உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிபுரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

காஞ்சிபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1]இந்த வட்டத்தின் தலைமையகமாக காஞ்சிபுரம் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், திருப்புட்குழி, பரந்தூர், கோவிந்தவாடி, சிட்டியம்பாக்கம், சிறுகாவேரிப்பாக்கம் என 6 உள்வட்டங்களும், 132 வருவாய் கிராமங்கள் உள்ளன. [2]

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 497,711 ஆகும். அதில் 248,707 ஆண்களும், 249,004 பெண்களும் உள்ளனர். 124,877 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 44.7% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 80.27% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,001 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 52211 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 104,853 மற்றும் 5,083 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.23%, இசுலாமியர்கள் 2.98%, கிறித்தவர்கள் 1.45% மற்றும் பிறர் 0.24% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சிபுரம்_வட்டம்&oldid=2727611" இலிருந்து மீள்விக்கப்பட்டது