பேச்சு:ராதிகா சரத்குமார்
Untitled
[தொகு]ராதிகா சரத்குமார் என்பதை ராதிகாவுக்கு வழிமாற்ற காரணம் உள்ளதா? ராடன் மீடியாவொர்க்சு இணையதளத்தில் ராதிகா சரத்குமார் என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள். Currently "Chelamay," a major family soap of R. Radikaa Sarathkumar is on air. அதன் இயக்குனர்கள் பட்டியலிலும் ராதிகா சரத்குமார் என்று தான் உள்ளது. --குறும்பன் (பேச்சு) 21:28, 14 மார்ச் 2012 (UTC)
- தனியான காரணமெல்லாம் எதுவுமில்லை குறும்பன் :)... ராதிகா சரத்குமார் அதிகமாக உபயோகப்படுத்தும் பெயர்தானே.. கட்டுரை ராதிகா என இருந்தது. எனவே நான் ராதிகா சரத்குமாரை வழிமாற்றாக்கினேன் ...வேண்டுமானால் ராதிகா சரத்குமார் என நகர்த்தி ராதிகா க்கு வழிமாற்றலாம்--shanmugam (பேச்சு) 02:21, 15 மார்ச் 2012 (UTC)
நீக்கம் ஏனோ?
[தொகு]ராதிகாவின் வாழ்க்கையில் நடந்த, அவரே மறைக்க முயலாத - பலரும் அறிந்த, அவருடைய காதல் வாழ்க்கையைப் பற்றிய சில செய்திகளை இப்பக்கத்தில் பதிந்திருந்தேன். அவை தேவையற்றவை என்னும் குறிப்போடு Vensatry என்னும் பயனர் நீக்கியிருக்கிறார். ஒருவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் அவர் வாழ்க்கையில் நடந்ததைப் பதிவது எப்படித் தேவையற்றதாகும் எனப் புரியவில்லை. மேலும் ஒரு தகவலை நீக்குவதற்கு முன்னர், அதனைப் பற்றிய பொதுவிவாதம் நடத்தாமல் நீக்குவத�� எப்படி ஜனநாய்கம் ஆகும்? --பொன்னிலவன் (பேச்சு) 17:50, 19 சூன் 2013 (UTC)
- நீங்கள் குறிப்பிடும் பகுதியை Vensatry நீக்கியுள்ளது சரியெனவே தோன்றுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பதிவது தவறன்று. ஆனால், தகுந்த ஆதாரமில்லாமல் எழுதுவது அவதூறாகி விடும். குறிப்பிட்ட பகுதிக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் (கிசுகிசுக்கள் அல்ல) இருந்தால் இணைத்து எழுதலாம். இந்த இடத்தில் ஆதாரம் எனக் கருதக்கூடியவை முறையான வாழ்க்கை வரலாறுகள், நேர்காணல்கள் முதலியவை ஆகும்.
- கட்டுரைகளைத் துணிவுடன் தொகுக்கவே நாம் பரிந்துரைக்கிறோம். எனவே, தகுந்த மாற்றங்களை உரையாடுவதற்கு முன்பே மாற்றுவதும் ஏற்புடையதே. அனைத்துத் தொகுப்புகளையும் உரையாடித் தான் மாற்ற வேண்டும் என்று முற்படுவோமானால் அது செயல் திறன் மிக்கதாக இருக்காது. ஒரு தொகுப்பு குறித்த மாற்றுக் கருத்து வரும் போது, அதைக் குறித்து உரையாடவும் இணக்க முடிவின் அடிப்படையில் மீண்டும் மாற்றுவதற்குமான வழிமுறையும் எப்போதும் உறுதி அளிக்கப்படுகிறது.--இரவி (பேச்சு) 18:34, 19 சூன் 2013 (UTC)