உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஓசனிச்சிட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:00, 23 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் அமெரிக்காக்கள் உக்கு மாற்றப்பட்டன)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


தேன்சிட்டு என்பதும் இதைத்தான் குறிக்குமா ? వినోద్  வினோத் 15:45, 14 மார்ச் 2008 (UTC)

அல்ல. தேன்சிட்டு என்பதும் சிறிய பறவை இனம்தான், ஆனால் அவை வேறானவை. தேன்சிட்டுப் பறவைகளைத் தமிழ்நாட்டிலும் காணலாம், ஆனால் ஓசனிச்சிட்டு அல்லது சுரும்புச்சிட்டுகள் வட , தென் அமெரிக்கக்கண்டகளில் மட்டுமே காணமுடியும் (வளர்ப்பாக வேறு இடங்களில் இப்பொழுது இருக்கலாம்). பெரும்பாலும் நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் ஆண்டீய மலைத்தொடர்ப் பகுதிகளில் காணலாம். நான் பெரு நாட்டிற்குச் சென்று அங்கு ஆண்டீய மலைப்பகுதிகளில் ஏறிச்சென்று அங்குள்ள காடுகளில் கண்டபொழுதுதான் இவற்றுக்கு ஏன் humming bird என்று பெயர் ஏற்பட்டது என்று மெய்யுற உணர்ந்தேன். பறவைகள் அருகில் இருப்பதை அது சிறகடித்து (ஓசனித்து) எழுப்பும் உசுஉசுஉசு என்னும் ஒலியில் இருந்தே கண்டுவிடலாம். அங்குள்ள ஓசனிச்சிட்டு (சுரும்புச்சிட்டு)கள் சற்று பெரியனவாக இருந்தன. கனடாவில் எங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் கோடைக்காலங்களில் இப்பறவைகளைக்காணலாம். வண்டு அளவே இருப்பது போன்ற மிகச்சிறிய ஓசனிச்சிட்டுப் பறவை ஒன்றை பெரு நாட்டில் கண்டபொழுது "பெரு" வியப்பாக இருந்தது ! ஆனால் போதிய அளவு உன்னிப்புடன் காண வாய்ப்பு கிட்டவில்லை.--செல்வா 15:59, 14 மார்ச் 2008 (UTC)
சில ஊடகங்களில் Humming Bird என்பதை தேன்சிட்டு என்பதாக ஆண்டதாக எனக்கு ஞாபகம் :-(. விளக்கத்திற்கு மிக்க நன்றி వినోద్  வினோத் 16:08, 14 மார்ச் 2008 (UTC)

தொடர்புடைய உரையாடல்

[தொகு]

கேள்வி: http://twitter.com/mayooresan/status/1713942170 விடை: http://twitter.com/oligoglot/status/1714017727 சரிதானே? -- சுந்தர் \பேச்சு 05:11, 6 மே 2009 (UTC)[பதிலளி]

அது இலங்கையில் எடுக்கப்பட்ட படம் எனப்பின்னர்தான் அறிந்தேன். அதனால் அது ஓசனிச்சிட்டாக இருக்க முடியாது, தேன்சிட்டுதான் என்று திருத்திக் கொண்டேன். -- சுந்தர் \பேச்சு 05:33, 6 மே 2009 (UTC)[பதிலளி]

மயில் நிற ஓசினிச்சிட்டு

[தொகு]
  • இப்படத்தை மயில்நிற ஓசினச்சிட்டெனக் கருதலாமா?

தங்களைப்போல��ே, ஓசன்-->ஓசனித்தல்-->ஓசனி மற்றும் சிட்டு என்பனவற்றின் பொருளாழத்தினை உணர்ந்து வியந்தேன். தமிழ்ச் சுவையுணரந்தேன். நன்றி. த* உழவன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓசனிச்சிட்டு&oldid=2916628" இலிருந்து மீள்விக்கப்பட்டது