இறைவன் திருவுருவச் சிலைகள் (இந்து சமயம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்து சமயக் கோயில்களில் இறைவனின் திருவுருவங்களை நின்ற, இரு��்த, கிடந்த மற்றும் கூத்தாடிய கோலங்களில் படைப்பர். இவற்றில் நின்ற கோல இறையுருவை ஸ்தானகமூர்த்தி என்றும், ஒரு காலை மடக்கி ஒரு காலைக் கீழ்நோக்கி நீட்டியபடி அமர்ந்திருப்பதை சுகாசனமூர்த்தி என்றும், கிடந்த கோலத்தில் இருக்கும் இறையுருவை சயனமூர்த்தி என்றும் நடனமாடும் கோலத்தில் உள்ள இறையுருவை நிருத்தமூர்த்தி என்றும் அழைப்பர்.
மேற்கண்ட நான்கு நிலைகளில் நின்ற, இருந்த கோலம் எல்லா இறையுருவங்களுக்கும் பொதுவானதாக அமைகிறது.
நின்ற கோலம்
[தொகு]நின்ற கோலத்தில் அதிகமான சிலைகள் அமைக்கப்படுகின்றன.
இருந்த கோலம்
[தொகு]இதில் இருந்த கோலத்தில் சுகாசனம், வீராசனம், பத்மாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், லலிதாசனம் என்ற ஆறு ஆசனங்கள் சிற்பங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
கிடந்த கோலம்
[தொகு]அடுத்ததாக கிடந்த கோலம் விஷ்ணுவுக்கே பெரிதும் உரித்தான கோலமாக அமைகிறது. மேலும் கிடந்த கோலத்தில் கிடத்தல் "சமசயனம் " என்றும், பகுதிக் கிடத்தல் "அர்த்தசயனம்" என்றும் இரு வகைகள் உண்டு. அடி முதல் முடி வரை உடல் முழுவதும் இருக்கையில் கிடப்பது முழுதும் கிடத்தலாகும். அடி முதல் இடைவரையுள்ள உடல் கிடந்து அதற்கு மேலுள்ள உடல் பகுதி சற்று நிமிர்ந்திருப்பது அர்த்த சயனம் எனப்படும்.
1. ஜல சயனம், 2. தல சயனம், 3. புஜங்க சயனம், 4. உத்தியோக சயனம், 5. வீர சயனம், 6. போக சயனம், 7. தர்ப்ப சயனம், 8. பத்ர சயனம், 9. மாணிக்க சயனம், 10. உத்தான சயனம் என பத்துவகையான கிடந்த கோலங்கள் உள்ளன.
கூத்தாடிய கோலம்
[தொகு]கூத்தாடிய கோலம் என்பது திருஞானசம்பந்தர், சிவபெருமான், காளி, பிள்ளையார், கண்ணனது காளிங்க நர்த்தனம் முதலிய சிற்பங்களுக்கு உரியதாக பெரும்பாலும் அமைகிறது.
ஆசனங்களின் வகைகள்
[தொகு]ஆசனங்களை சிவாலயத் திருமேனிகள் எனும் நூல் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறது.
- சமபாத ஸ்தானகம்
- வைதஸ்திக ஸ்தானகம்
- அர்த்த வைதஸ்திக ஸ்தானகம்
- காயோத் சர்க்கம்
- சுகாசனம்
- பத்மாசனம்
- அர்த்த பத்மாசனம்
- லலிதாசானம்
- மகாராசா லீலாசனம்
- வீராசனம்
- உத்குடியாசனம்
- யோகாசனம்
- ஸ்வஸ்திகாசனம் (அமர்ந்த)
- கருடாசனம்
- வைராக ஸ்தானகம்
- வைஷ்ணவம்
- ஸ்வஸ்திகாசனம் (நின்ற)
- ஆலிடாசனம்
- பிரத்யாலீடாசனம்
- ஊர்த்துவஜானு
- ஏகபாதஸ்தானம்
- சயனாசனம்
காண்க
[தொகு]ஆதாரம்
[தொகு]- டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் நூல்