உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள்
சென்னையில் மூழ்கிய நிலையில் காணப்படும் பாலங்கள்
நாள்நவம்பர் 8, 2015 (2015-11-08) – நடப்பு நிகழ்வு
அமைவிடம்தென்னிந்தியா (தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம்)
இறப்புகள்தமிழ்நாடு: 347 (approximate)[1]
ஆந்திரப் பிரதேசம்: 54[1]
புதுச்சேரி: 2
சொத்து சேதம்இந்திய ரூபாய் 200 பில்லியனுக்கும் மேல்


தமிழ்நாடு: 8,481 கோடி (US$1 பில்லியன்)
ஆந்திரப் பிரதேசம்: 3,819 கோடி (US$478 மில்லியன்)
புதுச்சேரி: 183.089 கோடி (US$23 மில்லியன்)

2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள் என்பது நவம்பர்-திசம்பர் 2015 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளைக் குறிக்கும். இவ்வெள்ளப் பெருக்குகள், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் கோரமண்டலக் கரைப் பகுதிகளைப் பெரிதும் பாதித்தன. குறிப்பாக, சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.[2] ஏறத்தாழ 403 பேர் உயிர் இழந்துள்ளனர். 18 இலட்சம் மக்கள் இடம்பெயர நேரிட்டது. இவ்வெள்ளங்களால் ஏற்பட்டுள்ள சேதங்கள் இந்திய உரூபாய் மதிப்பில் 200 பில்லியனுக்கும் கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

பாதிப்புகள்

[தொகு]

உயிரிழப்புகள்

[தொகு]
  • தமிழகத்தில் 347 பேர் உயிரிழந்தனர். கடலூரில் மட்டும் 43 பேர் இறந்தனர்.
  • ஆந்திராவில் 54 பேர் உயிரிழந்தனர்.
  • பாண்டிச்சேரியில் 2 பேர் உயிரிழந்தனர்.

தொழிற்துறைக்கு ஏற்பட்ட சேதங்கள்

[தொகு]

கட்டமைப்புச் சேதங்கள், உற்பத்திப் பாதிப்பு, வேலை வாய்ப்பு இழப்பு என்ற வகையில் 14,000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாக ஆரம்பநிலை கணிப்புகள் தெரிவித்தன. இவற்றுள் ஏறத்தாழ 10,000 நிறுவனங்கள் மிகச்சிறு அமைப்புகளாகும்[3].

அரசு அமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள்

[தொகு]
  • வெள்ளத்தால் உரூபாய் 883 கோடி இழப்பு ஏற்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது[4].
  • வெள்ளத்தால் உரூபாய் 115 கோடி இழப்பு ஏற்பட்டதாக தென்னக இரயில்வே அறிவித்தது[5].

சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சீர்கேடுகள்

[தொகு]

வெள்ளத்தால் பழுதான மற்றும் அடித்துவரப்பட்ட மின்னணுக் கழிவுகள் ஏறத்தாழ 100 டன்கள் எடை கொண்டவை என உத்தேசக் கணிப்புத் தெரிவித்தது[6].

தமிழகம்

[தொகு]

சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள்

[தொகு]

மீட்புப் பணிகள்

[தொகு]

தமிழ்நாடு

[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டம்

[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேர் படகுகள் மூலமாக மீட்கப்பட்டனர்[7].

புதுச்சேரி ஒன்றியம்

[தொகு]

டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது 1000 பேர் வரை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டோருக்கு 2 இலட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன[8]. தேசியப் பேரிடர் மீட்புப்படையின் இரண்டு அணிகள் புதுச்சேரியில் இயங்கின. உணவு, குடிநீர், விரிப்பு-போர்வைகள் வழங்குதலில் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டன[9].

ஆந்திரா

[தொகு]

மழை, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு மாநில அரசு 5 இலட்சம் உரூபாய் நிதியுதவி அளித்தது. மிகவும் பாதிக்கப்பட்ட நெல்லூர் மாவட்டத்தில், 140 புனரமைப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. 2 கோடி உரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்கள் மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும் இந்த மாவட்டத்தில் அரசால் வழங்கப்பட்டன. இதர அமைப்புகள் உணவுப் பொட்டலங்களையும், விரிப்பு-போர்வைகளையும் வழங்கி உதவின[10] நவம்பர் 24 அன்று 1030 கோடி உரூபாயை வெள்ளச் சேத புனரமைப்புக்காக நடுவண் அரசு ஒதுக்கியது[11].

