உள்ளடக்கத்துக்குச் செல்

உறுதிபார்த்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிச்சய தாம்பூலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உறுதிபார்த்தல் என்பது இந்து சமய திருமணங்களில் நடத்தப்படும் முதல் சடங்காகும். வயதுக்கு வந்த ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் நடக்கப் போகும் திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார்களும், அவர்களின் உறவினர்களும் சம்மதம் தெரிவித்த பிறகு, அதனை உறுதி செய்ய தாம்பூலத்தினை (வெற்றிலை, பாக்கு, பூ போன்ற மங்கலப் பொருட்களை) மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு தாம்பூலத்தினை மாற்றி நிச்சயம் செய்து கொள்வதால் இந்த சடங்கிற்கு நிச்சய தாம்பூலம் என்ற பெயருமுண்டு. இந்த சடங்கிற்குப் பிறகு அந்தப் பெண் மணமகளாக ஊராருக்கு அறிவிக்கப்படுகிறார்.

வேறு பெயர்கள்

[தொகு]

இந்த உறுதிபார்த்தல் சடங்கிற்கு எண்ணற்ற பெயர்கள் வழக்கில் உள்ளன.

  • உறுதிபார்த்தல்
  • திரும‌ண உறுதிபார்த்தல்
  • உறுதிசெய்தல் (திருநெல்வேலி வட்டார வழக்கு)
  • நிச்சயதார்த்தம்
  • நிச்சய தாம்பூலம்
  • பரிசம் போடுதல்

முத‌ன்முதலாக மணப்பெண்ணும் மணமகனும் சந்திக்கும் நிகழ்வுக்குப் பிறகு, உறுதிபார்த்தல் என்னும் இச்சடங்கு நடைபெறும்.

சடங்கின் நிகழ்வுகள்

[தொகு]
  • இருவீட்டாரும் திருமணத்தி‌ற்கு சம்மதம் தெரிவித்து தட்டு (தாம்பூலம்) மாற்றிக்கொள்ளுதல்
    • தட்டில் வாழைப்பழம், மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, நவதானியங்களும் நாணயங்களும் கொண்ட மஞ்சள் தடவிய முடிப்பு, பூ, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள்
  • மணப்பெண்ணிற்கு மணமகன் வீட்டில் இருக்கும் பெரிய குடும்பத்தலைவி பூ,பொட்டு போன்றவற்றை வைத்தல்
  • மணப்பெண் வீட்டில் மணமகன் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் உணவு எடுத்துக்கொள்ளுதல்
  • மணமகன் வீட்டில் மணப்பெண் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் உணவு எடுத்துக்கொள்ளுதல்
  • மணமகன் வீட்டில் மணமகள் குத்துவிளக்கு ஏற்றுதல்
  • சந்தனம், குங்குமம், பூ போன்றவற்றை மனமகளுக்கு, மணமகன் வீட்டிலுள்ளோர் வைத்து விடுதல்

உசாத்துணை

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறுதிபார்த்தல்&oldid=4054547" இலிருந்து மீள்விக்கப்பட்டது