்சு 18