தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006
Appearance
(தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| |||||||||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||
|
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் அதன் கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் திமுக அரசு மே 13-ம் தேதி மு. கருணாநிதி அவர்கள் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.[1]
பின்புலம்
[தொகு]- ஆட்சியிலிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்த இத்தேர்தலில் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க இயலாத நிலை இருந்ததும் கருத்துக் கணிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக வாக்குச்சாவடியின் வெளியில் பெறப்பட்ட புள்ளியியல்கள் ஆய்வு முடிவுகள் இருந்ததும் பதினைந்து ஆண்டுகளில் மிகக் கூடுதலான வாக்குப்பதிவும் இந்தத் தேர்தலின் சிறப்பு அம்சங்களாகும்.
- திமுகவின் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் இடம் பெற்று இருந்தன. அதிமுகவின் ஜனநாயக மக்கள் கூட்டணியில் மதிமுக, விசிக போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன
- இத்தேர்தலில் விஜயகாந்த் அவர்களின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சி முதல் முறையாக போட்டியிட்டு. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.
- வாக்குப்பதிவிற்குப் பின்னர் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில் மொத்தம் 70.22 விழுக்காடு வாக்குகள் பதிவாயின என்று தெரிவித்தார்.
- இவற்றில் 51 விழுக்காடு ஆண்களின் ஓட்டுக்கள், 49 விழுக்காடு பெண்களுடையவை. வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக 18 வாக்குச்சாவடிகளில் மே 10, 2006 அன்று மறுவாக்குப்பதிவு நடந்தது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குகள் மே 11, 2006 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
- திமுக 96 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள போதும் அறுதிபெரும்பாண்மையை நிருபிக்க தனது கூட்டணியில் இருந்த காங்கிரஸ், பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம். முதலிய கட்சிகள் கூட்டணியில் இருந்து ஆதரவு அளித்ததால் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பாண்மையை பெற்று திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்கள் தமிழக முதலமைச்சராக ஐந்தாவது முறையாக 2006-மே13-ம் தேதி பொறுப்பேற்றார்.
கூட்டணி / கட்சிகள்
[தொகு]கட்சி | தொகுதி | |
---|---|---|
அதிமுக | 182 | |
மதிமுக | 35 | |
கோவில் மணி சின்னம் | விசிக | 9 |
இதேலீ | 2 | |
இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரஸ் | 2 | |
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு) | 1 | |
மூவேந்தர் முன்னேற்ற கழகம் | 1 | |
ஃபார்வேட் பிளாக் (சந்தானம்) | 1 | |
ஜதம | 1 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்[2] | ||||||
---|---|---|---|---|---|---|
கூட்டணி | கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் |
வென்ற தொகுதிகள் |
வைப்புத் தொகை இழப்பு |
வைப்புத் தொகை இழக்காத, வெற்றி பெற்ற தொகுதிகளில் வாக்கு சதவீதம் |
போட்டியிட்ட அனைத்து தொகுதிகளில் மொத்த வாக்கு சதவீதம் |
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி – 163 |
திராவிட முன்னேற்றக் கழகம் | 132 | 96 | 0 | 26.46 | 45.99 |
இந்திய தேசிய காங்கிரஸ் | 48 | 34 | 0 | 8.38 | 43.50 | |
பாட்டாளி மக்கள் கட்சி | 31 | 18 | 0 | 5.65 | 43.43 | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (CPI) | 10 | 6 | 0 | 1.61 | 40.35 | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (சிபிஎம்) | 13 | 9 | 0 | 2.65 | 42.65 | |
ஜனநாயக மக்கள் கூட்டணி-69 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 188 | 61 | 3 | 32.64 | 40.81 |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 35 | 6 | 0 | 5.98 | 37.70 | |
விடுதலைச் சிறுத்தைகள் | 9 | 2 | 0 | 1.29 | 36.09 | |
தனித்துப் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் |
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் | 232 | 1 | 223 | 8.38 | 8.45 |
சுயேச்சை | 1222 | 1 | 1217 | |||
பிற | 2 |
தகவல்: http://www.bbc.co.uk/tamil/news/story/2006/05/060511_tnelection.shtml
போட்டியிட்ட கட்சிகள்
[தொகு]- திராவிட முன்னேற்றக் கழகம்
- இந்திய தேசிய காங்கிரஸ்
- பாட்டாளி மக்கள் கட்சி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
- விடுதலைச் சிறுத்தைகள்
- புதிய தமிழகம்
- பார்வார்டு ப்ளாக்
- இந்திய தேசிய லீக்
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
- பாரதிய ஜனதா கட்சி
- தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்
- லோக் பரித்ராண் – en:Lok Paritran
இவற்றையும் பார்க்க: பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்
அரசியல் நிலவரம்
[தொகு]- ஜெயலலிதா வெற்றி பெற்றவுடன் முதலமைச்சர் பதவியை ஏற்க முடியாமல் அவர் ஊழல் வழக்கில் சிறை சென்றது மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலையை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.[சான்று தேவை]
- ஜெயலலிதாவின் கைது நடவடிக்கை எதிர்த்து தமிழ்நாட்டில் பல வன்முறை செயல்கள் நடந்தேறிய நிகழ்வில் தர்மபுரியில் ஒரு கல்லூரி மகளிர் பேருந்து எரிக்கப்பட்டது.
