உள்ளடக்கத்துக்குச் செல்

பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பல்லவனீச்சரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்
பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்
பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°08′48″N 79°49′46″E / 11.1467°N 79.8295°E / 11.1467; 79.8295
பெயர்
புராண பெயர்(கள்):காவிரிப் பூம்பட்டினத்து பல்லவனீச்சரம், பூம்புகார், மேலையூர்
பெயர்:பூம்புகார் பல்லவனேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:பூம்புகார்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பல்லவனேசுவரர்
தாயார்:சௌந்தர நாயகி
தல விருட்சம்:முல்லை
தீர்த்தம்:ஜானவி, சங்கம தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர்

திருப்பல்லவனீச்சுரம் - காவரிப்பூம்பட்டினம் - பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை சிவத்தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்

[தொகு]

இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 10-ஆவது சிவத்தலமாகும். காலவ முனிவர் வழிபட்ட தலம். பல்லவ மன்னன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு பல்லவனீச்சரம் என்று பெயர் வந்தது.[1] இத்தலத்தின் கிழக்கே மூன்று கி.மீ. தொலைவில் கடல் உள்ளது.

அமைப்பு

[தொகு]

கோயிலின் ராஜகோபுரத்திற்கு முன்பாக, வலது புறத்தில் குளம் உள்ளது. கருவறைக்கு முன்பாக நந்தி, பலி பீடம் ஆகியவவை உள்ளன. மூலவர் கருவறையின் இடது புறத்தில் அம்மன் சன்னதியும், பள்ளியறையும் உள்ளன.திருச்சுற்றில் பட்டினத்தார், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேசுவரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கையம்மன் ஆகியோர் உள்ளனர்.

சிறப்புகள்

[தொகு]

பட்டினத்தார், இயற்பகை நாயனார் ஆகியோர் அவதரித்த தலம்.

குடமுழுக்குகள்

[தொகு]

இக்கோயிலில் 20 ஆகஸ்டு 1958 (ஆவணி 4, விளம்பி), 5 ஏப்ரல் 1995 (பங்குனி 22, பவ), 17 மார்ச் 2008 (பங்குனி 4, சர்வஜித்து) ஆகிய நாள்களில் குடமுழுக்குகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 117

வெளி இணைப்புகள்

[தொகு]