உள்ளடக்கத்துக்குச் செல்

மோசின் ரசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:30, 4 சூன் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மோசின் ரசா

மோசின் ரசா என அழைக்கப்படும் சையத் மோசின் ரசா நாக்வி (ஆங்கில மொழி: Syed Mohsin Raza Naqvi, 15 சனவரி 1968) என்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப் பிரதேச சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய சனதா கட்சியின் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். இசுலாம் மதத்தைச் சேர்ந்த உத்தரப் பிரதேச அமைச்சர் இவர் ஒருவரே ஆவார். [1]

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]

உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் மோசின் ரசா பிறந்தார். இவர் பெரும் நிலஉடைமையாளர் பரம்பரையில்,  சியா முசுலீம் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய முன்னோர்கள் சபிபுர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.  மட்டைப் பந்தாட்டத்தில் ஆர்வம் உள்ளவர். ரஞ்சி டிராபி போட்டியில் உத்தரப் பிரதேசம் சார்பாக விளையாண்டார். திரைப்படத் தொழில், தொலைக்காட்சித் தொடரில் நடித்தல், மாடெல்லிங் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டார். நீம் கா பேட்  என்ற இவர்  நடித்த நாடகம்  தூர்தர்சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 1995 ஆம் ஆண்டில் 'லக்னோ இளவரசர்' என்ற பட்டத்தைப் பெற்றார்.

அரசியல் பணிகள்

[தொகு]

1999 ஆம் ஆண்டில் மோசின் ரசா  காங்கிரசுக் கட்சியின் விளையாட்டுப் பிரிவின் தலைவராக ஆனார். சில உள் பிரச்சினைகளால் விலகினார். 2010 இல் சபீபுர் விகாஸ் மஞ்சு என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார். அரசியலில் ஈடுபாட்டுடன் இயங்கினார். 2014 இல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாரதிய சனதா கட்சியில் இணைந்தார். 2016 ஆம் ஆண்டில் பா.ச.க. வின் செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்பை ஏற்றார்.

2017 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ச.க. வென்று யோகி ஆதித்தியநாத் முதலமைச்சர் ஆனார். ஆனால் இந்தத் தேர்தலில் பா.ச.க.சார்பாக இசுலாமிய வேட்பாளரை நியமிக்கவில்லை. இருப்பினும் மோசின் ரசா  உத்தரப் பிரதேச அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். [2]  

மேற்கோள்

[தொகு]
  1. http://www.thehindu.com/news/national/up-minister-mohsin-raza-elected-to-legislative-council-bjp-wins-all-five-seats/article19660793.ece
  2. "UP Cabinet 2017: Mohsin Raza, lone Muslim Minister in Yogi Adityanath govt, gets Minority portfolio". India. பார்க்கப்பட்ட நாள் 12 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசின்_ரசா&oldid=3441088" இலிருந்து மீள்விக்கப்பட்டது