உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ்வேளூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
InternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:00, 29 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கீழ்வேளூர் வட்டம் , தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையகமாக கீழ்வேளூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 55 வருவாய் கிராமங்கள் உள்ளன.

இவ்வட்டத்தில் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வட்டம் 138,474 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 68,298 ஆண்களும், 70,176 பெண்களும் உள்ளனர். 36,871 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 86% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 83.72% மற்றும் 1,027 பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14313 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 55,874 மற்றும் 323 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.86%, இசுலாமியர்கள் 5.25%, கிறித்தவர்கள் 4.63% மற்றும் பிறர் 0.27% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்வேளூர்_வட்டம்&oldid=3306274" இலிருந்து மீள்விக்கப்பட்டது