விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா | |
---|---|
திரைப்படத்தின் விளம்பரக்காட்சி | |
இயக்கம் | கௌதம் மேனன் |
தயாரிப்பு | மதன் கணேஷ் ஜனார்தனன் எல்ரெட் குமார் ஜெயராமன் |
கதை | கௌதம் மேனன் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | சிலம்பரசன் த்ரிஷா |
ஒளிப்பதிவு | மனோஜ் பரமஹம்சா |
படத்தொகுப்பு | அந்தனி |
விநியோகம் | ரெட் ஜெயண்ட் மூவீஸ் |
வெளியீடு | பிப்ரவரி 26, 2010 |
ஓட்டம் | 157 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விண்ணைத்தாண்டி வருவாயா 2010 ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்.[1] இத்திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் மேனன்.[2] சிலம்பரசன், த்ரிஷா மற்றும் கணேஷ் ஜனார்தனன் (இப்படத்திற்குப் பின் இவர் விடிவி கணேஷ் என்று அழைக்கப்படுகிறார்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3] 2009ம் ஆண்டின் முற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் பிப்ரவரி 26, 2010 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.[4] இத்திரைப்படத்தினை கௌதம் மேனனின் நண்பர்களான மதன், கணேஷ் ஜனார்தனன், எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் அவர்கள் தயாரிக்க, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.[5] 7 வருடங்களின் பின் கௌதம் மேனன் இத்திரைப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க உள்ளதாகவும், அதில் சிலம்பரசன் அடங்கலாக 6 நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறினார்.
கதைச்சுருக்கம்
[தொகு]விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதை ஒரு இந்துவான கார்த்திக்கிற்கும், மலையாள கிறிஸ்தவரான ஜெஸ்ஸிக்கும் இடையேயான காதல் அதனால் அவர்களின் குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் இருவரின் மன நிலையை விவரிக்கும் நிகழ்வுகளின் கோர்வையாக சொல்லப்படுகின்றது.[6]
நடிப்பு
[தொகு]- சிலம்பரசன் - கார்த்திக் சிவகுமார்
- த்ரிஷா - ஜெஸ்ஸி தேக்குட்டு
- கணேஷ் ஜனார்தனன் - கணேஷ், கார்த்திக்கின் நண்பர்
- கிட்டி - சிவகுமார், கார்த்திக்கின் அப்பா
- பாபு அந்தோனி - ஜோசப் தேக்குட்டு, ஜெஸ்ஸியின் அப்பா
- உமா பத்மநாபன் - திருமதி சிவகுமார், கார்த்திக்கின் அம்மா
- சமந்தா ருத் பிரபு - நந்தினி, கார்த்திக்குடன் பணிபுரியும் பெண்
- நாக சைதன்யா - அவராகவே, கார்த்திக் இயக்கும் திரைப்படத்தின் கதாநாயகன்
- கே. எஸ். ரவிக்குமார் - அவராகவே, கார்த்திக் இவரிடம் துணை இயக்குனராக பணியாற்றுகிறார்
- ஜனனி ஐயர் - கே.எஸ்.ரவிக்குமாரிடம் பணிபுரியும் துணை இயக்குநர்[7]
பாடல்கள்
[தொகு]விண்ணைத்தாண்டி வருவாயா | |
---|---|
ஆல்பம்
| |
வெளியீடு | ஜனவரி 12, 2010 |
ஒலிப்பதிவு | பஞ்சதன் ரெகார்ட் இன் மற்றும் ஏம் ஸ்டுடியோஸ் |
இசைத்தட்டு நிறுவனம் | Sony BMG |
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பினில் ஏழு பாடல்கள் கொண்டுள்ளது.[8] இத்திரைப்படத்தின் உலகளாவிய இசை வெளியிட்டு விழா டிசம்பர் 19, 2009 அன்று லண்டனில் நடந்தது. அதன் பின் மீண்டுமொரு முறை சென்னையில் ஜனவரி 12, 2010 அன்று நடந்தது.
பாடல் | பாடகர்கள் |
---|---|
ஓமனப் பெண்ணே | பென்னி தயல், கல்யாணி மேனன் |
அன்பில் அவன் | தேவன் ஏகாம்பரம், சின்மயி |
விண்ணைத்தாண்டி வருவாயா | கார்த்திக் |
ஹோசானா | விஜய் பிரகாஷ், சுசன்னே டி'மெல்லோ, பிளேஸ் |
கண்ணுக்குள் கண்ணை | நரேஷ் ஐயர் |
மன்னிப்பாயா | ஏ. ஆர். ரகுமான், ஷ்ரேயா கோஷல் |
ஆரோமலே | அல்போன்ஸ் ஜோசப் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "விண்ணைத்தாண்டி வருவாயா (2010) (ஆங்கில மொழியில்)". இணையத் திரைப்படத் தரவுத் தளம். பார்க்கப்பட்ட நாள் 07 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மீண்டும் சிம்பு + கௌதம் மேனன் !". சினிமா விகடன். Archived from the original on 2013-01-15. பார்க்கப்பட்ட நாள் 07 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படப் பாடல்கள்". திரைப்பாடல். பார்க்கப்பட்ட நாள் 07 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "'விண்ணைத்தாண்டி வருவாயா' -பெப்ரவரி 26 அலுவன்முறை வெளியீட்டு நாள் (ஆங்கில மொழியில்)". கோலிட்டாக்கு. 12 பெப்ரவரி 2010. Archived from the original on 2012-06-20. பார்க்கப்பட்ட நாள் 07 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "ஏ.ஆர்.ரஹ்மானின் ஹோசான்னா... பாடலுக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு!". தின மலர் சினிமா. பார்க்கப்பட்ட நாள் 07 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "விண்ணைத���தாண்டி வருவாயா". வெத்துனியா. 01 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 07 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கான (2010) முழு நடிகர்களும் படக்குழுவும் (ஆங்கில மொழியில்)". இணையத் திரைப்படத் தரவுத் தளம். பார்க்கப்பட்ட நாள் 07 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "சிம்புவின் மன்மதன் பார்ட்-2 விற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை!". தின மலர் சினிமா. பார்க்கப்பட்ட நாள் 07 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)