உள்ளடக்கத்துக்குச் செல்

வைகை அதிவேக விரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
★வைகை அதிவேக விரைவுத் தொடருந்து★
விழுப்புரம் சந்திப்பில் வைகை அதிவேக விரைவு வண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவேக விரைவு
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவை15 ஆகத்து 1977; 47 ஆண்டுகள் முன்னர் (1977-08-15)[1]
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைஅதிவேக விரைவு
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்09
முடிவுமதுரை சந்திப்பு (MDU)
ஓடும் தூரம்493 km (306 mi)
சராசரி பயண நேரம்7மணி 25நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்12635/12636
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)Chair Car (CC) , Second Sitting (2S) Un-Reserved (UR) , End on Generator (EOG)
மாற்றுத்திறனாளி அனுகல்ஊனமுற்றவர் அணுகல்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஇல்லை
உணவு வசதிகள்On-board ( Idly, Vada, Pongal, Bread, Tea & Coffee )
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்Overhead racks
Baggage carriage
மற்றைய வசதிகள்அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புWAP-7 Loco from Electric Loco Shed, Royapuram
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்25kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை )
வேகம்71.5 km/h (44.4 mph) மணிக்கு 130km
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
காலஅட்டவணை எண்கள்7/7A
வழிகாட்டுக் குறிப்புப் படம்

| வைகை அதிவேக விரைவுத் தொடருந்து மதுரை, சென்னை எழும்பூர் இடையே இயங்கும் அதிவிரைவு தொடர்வண்டியாகும். இது திண்டு��்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழிச்செல்லும். 496கி.மீ தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது.

தனது முதல் பயணத்தை ஆகஸ்ட் 15, 1977ல் தொடங்கி பிப்ரவரி 20, 1998 வரை குறுகிய வழிப் பாதையில் இயங்கிக் கொண்டிருந்தது. தற்பொழுது அகலப்பாதையில் இயங்குகிறது.

வரலாறு

[தொகு]
ED/WAP-4 Charging Chennai Egmore-Madurai Jucntion Vaigai Superfast Express

வைகை அதிவிரைவு வண்டி மதுரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே 493 கிலோமீட்டர்கள் (306 mi) தூரத்தை முதல் நாளில் 7 மணி நேரம் 5 நிமிடங்களில் அதிவேகமாக இயக்கியது, அது சென்னை எழும்பூர் மதியம் 1.05 மணிக்கு நுழைந்தது. அன்று மதியம், SR இல் உள்ள பல பிராட் கேஜ் அதிவிரைவு ரயில்களின் வேகத்தை பொருத்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில் 7 மணி நேரம் 40 நிமிடங்களுக்குப் பிறகு பயண நேரம் குறைக்கப்பட்டது. அந்த நேரத்தில் ரயிலுக்கு மூன்று நிறுத்தங்கள் மட்டுமே இருந்தன, அவை விழுப்புரம் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு மற்றும் திண்டுக்கல் சந்திப்பு. பின்னர் மக்களின் கோரிக்கையை ஏற்று நிறுத்தங்கள் அதிகரிக்கப்பட்டன.

1999 முதல், வைகை எக்ஸ்பிரஸ் மீட்டர் கேஜிலிருந்து அகலப்பாதையாக மாற்றப்பட்டு பொன்மலை அகலப்பாதை டீசல் இன்ஜின்களால் இழுத்துச் செல்லப்பட்டது. பிப்ரவரி 2014 முதல், வைகை எக்ஸ்பிரஸ் மின்சார இன்ஜின் WAP-4 மூலம் அரக்கோணம் & ஈரோடு லோகோ ஷெட் & WAP-7 மூலம் ராயபுரம் லோகோ ஷெட்டில் இருந்து மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இழுத்துச் செல்லப்படுகிறது.

