உள்ளடக்கத்துக்குச் செல்

வித்யா தேவி பண்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:08, 30 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("Rt._Honorable_President_Bidya_Devi_Bhandari.jpg" நீக்கம், அப்படிமத்தை Didym பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation; see Commons:Licensing (F1).)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வித்யா தேவி பண்டாரி
विद्या देवी भण्डारी
நேபாளத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவர்
பதவியில்
29 அக்டோபர் 2015 – 13 மார்ச்சு 2023
பிரதமர்கட்க பிரசாத் சர்மா ஒளி
துணை அதிபர்நந்த கிஷோர் புன்
முன்னையவர்ராம் வரண் யாதவ்
பின்னவர்ராம் சந்திர பௌதெல்
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
25 மே 2009 – 6 பிப்ரவரி 2011
பிரதமர்மாதவ் குமார் நேபாள்
முன்னையவர்ராம் பகதூர் தாபா
பின்னவர்பிஜய குமார் கச்சதார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 சூன் 1961 (1961-06-19) (அகவை 63)
மானேபஞ்ச்யாங், நேபாளம்
அரசியல் கட்சிநேபாள் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
துணைவர்மதன் குமார் பண்டாரி (1982–1993)
பிள்ளைகள்இரண்டு

வித்யா தேவி பண்டாரி (நேபாளி: विद्यादेवी भण्डारी; பிறப்பு: 19 ஜூன் 1961) நேபாளத்தின் தற்போதைய குடியரசுத் தலைவராவார். இந்நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 2015இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரே நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவருமாவார்.[1][2][3] 28 அக்டோபர் 2015 அன்று குடியரசுத் தலைவர் தேர���தலில் வெல்லும் முன்பு இவர் அனைத்து நேபாள பெண்கள் அமைப்பின் தலைவராகவும்,[4] நேபாள பொதுவுடைமைக் கட்சி (ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)-இன் துணைத் தலைவராகவும் இருந்தார்.[5] நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 549க்கு 327 வாக்குகள் பெற்று, குல் பகதூர் குருங்கைத் தோற்கடித்து குடியரசுத் தலைவராகத் தேர்வானார். இதற்கு முன்னர் நேபாள அரசில் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் வகித்திருக்கிறார். நேபாளத்தில் இப்பதவியை வகித்த முதல் பெண்மணி இவரே ஆவார்.[6][7][8]

வித்யாதேவி பண்டாரி இரண்டாவது முறையாக நேபாளக் குடியரசுத் தலைவராக நேபாள நாடாளுமன்றத்தால் 13 மார்ச் 2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]

தனி வாழ்க்கை

[தொகு]

பண்டாரி சூன் 19, 1961 ஆம் ஆண்டு நேபாளத்தின், போஜ்புர் மாவட்டத்தில் உள்ள மானேபஞ்ச்யாங் என்ற ஊரில் ராம் பகதூர் பாண்டே, மிதிலா பாண்டே இணைக்கு மகளாகப் பிறந்தார்.[10] 1993இல் சித்வன் மாவட்டத்தில் உள்ள தஸ்துங்கா என்ற ஊரில் மர்மமான முறையில் மகிழுந்து விபத்தொன்றில் மரணம் அடைந்த, புகழ்பெற்ற பொதுவுடைமைக் கட்சித் தலைவரான மதன் பண்டாரி இவரது கணவராவார்.[11]

பொது வாழ்க்கை

[தொகு]

பண்டாரி இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடலானார். நே.பொ.க (மா.லெ) கொடுத்துள்ள தகவல்படி அக்கட்சியின் இளைஞர் அணியில் 1978இல் போஜ்புரிலிருந்து ஒரு களச்செயற்பாட்டாளராக பண்டாரி இணைந்தார்.[12] 1979 முதல் 1987 வரை அனைத்து நேபாள தேசிய சுதந்திர மாணவர் சங்கத்தின் கிழக்கு மண்டலக்குழுவுக்குப் பொறுப்பேற்று நடத்தினார். எனினும் அவரது தீவிர அரசியல் வாழ்வு 1980இல் நேபாள பொதுவுடைமை (மா.லெ) கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்ததிலிருந்தே தொடங்கியது எனலாம். பள்ளிப் படிப்பை முடித்து திரிபுவன் பல்கலைக் கழகத்தின் மகேந்திர மோரங் ஆதர்ஷ பல்துறை வளாகத்தில் சேர்ந்த அவர் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993 முதல் நேபாளத் தொழிற்சங்கங்களின் பொதுக்கூட்டமைப்பின் மகளிரணித் தலைவராக முக்கியப் பங்காற்றினார். 1997இல் நேபாள பொதுவுடைமை (ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் நடுவண் குழுவில் உறுப்பினராகத் தேர்வானார். கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த கட்கப் பிரசாத் சர்மா ஓலீயின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்த பண்டாரி, புட்வலில் நடந்த அக்கட்சியின் எட்டாவது பொது மாநாட்டில் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13]

பண்டாரி 1994இலும் 1999இலும் ஆக, முறையே பிரதமர் கிருஷ்ண பிரசாத் பட்டாராயையும் தாமநாத் துங்கானாவையும் தோற்கடித்து, இருமுறை நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றார்.[14] இருப்பினும் 2008இல் நடந்த அரசமைப்புச் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். பிரதமர் மாதவ குமார் நேபாளின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார். 2013இல் நடந்த இரண்டாவது அரசமைப்புச் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி அவரை விகிதாச்சாரத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்தது.

நேபாளத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 2015இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரே முதல் பெண் குடியரசுத் தலைவருமாவார். மேலும் இவர் இரண்டாவது முறையாக, நேபாளக் குடியரசுத் தலைவராக நேபாள நாடாளுமன்றத்தால் 13 மார்ச் 2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nepal gets first woman President". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2015.
  2. "Bidhya Devi Bhandari elected Nepal's first female president". BBC Asia News. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2015.
  3. "Bidya Devi Bhandari elected first woman President of Nepal". Kantipur News. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2015.
  4. "The Himalayan Times: Oli elected UML chairman mixed results in other posts – Detail News: Nepal News Portal". The Himalayan Times. 15 July 2014 இம் மூலத்தில் இருந்து 17 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140717234905/http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=KP+Oli+elected+as+CPN-UML+chairman&NewsID=421225. பார்த்த நாள்: 15 July 2014. 
  5. "Who is Bidya Devi Bhandari?". Himalayan News. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2015.
  6. "Nepali Times | The Brief » Blog Archive » Enemies within". nepalitimes.com. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச்சு 2014.
  7. "Women of Nepal". wwj.org.np. Archived from the original on 20 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Related News | Bidya Bhandari". ekantipur.com. Archived from the original on 20 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. 9.0 9.1 Bidya Devi Bhandari re-elected as Nepal President
  10. "Nepal gets first female head of state". Setopati. Archived from the original on 30 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2015.
  11. "Who is Bidya Devi Bhandari?". The Himalayan Times. 28 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2015.
  12. "Who is Bidya Devi Bhandari? What are the 10 things you need to know about her?". Indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2015.
  13. "Bidhya Devi Bhandari elected first female president". My Republica News. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Bidhya Bhandari- probable first female President of Nepal". One Click Nepal. Archived from the original on 30 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]


அரசியல் பதவிகள்
முன்னர் நேபாள குடியரசுத் தலைவர்
2015–2023
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_தேவி_பண்டாரி&oldid=3856919" இலிருந்து மீள்விக்கப்பட்டது