உள்ளடக்கத்துக்குச் செல்

சண்முக கவசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

சண்முக கவசம் என்பது, முருகப் பெருமான் மீது பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக 30 பாடல்கள் அத்தொகுப்பில் அமைந்துள்ளது.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

இவர் ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய பாடல்களுள் சண்முக கவசம் மிகவும் புகழ்பெற்றது.

பாடல் சிறப்புகள்

அகர வரிசையில், -னாவில் தொடங்கும் இப்பாடல் தொகுப்பானது, முதல் வரையிலான உயிரெழுத்துகளையும், முதல் வரையிலான மெய்யெழுத்துகளையும் முதல் எழுத்துகளாக கொண்டு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்முக_கவசம்&oldid=3516172" இலிருந்து மீள்விக்கப்பட்டது