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்

[தொகு]
   * 1977 ஆகஸ்ட் 15இல் தொடங்கிவைக்கப்பட்டபோது இந்தியாவில் மீட்டர் பாதையில் வேகமாகச் செல்லும் வண்டிகளில் வைகைக்கே முதலிடம். தொடக்கநாள் ஓட்டத்தில் 495 கிமீ தூரத்தை 7 மணி 5 நிமிடங்களில் ஓடிக்கடந்தது. (பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக பயணநேரம் 7 மணி 40 நிமிடங்களாகக் கூட்டப்பட்டது). தென்னக இரயில்வேயில் மீட்டர் பாதையில் மணிக்கு 100கிமீ வேகத்தை எட்டிய முதல் வண்டி வைகையே ஆகும். 
   * 1994இல் குளிரூட்டப்பட்ட, இருக்கைவசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டன. இந்தியாவில் மீட்டர் பாதை வண்டிகளில் அத்தகைய வசதிகொண்ட முதல் வண்டி வைகையேயாகும். 
   * 1995இல் சென்னை - விழுப்புரம் இடையே மின்சார எஞ்சின் அறிமுகப்படுத்தப்பட்டது. 
   * 1997: மீட்டர் பாதை அகலப்பாதையாக மாற்றப்படுவதற்காக வண்டி நிறுத்தப்பட்டது.
   * 1998: அகலப்பாதையில் 16 பெட்டிகள், டீசல் எஞ்சினுடன் மீண்டும் பயணத்தைத் தொடங்கியது.
   * 2003: சென்னை - விழுப்புரம் இடையே அகலப்பாதை மின்மயமானதால் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டது.
   * 2006: பெட்டிகள் இருபத்து நான்காக அதிகரிக்கப்பட்டன.
   * 2008: திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை மின்சார எஞ்சின் பயன்படுத்த முடிந்தது.
   * 2014: சென்னை - மதுரை இடையே முழு தூரமும் மின்சார எஞ்சினால் இயக்கமுடிந்தது.
   * 2018: சென்னை - மதுரை இடையே இரட்டை வழித்தடப் பணிகள் நிறைவுற்றன. பயணநேரம் 7 மணி 35 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இந்தியாவில் இரு நகரங்களுக்கிடையே ஓடும் வண்டிகளில் வைகையே வெகுவேகமானது என்றானது.
   * 2019: வைகை அதிவிரைவுத் தொடர்வண்டியில் எல். எச். பி இரக பெட்டிகள் பொருத்தப்பட்டன.
   * 2022: பயணநேரம் 7 மணி 25 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இவ்வேகம் சதாப்தி வண்டிகளுக்கு இணையானதாகும். மார்ச் 3, 2022 அன்று 6 மணி 43 நிமிடங்களில் மதுரையிலிருந்து சென்னை எழும்பூரை அடைந்தது. இது ஒரு புதிய சாதனை. இவ்வேகம் தேஜஸ், ராஜ்தானி, துரந்தோ போன்ற வண்டிகளுக்கு இணையான வேகமாகும்.

கால அட்டவணை

[தொகு]
Vaigai Express Large Name Board
12635 ~ சென்னை எழும்பூர் → மதுரை சந்திப்பு ◆வைகை அதிவேக விரைவு வண்டி
Station Name Station Code Arrival Departure Day
சென்னை எழும்பூர் MS SOURCE 13:50 1
தாம்பரம் TBM 14:18 14:20
செங்கல்பட்டு சந்திப்பு CGL 14:48 14:50
விழுப்புரம் சந்திப்பு VM 16:00 16:05 2
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 16:45 16:50
அரியலூர் ALU 17:24 17:25
திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி) TPJ 18:40 18:45
மணப்பாறை MPA 19:09 19:10
திண்டுக்கல் சந்திப்பு DG 19:52 19:55
சோழவந்தான் SDN 20:09 20:10
மதுரை சந்திப்பு MDU 21:15 DEST
12636 ~ மதுரை சந்திப்பு → சென்னை எழும்பூர் ◆வைகை அதிவேக விரைவு வண்டி◆
மதுரை சந்திப்பு MDU SOURCE 07:10 1
சோழவந்தான் SDN 07:29 07:30
திண்டுக்கல் சந்திப்பு DG 08:03 08:05
மணப்பாறை MPA 08:44 08:45
திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி) TPJ 09:15 09:20
அரியலூர் ALU 10:14 10:15
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 10:48 10:50 2
விழுப்புரம் சந்திப்பு VM 11:40 11:45
செங்கல்பட்டு சந்திப்பு CGL 13:03 13:05
தாம்பரம் TBM 13:33 13:35
மாம்பலம் MBM 13:53 13:55
சென்னை எழும்பூர் MS 14:30 DEST

பெட்டி

[தொகு]
Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
EOG UR C1 C2 C3 D1 D2 D3 D4 D5 D6 D7 PC D8 D9 D10 D11 D12 D13 UR UR EOG

எஞ்ஜின்

[தொகு]

வைகை அதிவேக விரைவு வண்டி சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இருமார்க்கத்திலும் WAP-7 எனப்படும் 6350HP திறன் கொண்ட அதிவேக மின்சார எஞ்ஜின் கொண்டு இயக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Railway Budget speech 1978-79" (PDF). www.indianrailways.gov.in. இந்திய அரசு, Ministry of Railways. 21 February 1978.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைகை_அதிவேக_விரைவு_வண்டி&oldid=3747559" இலிருந்து மீள்விக்கப்பட்டது