மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம்
மெல்போர்ன் துடுப்பாட்டத் திடல் | |
---|---|
த எம்.சி.ஜி | |
இடம் | மெல்போர்ன் பூங்கள், மெல்போர்ன் |
அமைவு | 37°49′12″S 144°59′0″E / 37.82000°S 144.98333°E |
திறவு | 1854 |
உரிமையாளர் | விக்டோரியா அரசு |
ஆளுனர் | மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் |
தரை | புல் (நீள்வட்டம்) |
கட்டிட விலை | $150,000,000 (1992 Southern stand redevelopment)
$445,000,000 (2006 Northern stand redevelopment) |
கட்டிடக்கலைஞர் | Various |
குத்தகை அணி(கள்) | ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி Victorian Bushrangers Melbourne Stars Collingwood Football Club Hawthorn Football Club Melbourne Football Club Richmond Football Club |
அமரக்கூடிய பேர் | 100,018 |
பரப்பளவு | 171 m x 146 m[1] |
மெல்போர்ன் துடுப்பாட்டத் திடல் (Melbourne Cricket Ground, MCG) என்பது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் யார்ரா பூங்காவில் அமைந்துள்ள விளையாட்டரங்கம் ஆகும். இது உலகின் எட்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கமும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விளையாட்டரங்கமும் ஆகும். மேலும் இது கொள்ளளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கமாக உள்ளது.
பன்னாட்டுத் துடுப்பாட்ட வளர்ச்சியில் மெல்போர்ன் திடல் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக 1877 மற்றும் 1971 ஆண்டுகளில் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியும் ஒருநாள் போட்டியும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போர்ன் திடலில் நடைபெற்றன. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பாக்சிங் டே துடுப்பாட்டம் மிகப் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MCG Facts and Figures". Melbourne Cricket Ground. 2009. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009.