பீபி தலேர் கவுர்
பீபி தலேர் கவுர் (Bibi Dalair Kaur) என்பவர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீக்கியப் பெண்மணி ஆவார்.[1] இவர் முகலாயர்களுக்கு எதிராக 100 பெண் சீக்கியர்களைத் திரட்டினார். அனந்தபூரைக் காக்க கவுர், முகலாயருக்கு எதிரான போரில் கொல்லப்பட்டார். இவர் சீக்கியர்களிடையே ஒரு தியாகியாகக் கருதப்படுகிறார்.[2]
முகலாயப் பேரரசினைச் சேர்ந்த வாஜிர் கான் மற்றும் சிர்ஹிந்த் ஆகியோருடன் நடந்த போரின் போது கவுர் வெற்றி பெற்றார். சீக்கியர்களுக்கான புனித யாத்திரைத் தலமான பதேகர் சாகிப்பில் இப்போர் நடந்தது.
வாஜிர் கானும் அவரது இராணுவமும் சிர்ஹிந்த் கோட்டையின் சுவர்களை உடைத்து பீபி தலேர் கவுர் மற்றும் இவரது 100 ஆயுதமேந்திய பெண் வீரர்களை எதிர்கொண்டனர். வாஜிர் கான் இவர்களைக் கேலி செய்து நோக்கி, “கோழைகளே, நீங்கள் பெண்களுக்குப் பயப்படுகிறீர்களா? இவர்கள் உங்களுக்குப் பரிசுகள், இவர்களைப் பிடித்து, உங்கள் வேட்டையின் வெகுமதிகளுடன் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்” என்று ஆணவத்தில் உரைத்தான்.
இதற்குப் பதிலளித்த பீபி தலேர் கவுர், “நாங்கள் வேட்டையாடுபவர்கள், வேட்டையாடப்பட்டவர்கள் அல்ல. நீங்களே இதனை அறிவீர்கள்!” என்றார். ஆனால் கானின் வீரர்கள் முன்னேறினர். இந்தச் சண்டையில் கவுரும், கவுரின் படை வீராங்கனைகளும் பலரைக் கொன்று வெற்றி பெற்றனர். எஞ்சியவர்களைச் சண்டையிலிருந்து பின்வாங்கச் செய்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, கவுரும் அவரது போர்வீரர்களும் இறுதியில் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bureau, I. N. (2022-02-15). "India's Forgotten Queens, Women Warriors: Mula Gabharu, Velu Nachiyar, Rani Chenamma, Dalair Kaur". Indianarrative (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
- ↑ https://www.sikhistore.com/buy/the-warrior-princess-bibi-dalair-kaur[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Manjunath, Chandrika (2017-12-21). "5 Women Warriors We Should Know About". Feminism in India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)