உள்ளடக்கத்துக்குச் செல்

இசுடெல்லர்டிரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:30, 20 சூன் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: புனைப்பெயர் → புனைபெயர் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இசுடெல்லர்டிரோன் [Stellardrone] என்பது மின்னணு இசை வகையில் ஒன்றான சூழிசையை உருவாக்கும் எட்கராசு சாகேவிசியசு (Edgaras Žakevičius) என்ற இசையமைப்பாளரின் புனைபெயர். 1987ல் லிதுவேனியா நாட்டின் வில்னியசில் பிறந்த இவர் 2007லிருந்து இசையமைக்கத் தொடங்கினார்.

இசை

[தொகு]

கணினியிசைத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்படும் ரீசன், ஏபில்டன் லைவ், ஆடாசிட்டி உள்ளிட்ட மென்பொருள்களைப் பயன்படுத்தியே எட்கராசு இசை அமைக்கின்றார்; இசையில் முறையான பயிற்சி இல்லையெனினும் நீங்காத ஆர்வம் மட்டுமே தொடர்ந்து இவர் இசையை உருவாக்கக் காரணமாகின்றது. பிரையன் ஈனோ, கிளாசு இசுகூல்சு, பீட் நாம்லுக், ஜான் செர்ரீ ஆகியோரின் இசை மூலம் தன் இசையமைப்பிற்கான அகத்தூண்டலைப் பெறுவதாகக் குறிப்பிடுகின்றார்.

பெரும்பாலானோரைச் சென்றடைவதற்காகவும் கலைநயம் பாராட்டும் சமூகத்தைப் பேணுவதற்காகவும் இசையை உருவாக்குவோருக்கும் கேட்போருக்கும் இடையே ஒருமித்த உணர்வை உருவாக்குவதற்காகவும் இவர் உருவாக்கும் இசைத் தொகுப்புகளை கட்டணமின்றியே வெளியிடுகின்றார்[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Interview With Electronic Musician, Stellardrone". பார்க்கப்பட்ட நாள் 02 சூலை 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடெல்லர்டிரோன்&oldid=3448392" இலிருந்து மீள்விக்கப்பட்டது