நிவாரண உதவிகள்

[தொகு]

நடுவண் அரசின் நிவாரண உதவித் தொகைகள்

[தொகு]
  • 1000 கோடி உரூபாய் நிவாரண உதவித் தொகையை பிரதமர் மோடி அறிவித்தார்[12]. டிசம்பர் 3 அன்று வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.
  • மழை, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 2 இலட்சம் உரூபாய் உதவித் தொகை வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்தார்[13].

வெளிநாடுகளின் உதவிகள்

[தொகு]
  • சீன செஞ்சிலுவைச் சங்க அமைப்பு $50,000 அளவிற்கு நன்கொடை அளித்தது. சீனத் தூதரகம் உரூபாய் 5 இலட்சத்தை நன்கொடையாகத் தந்தது[14].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Rains, Floods Kill 269 in Tamil Nadu, 54 in Andhra". The New Indian Express. 3 December 2015. http://www.newindianexpress.com/nation/Rains-Floods-Kill-269-in-Tamil-Nadu-54-in-Andhra/2015/12/03/article3159074.ece. 
  2. [1]
  3. "14,000 small, medium units suffer losses". The Hindu (Chennai) (20 December 2015). http://www.thehindu.com/news/cities/chennai/14000-small-medium-units-suffer-losses/article8009640.ece?homepage=true?w=alstates. பார்த்த நாள்: 20 December 2015. 
  4. "Floods leave Tangedco with a loss of Rs. 883 crore". The Hindu (Chennai) (16 December 2015). http://www.thehindu.com/news/national/tamil-nadu/floods-leave-tangedco-with-a-loss-of-rs-883-crore/article7994247.ece?topicpage=true&topicId=2063&ref=tpnews. பார்த்த நாள்: 16 December 2015. 
  5. "Railways put flood loss at Rs. 115 crore". The Hindu (Chennai) (12 December 2015). http://www.thehindu.com/news/cities/chennai/railways-puts-flood-loss-at-rs-115-crore/article7978591.ece?topicpage=true&topicId=2063&ref=tpnews. பார்த்த நாள்: 14 December 2015. 
  6. "E-waste a challenge after rains in Chennai". The Hindu (Chennai) (20 December 2015). http://www.thehindu.com/news/cities/chennai/ewaste-a-challenge-after-rains-in-chennai/article8010402.ece?ref=tpnews. பார்த்த நாள்: 20 December 2015. 
  7. "காஞ்சிபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்". தினமணி. 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.
  8. "North T.N. bears the brunt of unrelenting rain". The Hindu. 2 December 2015. http://www.thehindu.com/news/national/tamil-nadu/north-tn-bears-the-brunt-of-unrelenting-rain/article7938269.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 3 December 2015. 
  9. "Rescue Works Continue in Rain-Battered Puducherry". The New Indian Express. 3 December 2015. http://www.newindianexpress.com/nation/Rescue-Works-Continue-in-Rain-Battered-Puducherry/2015/12/03/article3159260.ece. பார்த்த நாள்: 3 December 2015. 
  10. "Death toll put at 12". The Hindu. 20 November 2015. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/death-toll-put-at-12/article7897952.ece. பார்த்த நாள்: 20 November 2015. 
  11. "Centre allocates Rs. 1,030 cr. to flood-hit AP". The Hindu. 25 November 2015. http://www.thehindu.com/news/national/telangana/centre-allocates-rs-1030-cr-to-floodhit-ap/article7914224.ece. பார்த்த நாள்: 25 November 2015. 
  12. "Pained by devastation, PM announces Rs. 1,000 crore more". தி இந்து. 4 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  13. "TN floods: Modi announces Rs. 2 lakh ex-gratia". தி இந்து. 5 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  14. "China's gesture to flood-affected T.N." தி இந்து. 18 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)