சங்கரன்கோயில் வட்டம்
Appearance
சங்கரன்கோவில் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிதாக நிறுவப்பட்ட தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் சங்கரன்கோவிலில் உள்ளது. இது தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய வருவாய் வட்டம் ஆகும்.
இந்த வட்டத்தின் கீழ் கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில், வீரசிகாமணி, சேர்ந்தமங்கலம், குருக்கள்பட்டி, என 5 குறுவட்டங்களும், 44 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]
இவ்வட்டத்தில் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]
- மக்கள்தொகை = 350,144
- ஆண்கள் = 172,965
- பெண்கள் = 177,179
- குடும்பங்கள் = 95,446
- கிராமப்புற மக்கள்தொகை % = 81.3%
- எழுத்தறிவு = 75.28%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதம் உள்ளனர்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 35405
- குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 93,160
மற்றும் 518
சமயம்
- இந்துக்கள் = 92.14%
- இசுலாமியர்கள் = 2.18%
- கிறித்தவர்கள் = 5.58%
- பிறர்= 0.10%
இவற்றையும் பார்க்கவும்
- சங்கரன்கோவில்
- சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
- சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
- சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்