இந்திய மக்களவைத் தலைவர்
மக்களவை அவைத்தலைவர் | |
---|---|
நியமிப்பவர் | மக்களவை உறுப்பினர்கள் |
பதவிக் காலம் | மக்களவையின் ஆயுட்காலம் வரை (5 வருடங்கள்) |
உருவாக்கம் | 15 மே 1952 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
இந்திய மக்களவைத் தலைவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையை நடத்தும் தலைவரைக் குறிப்பதாகும். மூன்றாம் உலக நாடுகளில் (வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்கம்) உள்ள பேரவைகளில் பயன்படுத்தப்படும் சொல்லையே இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகின்றது.
மக்களவைத்தலைவர் 5 ஆண்டுகளுக்கொருமுறை நடத்தப்படுகின்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பங்குபெரும் மக்களவையின் முதல் கூட்டத்தில் உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அதன்பின் அவர் பதவி விலகினாலன்றி வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்க முடியாது.
மக்களவைத் தலைவரின் அதிகாரங்கள்
[தொகு]மக்களவைத் தலைவரே பேரவையே நடத்துபவர், கண்காணிப்பவர் மற்றும் பேரவைகளின் அலுவல்களை கவனிப்பவரும் அவரே.
மசோதா
மசோதாவின் தன்மைகளை ஆராய்ந்து (பண விடை மசோதா மற்றும் பண விடையில்லா மசோதா) அதன்படி தாக்கல் செய்ய அனுமதிக்கின்றார். பேரவையை அதன் மாண்புக் குறையாமல், இறையாண்மைக் குறையாமல், ஒழுக்கத்துடன் நடைபெறக் கடப்பாடுக் கொண்டுள்ளார்.
தீர்மானங்கள்
தீர்மானங்களை அவரின் அனுமதியின்றித் தாக்கல் செய்யமுடியாது. நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்றத் தீர்மானங்களை அனுமதிக்கின்றார். அவரின் இசைவினால் விவாதங்கள் ஏற்கப்படுகின்றன மற்றும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
தேர்தல்
மக்களவைத் தலைவரின் தேர்தலை குடியரசுத் தலைவர் தீர்மானிக்கின்றார்.
மக்களவைத் தலைவர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]