கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்துநகர் அதிவேக விரைவு வண்டி |
---|
தூத்துக்குடி இரயில் நிலையத்தில் தடம் எண் 1ல் முத்துநகர் அதிவேக விரைவுவண்டி |
கண்ணோட்டம் |
---|
வகை | அதிவேக விரைவு |
---|
நிகழ்நிலை | செயலில் உண்டு |
---|
நிகழ்வு இயலிடம் | தெற்கு இரயில்வே |
---|
நடத்துனர்(கள்) | தெற்கு இரயில்வே |
---|
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | அதிவேக விரைவு |
---|
வழி |
---|
தொடக்கம் | சென்னை எழும்பூர் (MS) |
---|
இடைநிறுத்தங்கள் | 17 |
---|
முடிவு | தூத்துக்குடி (TN) |
---|
ஓடும் தூரம் | 652 கி.மீ |
---|
சராசரி பயண நேரம் | 11 மணி 00 நிமிடங்கள் |
---|
சேவைகளின் காலஅளவு | தினசரி இரவு |
---|
தொடருந்தின் இலக்கம் | 12693/12694 |
---|
பயணச் சேவைகள் |
---|
வகுப்பு(கள்) | 1 குளிர்சாதன முதல்வகுப்பு, 2 குளிர்சாதன இரண்டாம்வகுப்பு, 6குளிர்சாதன மூன்றாம்வகுப்பு, 7படுக்கை வகுப்பு, 3 பொதுப்பெட்டிகள், 2 ஜெனரேட்டர் பெட்டிகள் |
---|
மாற்றுத்திறனாளி அனுகல் | |
---|
இருக்கை வசதி | உண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்) |
---|
படுக்கை வசதி | உண்டு (படுக்கை வசதி பெட்டிகள்) |
---|
Auto-rack arrangements | உண்டு |
---|
உணவு வசதிகள் | On-Board Catering, e-Catering |
---|
காணும் வசதிகள் | அனைத்து பெட்டிகளிலும் கண்கானிப்பு காமிராக்கள் உள்ளது |
---|
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை |
---|
சுமைதாங்கி வசதிகள் | உண்டு |
---|
மற்றைய வசதிகள் | உண்டு |
---|
தொழில்நுட்பத் தரவுகள் |
---|
சுழலிருப்பு | ED/WAP-7 (Electric Loco Shed-Erode) |
---|
பாதை | அகல இருப்புப்பாதை |
---|
மின்சாரமயமாக்கல் | 25kV AC உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை 50 Hz |
---|
வேகம் | 72 km/h (45 mph) மணிக்கு 130கிலோமீட்டர் |
---|
பாதை உரிமையாளர் | இந்திய இரயில்வே |
---|
காலஅட்டவணை எண்கள் | 21 |
---|
வழிகாட்டுக் குறிப்புப் படம் |
---|
|
|
முத்துநகர் (பேர்ல் சிட்டி) அதிவேக விரைவுவண்டி Pearl City (Muthunagar) Superfast Express (12693/12694) என்பது என்பது சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரைச் செல்லும் ஓரு அதிவேக விரைவுத் தொடர்வண்டி ஆகும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகியவை இதன் முக்கிய வழித்தடமாகும். இத்தொடர்வண்டியானது 652 கி.மீ தூரத்தை, 11 மணி 05 நிமிடங்களில் கடக்கிறது. இது ஒரு இரவு நேரப் பயண தொடர்வண்டி ஆகும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 12694 தூத்துக்குடி தொடருந்து நிலையத்திலிருந்து இரவு 08 மணி 15 நிமிடங்களுக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 07:35 மணிக்கு சென்னையை அடைகிறது. இது தெற்கு இரயில்வேயின் குறிப்பிடத்தக்க வண்டிகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் பழமையான பயணிகள் தொடருந்து ஆகும். இந்தத் தொடருந்தின் முக்கியமான நிறுத்தங்கள் மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகும். இது 21 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொடருந்து ED/WAP7 எனும் 6350HP திறன் கொண்ட எஞ்சினால் இயக்கப்படுகின்றது.[1]
இந்த வண்டியில் மொத்தம் 21 பெட்டிகள் உள்ளன.