- அதே போல் அதிமுக கட்சியின் தலைமையும் அக்கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் சர்வதிகார புடைப்புடன் இருந்ததால். மக்களிடையே அதிக எதிர்ப்பு அலைகளை உருவாக்கி இருந்தது.
- மேலும் கடந்த ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் 2001 முதல் 2004 வரையிலான ஆட்சியில் மிகவும் கடுமையாகவும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாத திட்டங்களை அறிவித்த போதிலும் கொடுங்கோள் ஆட்சி முறை என்று மக்களிடமும் எதிர்கட்சி தலைவர்களிடமும் பலமான எதிர்ப்பு நிலையில் இருந்ததால் 2004 நாடாளமன்றத் தேர்தலில் தனக்கு முழுமையான தோல்வி அடைந்ததால். மக்களிடையே மீண்டும் பெரும் செல்வாக்கை உருவாக்கி கொள்ள 2005 முதல் 2006 வரையிலான கடைசி இரண்டு வருட ஆட்சி காலத்தில் மக்களுக்கு பல நன்மையான திட்டங்களை செய்து இந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 69 இடங்களை கைப்பற்றினார். பலமான எதிர்கட்சியாகச் செயல்பட்டார்.
- மேலும் ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் அதிகார மீறல் செயல்களான பெரும் அரசியல் தலைவர்களான எதிர்கட்சி திமுக தலைவர் கருணாநிதி அவர்களை மேம்பாலம் கட்டிய ஊழல் வழக்கில் கைது செய்தது. மதிமுக தலைவர் வைகோ அவர்களை விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதால் அவரை பொடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் தொண்டர்களிடமும், வாக்காளர்களிடமும் பெரும் எதிர்ப்பு நிலையை ஏற்படுத்தியது.
- மிசா, பொடா, தடா போன்ற மிகவும் கடுமையான சட்டங்களால் அன்றைய மத்திய பாஜக பிரதமர் வாஜ்பாய் அரசையும் அதனுடன் தமிழக கூட்டணி கட்சியான திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களையும் எதிர்த்து ஜெயலலிதா வழி நடத்தி சென்றார்.
- மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல்
- லாட்டரி டிக்கெட் தடை செய்யப்பட்டது
- ஆழிப் பேரலை, அடைமழை-வெள்ளப்பெருக்கு நிவாரண பிரச்சினைகள்
- குடிநீர் பிரச்சினை
- சூழல் மாசுறுதல்
- ஏழ்மை நிவாராண மத்திய வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டு தேவைகள் நிறைவேற்றப்படவில்லை
- மத்திய மாநில அரசு உறவு பிரச்சனைகள்
மனித உரிமை பிரச்சினைகள்
- வீரப்பன் கொலை
- காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் எழுந்த சங்கரராமன் கொலை வழக்கை வைத்து அதன் பிடாதிபதி ஜெயந்திரர் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைவாசம் செய்தது.
- சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்
- ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற உயிரினங்களை தெய்வ வழிபாடு என்ற பெயரில் பலியிட கூடாது என்று உயிரின பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது.
- உழவர் பிரச்சினைகள்
- அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்
- மதம் மாறும் தடை சட்டம்
- தனியார் மையமாக இருந்த சில மதுபான விற்பனை கடைகள் அனைத்தும் டாஸ்மாக் என்று ஒரே பெயராக மாற்றி அரசுடமையாக்கள்
- அனைத்து அரசு அறநிலை கட்டுபாட்டில் இர��க்கும் இந்து கோயில்களில் மதிய உணவு முறை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
- இந்த தேர்தல் சலுகையாக திமுக அறிவித்த இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி மற்றும் எரிவாயு உடனான அடுப்பு வழங்கும் திட்டங்கள்
- விவசாயிகள் செலுத்த வேண்டிய வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
- கல்வி பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் இலவச மிதிவண்டி வழங்கு திட்டம் போன்றவை திமுகவின் திட்டங்கள் போது மக்களை வெகுவாக கவர்ந்தது.
- சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான சுமங்கலி கம்பிவழி தொலைக்காட்சி நிறுவனம் (Sumangali Cable Vision) அரசுடைமையாக்கம்
- தமிழ், தமிழ்வழிக் கல்வி
- திமுக-காங்கிரசு கூட்டணியால் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் /தமீழீழமக்களுக்கும் ஆதரவுக்கு எதிர்ப்பு
- இந்துவாதம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2006 சட்டமன்ற தேர்தல்: தி.மு.கவின் முதல் 'மைனாரிட்டி' அரசு அமைந்தது எப்படி?
- ↑ "2006 to the Legislative Assembly of TAMILNADU" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழக சட்டமன்ற தேர்தல், 2006 குறித்த தகவல்கள் - இந்திய தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2006-05-12 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்நாடு தொகுதி வரைபடம் பரணிடப்பட்டது 2006-05-12 at the வந்தவழி இயந்திரம், தொகுதிப் பெயர்களுடன்
- தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் - பிபிசி - தமிழ்
- வாக்குப்பதிவு: படங்கள் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- http://www.yourmla.com/ Tamilnadu Elections 2006 Complete Analysis
- தேர்தல் கூட்டு வலைப்பதிவு - தேர்தல் 2006
- 2006 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம்